எதிர்கால பேரழிவுகளை பாக். வெள்ளம் நினைவூட்டுகிறது

2022 இல், சில பகுதிகள் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டதாகவும் ஏனையவை கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் 2022ஆம் ஆண்டுக்கான ஆண்டு காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

“பாகிஸ்தானில், பருவமழையால் ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் மண்சரிவைத் தொடர்ந்து ஓகஸ்ட் மாதம் தேசிய அவசர கால நிலை அறிவிக்கப்பட்டது, நெருக்கடியின் உச்சத்தில் இருந்த நாட்டின் மூன்றில் ஒரு பங்கு நீருக்கடியில் காணப்பட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர்” என்று அறிக்கை தெரிவிக்கிறது.

“மாறும் காலநிலையின் விளைவுகளைக் கையாள்வதில் நாட்டை ஆதரிப்பதற்கான பல்வேறு விருப்பங்களை பரிசீலிக்க, காலநிலை தாங்கும் பாகிஸ்தான் என்ற சர்வதேச மாநாட்டை  ஜனவரி 9 ஆம் திகதி ஜெனிவாவில் ஐ.நா நடத்தியதாக தி டான் தெரிவித்துள்ளது.

இது புவி வெப்பமடைதலை பூமிக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக ஐ.நா அறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது மற்றும் கார்பன் அவசரநிலையைக் கட்டுப்படுத்த மனிதகுலம் கார்பன் உமிழ்வைக் குறைக்கத் தவறிவிட்டது என்று சுட்டிக்காட்டுகிறது.

புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைப்பது மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட காலநிலை மாற்றங்கள், வரட்சி, வெள்ளம் மற்றும் தீவிர வானிலை ஆகியவற்றைக் கையாள்வதில் வளரும் நாடுகளுக்கு ஆதரவளிப்பதற்கான அவசரத் தேவை குறித்து ஐ.நா அறிக்கை குறிப்பிடுகிறது.

“ஐ.நா அறிக்கையானது உலக வானிலை அமைப்பின் அண்மைய ஆய்வையும் குறிக்கிறது, 2060 களில் அடிக்கடி வெப்ப அலைகள் ஏற்படும் என்பதை இது காட்டுகிறது” என்று தி டான் தெரிவித்துள்ளது.

புவி வெப்பமயமாதல் மனித நடவடிக்கைகளால் ஏற்படுகிறது என்றும் காலநிலை மாற்றம் கிரகத்தின் எதிர்காலத்துக்கு ஒரு தீவிரமான கவலை என்று உலக வானிலை அமைப்பு, ஐ.நா.வின் வானிலை நிறுவனத்தின் தகவல்களுக்கு அமைய  ஐ.நா அறிக்கை கூறுகிறது.

பாகிஸ்தானின் வரலாற்றில் மிகவும் பேரழிவு தரும் வெள்ளங்களில் ஒன்றான, நாட்டின் மிக முக்கியமான சவால்களில் காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் அடங்கும் என்று, கட்டுரையாளரும், தெற்கு-தெற்கு ஆராய்ச்சி முன்முயற்சியின் கல்வியாளருமான அர்ஷியா மாலிக் எழுதுகிறார்.

காலநிலை மாற்றம், வெள்ளம், வெப்ப அலைகள், வரட்சி, பயிர் இழப்புகள் மற்றும் நோய்கள் ஆகியவற்றின் தாக்கங்கள் பாகிஸ்தானுக்கு உள்ள மிக முக்கியமான சவால்களில் அடங்கும், அதன் அதிர்வெண் கடந்த இரண்டு தசாப்தங்களாக வேகமாக அதிகரித்துள்ளது.

பாக்கிஸ்தானுக்கு கடுமையான சுற்றுச்சூழல் பிரச்சினைகள் உள்ளன மற்றும் 2013 இல் உலக வங்கி அறிக்கை தீவிர கவலைகளை வெளிப்படுத்தியது.

பாகிஸ்தானின் முக்கிய சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் காற்று மாசுபாடு, குடிநீர் போதுமான விநியோகம், ஒலி மாசுபாடு மற்றும் மாசுபாட்டின் காரணமாக நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களின் சுகாதார சீர்கேடு ஆகியவை அடங்கும் என்று  தெற்கு-தெற்கு ஆராய்ச்சி முன்முயற்சி தெரிவித்துள்ளது.

இந்த சுற்றுச்சூழல் கவலைகள் பாகிஸ்தானிய குடிமக்களுக்கு தீங்கு விளைவிப்பது மட்டுமல்லாமல், நாட்டின் பொருளாதாரத்தையும் கடுமையாக அச்சுறுத்துகின்றன என்று மாலிக் கூறியுள்ளார்.