பள்ளிக்கூடம்

இதற்கு 200 வருடங்களுக்கு முன்னரேயே இலங்கையில் போத்துக்கேயர் ஆட்சிக் காலத்தில் அவர்கள் நடத்திய பள்ளிக்கூடங்களின் பதிவுகளும் வரைபடங்களும் இதனால் வெளிப்படுத்தப்பட்டன.

அப்போ போத்துக்கேயருக்கும் முன்னால் பள்ளிக்கூடங்களே இருந்திருக்கவில்லையா? எஅம்து பாரம்பரிய மரபில் தனியே திண்ணைப் பள்ளிக்கூடங்களும், குருகுலங்களும் மட்டுமா இருந்தன?

எமது மரபிலும் இவர்கள் வருகைக்கு முன்னாகவே பள்ளிக்கூடங்கள் இருந்தன. மாணவர்கள் தமது வீட்டில் இருந்து ஒவ்வொரு நாளும் அங்கு சென்று கல்வி கற்று வந்தார்கள்.

இது 7ம் நூற்றாண்டில் சம்பந்தரின் சமகாலத்தில் வாழ்ந்த பரஞ்சோதி என்னும் சிறுத்தொண்டர் வரலாற்றை 12ம் நூற்றாண்டில் பெரியபுராணத்தில் பாடிய சேக்கிழார் குறிப்பிடுகின்றார்.

“நன்று காண்பம் என நயந்து நம்மைக் காக்க வருமணியைச்
சென்று பள்ளியினிற் கொண்டுவாருமென்றார் திருவனையார்”
என்று பரஞ்சோதியின் மனைவியார் மகன் சீராளனை பள்ளியினில் சென்று அழைத்ஹ்டுவரும்படி கணவனிடம் கூறுவதையும்,

”புதல்வன் ஓத அணைந்த பள்ளியினில் உடன் கொண்டு எய்தக் கடிதகன்றார்”

என்று பரஞ்சோதி பள்ளியினில் படிப்பதற்காகச் சென்ற தம் புதல்வனைக் கூட்டி வருவதற்கு விரைவாகச் சென்றதையும்,

பள்ளியினில் சென்று எய்துதலும் பாத சதங்கை மணி ஒலிப்பப்
பிள்ளை ஓடி வந்து எதிரே தழுவ எடுத்து”

என்று பள்ளிக்கு பரஞ்சீதியார் சென்றதும் அவரைக் கண்ட மகன் தனது பாதச் சதங்கை ஒலிக்க ஓடி வந்து தழுவியதையும்

12ம் நூற்றாண்டில் எழுந்த பெரியபுராணம் நன்கு ஆவணப்படுத்தி இருக்கின்றது.

ஆகவே சம்பந்தர் மற்றும் பரஞ்சோதி வாழ்ந்த 7ம் நூற்றாண்டிலேயே பள்ளிக்கூடங்கள் இருந்தன என்று ஊகிக்கலாம். அவ்வாறில்லை என்றாலும் இதை எழுதிய சேக்கிழாரின் சமகாலத்தில் இப்பள்ளிகள் இருந்தன என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

ஆதுலர்சாலை என்னும் மருத்துவசாலைகளும், கல்விச்சாலைகளும், நூல்கள் பேணப்படும் மற்றும் படிக்கப்படும் மடங்களும், சரஸ்வதிமகால் போன்ற நூலகங்களும், காஞ்சி, நாலந்தா போன்ற பல்கலைக்கழகங்களும் ஐரோப்பியர் வருகைக்கு முன்னரே பல நூற்றாண்டுகளாக இருந்து வந்திருக்கின்றன. இந்தியாவில் இருந்தவை முகல்லாயப் படையெடுப்பாலும், யாழ்ப்பாண இராச்சியத்தில் இருந்தவை போத்துக்கேயரினாலும் அழிக்கப்பட்டு எரியூட்டப்பட்டன.

இதன் பின்னரே நூல்களைப் பேணி வைத்திருந்தோர் தத்தம் வீடுகளில் ஒளிவு மறைவாகவும் திண்ணைப் பள்ளிகளாகவும் அவற்றை நாடி வந்தவர்களுக்குப் போதித்தனர்.

இவ்வாறு நூல்களை இல்லங்களில் வைத்திருப்பதே கண்டுபிடிக்கப்பட்டால் அவை எரியூட்டப்பட்டு, அவற்றை வைத்ஹ்டிருந்தவருக்கு கசையடி தண்டனையும் வழங்பப்பட்டது போத்துக்கேய ஆவணங்களில் உள்ளது.

இவ்வாறு நூல்களை மறைவாக வைத்திருந்தவர்களை தென்மராட்சியில் ஐயர் ஒருவரே காட்டிக் கொடுத்ததும் பதிவாகியுள்ளது.

நூல்களைப் பாதுகாப்பதற்க்காக மதம் மாறிய சிலர் அவற்றை க்த்தோலிக்க தேவாலயத்தில் பிரார்த்த்னைப் புத்தகங்களுடன் மறைத்து வைத்திருந்ததையும், அவ்வாறு புத்தகங்களுடன் மறைத்து வைத்து படித்து வந்ததை கண்டுபிடித்து தண்டனை வழங்கியதும் அக்கால பதிவேடுகளில் பதிவாகி உள்ளன.

ஆங்கிலேயர் காலத்தில் அவர்களின் மதம் சார்ந்த பள்ளிக்கூடங்களே தாபிக்கப்பட்டன. பின்னர் சுதேசிகள் தமக்கு பாசாலைகளை மீண்டும் கட்டியெழுப்ப அனுமதிக்கப்பட்டபோதும் கிறித்தவ மதப்பாடசாலைகளில் இருந்து குறிப்பிட்ட தூரத்துக்கு அப்பாலாயே அதை அமைக்கமுடியும் என்ற கட்டுப்பாடு இருந்தது.

ஆறுமுக நாவலரின் காலத்தில் எழுந்த சைவ மறுமலர்ச்சியுடன் இன்றைய பாடசாலைகள் பல் எழுந்து கல்வியில் சம வாய்ப்பை எல்லோருக்கும் வழங்கும் நிலை உருவாயிற்று.

(Ramanathan Lambotharan)