வாழ விடு War விடு (பகுதி 4)

இதனை எற்றுக் கொண்டு இரு தேசம் என்றாக இஸ்ரேல் பலஸ்தீனம் உருவாவதை ஏற்றுக் கொண்டார் யாசீர் அரபாத். இதன் தொடர்ச்சியாக சமாதானத்திற்கான நோபல் பரிசு(மூவரில் ஒருவராக) அரபாத்திற்கு 1994 இல் வழங்கப்பட்டது.

ஆனால் இன்று……

மருத்துவமனைதான் யுத்தம் நடைபெறும் தேசம் ஒன்றின் மக்களின் இறுதிப் புகலிடம். காயப்பட்டவர்கள் மரணத்துடன் போராடுபவர்கள் என்று எல்லோரும் தேடிச் செல்லும் இறுதி இடம்.

ஒரு உயிரினம் வாழ்வதற்குரிய எல்லா உரிமைகளும் உள்ளதாகவே நாகரீகம் அடைந்த உலகம் இன்று வந்து சேர்திருக்கின்றது என்பதை பொய்யாக்கும் தாக்குதலாக இதனைப் பார்க்க முடிகின்றது.

மருத்துவமனைகள் மனித நேயம் மட்டுமே வாழும் இடமாக அது விளங்குவது அதன் அடையாளமாகவும் இருக்கின்றது.

பல தனியார் மயமாக்கப்பட்ட மருத்துவமனைகளிலும் இது சிறிய அளவில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றது என்ற வாதங்களை மறுக்க முடியாவிட்டாலும் ஒரு அரசின் மருத்துவமனைகள் உயிர்களை காப்பாற்றும் சன்னிதானங்களாக சமான்ய மக்களால் பார்க்கப்படுகின்றது.

இங்கு போரினால் காயப்பட்டவர்கள் வரும் போது அவர்களை மருத்துவத் துறை ஊழியர்கள் இவர் யார் எந்த அணியை சேர்ந்தவர் இவர் தீவிரவாதியா அல்லது மக்கள் சேவகனா என்று பார்ப்பதே இல்லை.

அவர்கள் இந்த மனித உயிரை காப்பாற்ற பாதுகாக்க தமது கடமைகளை செய்வதாக நகருவதே இன்னும் இந்த உலகு மனிதர்களுக்காக வாழுகின்றது என்பதற்கு அடையாளமாக பார்க்கப்படுகின்றது.

அப்படியான ஒரு இடத்தில் பாலஸ்தீன மக்களின் வாழ்விடங்களின் ஒன்றான காசாவில் மக்கள் சிகிச்சை பெறும் இடத்தில் குண்டுகளை பொழிந்து தள்ளி இருக்கின்றார்கள்…..

பல நூறு உயிர்கள் சம்பவ இடத்தில் மரணமடைய காயத்துடன் எற்கனவே சிகிச்சை பெற்றுக் கொண்டு இருந்தவர்கள் மேலும் காயப்பட்டு மரணத்துடன் போராடிக் கொண்டும் இருக்கின்றனர்.

அவர்களுக்கு சேவை செய்யும் மருத்துவ ஊழியர்கள் சிலருக்கும் இதே கதிகள் ஏற்பட்டிருககின்றன என்ற செய்திகளே வந்த கொண்டு இருக்கின்றன.

சர்வதேசத்தில் பணப் பலம், ஆயுதப் பலம் உள்ள G 7, G 20 என்பவர்கள் இங்கு இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்துக் கூறுவதன் மூலம் அரசியல் அதிகாரம் செலுத்துகின்றனர்.

மரணங்கள் சேதங்களை குறைத்து மதிப்பீடு செய்வதன் மூலம் இந்த கொலை வெறித் தாக்குதலை ஏதும் இல்லை என்றாக்க முயலுகின்றனர்.
இதில் இருந்தே தெரிகின்றது இந்த மருத்துவமனை மீதான தாக்குதல் இந்த G 7, G 20 என்பனவற்றின் ஆதரவுகளைப் பெற்றவரே நேரடியாக சொன்னால் இஸ்ரேல் அரசே மேற்கொணடிருப்பதற்கு அதிக சாத்தியம் இருப்பதாகவே.

கூடவே எங்கு ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதலை நடாத்தினார்களோ அந்த இஸ்ரேலுக்கு உலகத்தின் G 7 கள் அதிகம் அடுத்தடுத்த நாட்களே தமது போக்குவரத்துக்களை அதுவும் உலகின் நெறிப்படுத்தாளனாக தன்னைத் தன்னை காட்டிக் கொள்ளும் அமெரிக்காவின் தலைவரே சென்று இருக்கின்றார் என்றால் இஸரேல் தீவிரவாதிகளின் போர் அச்சுறத்தலுக்குள் உள்ளாகி இருக்கின்றது என்பது எவ்வளவு உண்மைக்கு வெகு தூரத்தில் உள்ளதை காட்டுகின்றது.

காசாவில் தாம் வாழும் பிரதேசத்தில் இருந்த இஸ்ரேலும் எல்லையைக் கொண்டிருக்கும் ‘….வடக்கில் இருந்து தெற்கிற்கு போ….’ என்று கட்டளை இட்டுவிட்டு எங்கு போகச் சொன்னார்களோ அந்தப் பகுதியில் குண்டுகளை பொழிந்தும் தள்ளுகின்றார்கள் இஸ்ரேலிய அதிகார ஆயுத வர்க்கம்.

முதலில் ‘….அங்கு போ இங்கு போ…’ என்று சொல்வதற்கு எந்த உரிமை உள்ளது…? இன்னொரு நாட்டிற்கு.

தாம் வாழும் பிறந்து, வளர்ந்து, ஆடிப்பாடி, அனுபவித்து, வாழ்ந்த இடத்தை விட்டு மாடு, ஆடு களின் பட்டியை மாற்றி பட்டி அமைப்பது போல் செய்வது எந்த வகையில் நியாயம் ஆகும்.

பூனை கூட தான் வழமையாக படுத்துறங்கும் அடுப்பு மேடையைத் தவிர்த்து பஞ்சு மெத்தை போட்ட கடகத்திற்குள் படுக்க விரும்பாது.
இந்நிலையில் ஆறறிவுள்ள மனிதர்களை கால நடை மந்தைகள் போல் நடாத்துவது அவர்களை திரட்சி ஆக்கிய பின்பு அவர்கள் செறிவிற்குள் குண்டு வீசுவது எவ்வாறு மனிதாபிமான செயற்பாடு ஆகும்.

இத்தனையும் அந்த G 7 நாட்டுத் தலைவர்கள் சியோனிச் நாட்டின் தலைவரை சந்திக்கும் போதே நடைபெற்றுக் கொண்டும் இருக்கின்றது.

பலமானவன் சொல்வதுதான் வேத வாக்கு….. உண்மை வாக்கு…. என்பது போன்று அறிக்கைகள் வேறு வந்தவண்ணம் உள்ளன.

மனித நேயத்தையும். சகோரத்துவத்தையும். குடும்ப உறவுகளையும் தூக்கிபிடிக்கும் இந்தியாவில் இருந்து இதற்கு தலைவர் மட்டத்து ஆதரவுகள் எல்லோருக்கும் வெஞ்சினத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

மணிப்பூரில் நிர்வாண ஊர்வலம் நடந்ததை காணமல் இருந்தவர்கள் இதனைத் தவிர வேறு எதனை செய்வார்கள்….?

2009 முள்ளிவாய்கால் யுத்தத்த காலத்தில் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் கொத்துக் குண்டு போட்டுக் கொன்ற அவலங்களும் இதனை ஒத்ததே.

பல காரணங்களை கூறினாலும் இந்திய இராணுவ காலத்தில் யாழ் வைத்தியசாலை மீதான தாக்குதலையும் இவ்வாறுதான் பார்க்க முடிகின்றது.

காயம்பட்ட தீவிரவாதிகளும், தாக்குதலை நடத்தும் தீவிரவாதிகளும் இது போன்ற மருத்துவமனை அகதிகள் முகாங்கள் வழிபாட்டுத் தலங்களை தமது தாக்குதல் நடாத்துவதற்கான கேடயமாக பாவிப்பது எற்புடையது இல்லை என்றாலும்….

அரசு என்று வரும் போது தமது நாட்டுப் பிரஜைகளை, மக்களை காப்பாற்றுதல் என்பதே அவர்கள் தேடும் தீவிரவாதிகளை எதிர் கொள்வதை விட முதன்மையானது.

இங்கு தீவிரவாதிகள் மீதான தாக்குதல் என்று கூறிக் கொண்டு மக்களின் கொலைகளை அவர்கள் மீதான தாக்குதல்களை எந்த வகையிலும் எற்க முடியாதவையாகவே பார்க முடியும்.

இந்த மருத்துவமனை மீதான தாக்குதலும் மக்கள் குடியிருப்பு மீதான தாக்குதலும் மக்கள் பாதுகாப்பிற்காக நகர்ந்து செறிந்து வாழும் பிரதேசங்கள் மீதான தாக்குதலும் எந்தகையிலும் எற்புடையது அல்ல என்பதை நாம் எம் கோடியிற்குள் நடந்தை போல் நடக்கும் போது….

ஏன் இனிவரும் காலங்களில் எமக்கும் நடைபெறும் போது மனித குலம் குரல் கொடுத்து தடுத்து நிறுத்தவதற்கு இன்றே நாமும் குரல் கொடுத்தாக வேண்டும்.

தமது அரசாக இருந்தாலும் இஸ்ரேலிய மக்கள் தமது நாட்டிற்குள் அரசின் பிழையான செயற்பாடுகளை கண்டித்து அண்மைய நாட்களிலும் வீதிக்கு இறங்கிப் போராடும் அந்த மனிதாபிமான இஸ்ரேலியர்களை எமக்கும் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளலாம்.

இந்த ஜி 7 நாடுகளில் கொல்லப்படும் பலஸ்தின மக்களுக்கு ஆதரவாக ஜி7 நாடுகளில் வாழும் அதிக மக்களும் குரல் கொடுத்து பொராட்டத்தில் ஈடுபடுதல் பிரித்தானியா, கனடா, அமெரிக்கா, அவுஸ்த்திரேலியா, பிரான்ஸ் என்று எங்கும் நடைபெறுவது அநியாயத்தை யார் செய்கின்றார்கள் என்பதை அரசுகள் அல்ல மக்கள் உணர்ந்துள்ளதாக உணர முடிகின்றது.

இலங்கையராகிய நாமும் இந்தியர்களும் இதில் இணைந்தாக வேண்டும்.
இதற்கு அப்பால் ஒடுக்கப்படும் ஒரு சிறுபான்மை தேசிய இனமாக ஈழத்து தமிழ் பேசும் மக்கள் தங்கள் கரங்களில் சண்முகராசா விடயத்துடன் இதனையும் கையில் எடுத்தாக வேண்டும்.