வாழ விடு……. War ஐ விடு…… (பகுதி 1)

கொலைகளும் இரத்தம்; சதையுமாக இரண்டாம் உலகப் போருக்குப் பின்னராக வாழ்வை தொடரும் மக்களாக வாழப் பழகிக் கொண்ட பாலஸ்தீன மக்களை முழுவதுமாக துடைத்தெறிய புறப்பட்ட இஸ்ரேலுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்ற போர்கள் இன்று வரை ஓய்ந்தபாடியில்லை… இனியும் ஓயப் போவதும் இல்லை.

அன்று இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் குடியேறி (சிறப்பாக ஜேர்மனியின் ஹிட்டலரின் கொலைகளுக்கு பின்னர்) தமக்கான நாட்டை இன்னொரு மக்கள் வாழும் பிரதேசத்தில் வாழ அப்போது பிரிதானியாவின் ஆளுகையிற்கு உட்பட்டிருந்த பாலஸ்தீனத்தைச் சுட்டிக் காட்டி தான் வழமையாக செய்துவரும் பிரிதாளும் கொள்கையை பிரிந்தானியா மேற் கொண்டு உருவான தேசம் தான் இஸ்ரேல்.

ஹிட்லரால் வகை தொகையின்றி கொலை செய்து விரட்டப்பட்டவர்களுக்கு வழி காட்டுகின்றேன் என்று இன்று வரை தொடர்ந்து அடிபட்டுக் கொண்டிருக்கும் மக்கள் குழாத்தை உருவாக்கிய பெருமை பிரித்தானியாவையே சாரும்.

இருக்க வந்த இடத்தில் இதுவரை இருந்தவர்களை அடித்து விரட்டி முழுவதுமாக இல்லாமல் செய்ய முற்படும் வரலாற்றை உலகமதான் மறுக்க முடியுமா…?

1948 இல் இருந்து இன்று வரையிலான பாலஸ்தீனம் இஸ்ரேல் என்றான பொது நிலப்பரப்பு எவ்வாறு ஒரு தரப்பின் முழுமையான ஆதிக்கத்திற்கு ஆக்கிரமிப்பிற்கும் இன்னொரு தரப்பின் இல்லாமையிற்கும் உள்ளாகி இருக்கின்றது என்பதை மனித நேயம் மிக்க மனிதர்கள் யாவரும் இப்பதிவுடன் இணைக்கும் வரைபடம் (1948 இல் பசுமையாக இருந்த பாலஸ்தீனம் இன்று மிகக் குறிய பிரதேசத்தில் மட்டும் பசுமையை உடையதாக வெளிறப்பண்ணப்பட்டு இருக்கின்றது இஸ்ரேலாலும் அமெரிக்கா பிரித்தானிய ஐரோப்பிய கூட்டணியால்) மூலம் அறிந்து கொள்ள முடியும்.

1917 இற்கு முன்பு ஒட்டமன் பேரசு காலத்தில் நாம் வாழ்ந்த பிரதேசம் இது என்றாக உரிமை கொண்டாட முடியுமா…. 1948 இற்கு பின்னர் புதிதாக உருவாக்க முற்படும் இஸ்ரேல் தேசமாக பழம் பெருமை பேசுவதை ஏற்றுக் கொள்ளலாமா…? இந்த ஆதிக்க சக்திகளும் அதன் தாங்கும் சக்திகளும்.
ஒரு வாத்திற்கு சோழப் பேரசு பர்மா வரைக்கும்… பொலநறுவ வரைக்கும்…. கம்போடியாவரைக்கும்…. ஆண்டோம் என்று இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் அந்த பிரதேசத்தை நாம் இன்று உரிமை கோரியுத்தம் புரிவதை நியாங்களாக நாம் கொள்ள முடியுமா…?

தற்போதைய யதார்த்தம் தமிழ் நாட்டிற்குள்ளும் யாழ்ப்பாணத்திற்குள்ளும் வன்னியிற்குள் கிழக்கின் சில பகுதிகளுக்கும் முடங்கி இணைந்த வடக்கு கிழக்கு மகாண சபை நிர்வாகத்தை தாருங்கள் என்றதாகவும்…. தமிழ்நாடு என்ற பெயரிட்ட மாநில சுயாட்சி அளவிலான ஆட்சிப் பகிர்வு என்றாக உலக ஒழுங்கு மாறிவிட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

18ம், 19 ம் நூற்றாண்டுகளில் ஸ்பெயினிலும், போத்துக்கல்லிலும் முகாலயர்களை அடித்துவிரட்டி கத்தோலிக்கம் இன்று கோலோச்சுவதை மறுதலிக்க முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதை ஏற்கும் சூழல் ஏற்பட்டிருக்கின்றதோ அவ்வாறு தான் பாலஸ்தீனம் என்ற நாட்டை நாம் பார்த்தாக வேண்டும்….?

நாம் ஈழத்தவர் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இருப்பதே சரியான நிலைப்பாடாக இருக்க முடியும். ஒடுக்கப்படும் தேசிய இனம் என்பதற்கும் அப்பால் எம் தேத்தின் விடுதலைக்காக போராட புறப்பட்ட ஆரம்ப காலங்களில் எமக்கு பல வகையிலும் ஆதரவு கொடுத்தவர்கள் அவர்கள், அவர்களது போராட்ட அமைப்புகள்.

1980 பிற்கூறு 1990 முற்கூறுகளில் எமது போராட்டத்தை எவ்வாறு அழிக்கலாம் என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதராலயத்தில் இஸ்ரேலுக்கான விசேட பகுதி அமைத்துக் கொடுத்து இஸ்ரேலின் மொசாட்டின்(Mosad) ஆலோசனைப்படியே இலங்கை அரசு சிறப்பாக ஜேஆர் றெஜிமென்ர் செயற்பட்டனர்.

அவர்களின் ஆலோசனைப்படியே தமிழ் பேசும் தமிழர் தரப்பிற்கும் முஸ்லீம்களுக்கும் இடையே பகை முரண்பாடுகளை திட்டமிட்டு ஏற்படுத்தல் எஸ்ரிஎவ்(STF) அமைத்தல் பூசா திறந்த சிறைச்சாலையில் இளைஞர்களை அடைத்தல் என்பன உருவாக்கப்பட்டன..

இலங்கை இராணுவத்திற்கும் தமிழர் தரப்பில் ஏகபோகமாக செயற்பட முற்பட்டவர்களுக்கு ஏககாலத்தில் இஸ்ரேல் பயிற்சியும் வழங்கியது. இதனை தமிழர் தரப்பு பத்திரிகையாளர் சந்திப்பிலும் உறுதிப்படுத்தியிருந்தனர்.

இறுதியில் தமிழ் பேசும் தரப்பு தோற்றும் போனது காட்டியும் கொடுக்கப்பட்டோம் பொது மக்களும் அதிகம் கொல்லப்பட்டனர்.
அடுத்த பதிவில் பாலஸ்தீனம் பற்றியும் அதனைத் தொடர்ந்த இஸ்ரேல் பற்றியும் தற்போது உருவாகியிருக்கும் யுத்தம் பற்றியும் பேசுவோம்