வரலாற்று நாயகன் பிடல் காஸ்ட்ரோ

நீதிமன்றத்தில் ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’ எனும் புகழ்பெற்ற பிடல் காஸ்ட்ரோவின் ஆவேசமான உரை நீதிபதிகளின் மனதைக் கரைய வைத்தது. இதனால் 1955-ஆம் ஆண்டு அவர் விடுதலை செய்யப்பட்டார். இதன்பிறகுதான் பிடல் காஸ்ட்ரோ வின் வாழ்க்கையில் பல அதிரடித் திருப்பங்கள் ஏற்பட்டன. மெக்சிகோ நாட்டில் அடைக்கலம் புகுந்த அவர் தென் அமெரிக்காவின் புரட்சியாளர் சேகுவேராவுடன் இணைந்து புரட்சி குழு ஒன்றை உருவாக்கினார். 1956-இல் பாய்மரப் கப்பல் மூலம் நாடுதிரும்பினார். அவருடைய குழுவினர் திட்டமிட்ட படி கியூபாவுக்குள் ஒரே இடத்தில் கப்பல்களை கரைக்குக் கொண்டு சென்று தரையிறங்க முடியவில்லை. வெவ்வேறு திசைகளில் சென்று விட்டனர். எனினும், கியூபாவின் கிழக்குப் பகுதியான சியர்ரா மாஸ்ட்ரா மலைப்பகுதியில் பிடல் காஸ்ட்ரோவின் புரட்சிக் குழுவிற்கு அமோக ஆதரவு கிடைத்தது. 3 ஆண்டுகள் பாடிஸ்டாவின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக காஸ்ட்ரோவின் கொரில்லாப் படை கள் போராடின. அவருடைய புரட்சிப் படைகள் தலைநகர் ஹவானாவை 1959 ஜனவரி 8-இல் கைப்பற்றின. அதைத்தொடர்ந்து பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்பு ஜனாதிபதியானார்.

நாடு ஜனநாயகப் பாதைக்குத் திரும்பும் என காஸ்ட்ரோ அறிவித்த தால் அமெரிக்கா முதலில் அவருக்கு ஆதரவு தெரிவித்தது. ஆனால் அடுத்த சில மாதங்களில் கடுமையான பொரு ளாதார சீர்திருத்தத்தை காஸ்ட்ரோ கியூபாவில் மேற்கொண்டார். கியூபா வின் வளர்ச்சியில் எரிச்சலடைந்த அமெரிக்க ஏகாதிபத்தியம் கியூபா வைக் கபளீகரம் செய்ய தொடர்ந்து முயற்சி செய்தது. காஸ்ட்ரோவைக்கொல்ல சதித் திட்டங்கள் அரங்கேறின. கியூபாவில் இருந்து வெளியேறி நாடு கடந்த நிலை யில் இருந்தவர்கள் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.வின் உதவியு டன் வளைகுடாவை ஆக்கிரமித்து நெருக்கடி கொடுத்தனர். அதை காஸ்ட்ரோ முறியடித்தார். சோவியத் ரஷ்யாவின் ஆதர வைப் பெற்றார். அமெரிக்காவுக்குச் சவாலாகத் திகழ்ந்தார். ஆப்பிரிக்கா வில் விடுதலைக்காகப் போராடிய புரட்சிக் குழுக்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டார். ஆயினும் பிடல் காஸ்ட்ரோவை பதவியில் இருந்து வெளியேற்ற அமெரிக்கா துடித்தது. முதல் நடவடிக்கையாக கியூபாவிடம் இருந்து சர்க்கரை கொள்முதலை நிறுத்திக் கொண்டது. பதிலுக்கு காஸ்ட்ரோ அமெரிக்கர்களின் ஒரு பில்லியன் சொத்துகளை தேசவுடமை யாக்கினார். இதையடுத்து கியூபா மீது அமெரிக்கா வர்த்தக தடைகளை விதித்தது.

பிடல் காஸ்ட்ரோவைத் தீர்த்துக் கட்டுவதற்காக 638 சதித்திட்டங்களை அமெரிக்கா தீட்டியது அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. அமெரிக்காவின் ஒவ் வொரு சதி முயற்சியையும் அவர் துணிச்சலாக முறியடித்தார். அத்துடன் பொருளாதாரத் தடைகளையும் கியூப மக்களின் ஒருமித்த ஆதரவால் வெற்றி கரமாக சமாளித்தார். தனது ஆட்சிக் காலத்தில் 11 அமெரிக்க ஜனாதிபதி களுக்கு அவர் சுமார் 50 ஆண்டுகள் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தார். வெளிநாட்டு முதலாளிகளையும், தனியார் நிறுவனங்களையும் கியூபா வில் தொழில் தொடங்க அனுமதித்தது கியூபா. இந்நிலையில் கியூபாவிடம் இருந்து விலகி நின்ற தென் அமெ ரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்களுடைய உறவை மீண்டும் புதுப்பித்துக் கொண்டன. 1998-ஆம் ஆண்டு போப் ஆண்டவர் இரண்டாம் ஜான்பால் கியூபாவுக்கு பயணம் செய்தார். கியூபாவிற்குச் சுற்றுலா வரு வோரின் வெளிநாட்டு எண்ணிக்கை அதிகமாகி அந்நாட்டின் பொருளா தாரம் வலுப்பெறத் தொடங்கியது.

2006-இல் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 2008இல் அதிகாரப் பொறுப்பிலிருந்து விலகினார். 2016 நவம்பர் 25இல் காலமானார். அவரது மரணத்தால் கியூபா சோகத்தில் மூழ்கியது. ‘சோஷலிசம் அல்லது மரணம்’ எனும் காஸ்ட்ரோவின் முழக்கம் என்றென்றும் உத்வேகமூட்டும்.