மழைக்கால முன் செயற்பாடு

பலத்த காற்றினால் மரங்கள் சரிந்து விழுதல், மரக்கொப்புகள் முறிந்து விழுதல், மின்கம்பங்கள் சேதமடைதல். மின்சாரத்துண்டிப்பு. வெள்ள அனர்த்தம் போன்றவை ஏற்படலாம். ஆதலால் ஆபத்தான மரங்களை அப்புறப்படுத்தவும் மரக்கொப்புகளை தறித்தும் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

மட்டுமன்றி வடிகால்கள் வாய்க்கால்கள் நீர் வடிந்தோடக்கூடிய வகையில் துப்பரவாக்கப்படுவதோடு, குப்பைகூழங்களையும் உரியவகையில் அப்புறப்படுத்த வேண்டும்.

கைவிடப்பட்ட நிலையிலும் பராமரிப்பற்ற நிலையிலும் பற்றைமண்டிக்கிடக்கும் காணிகளை பொறுப்பு வாய்ந்தோர் துப்பரவு செய்ய வழிப்படுத்த வேண்டும். இந்த மழைக்காலம் சவால்மிக்க காலமாக கருதப்படுகின்றது.

சிரட்டைகள் கோம்பைகள் போன்றவற்றை வெட்டிப்புதைப்பதோடு, நீர்தேங்கும் பள்ளங்களை சமப்படுத்திவிட வேண்டும். நீர் வழிந்தோடாத பள்ளங்களில் , நீர்தேங்கும் சிரட்டை கோம்பை சாடிகள் மூலமாக நுளம்புகள் பெருகி நுளம்பு மூலமான நோய்களையும் உருவாக்கிவிடும்.
மட்டுமன்றி எலிக்காச்சல் பரவும் அபாயமும் நுளம்பினால் டெங்குக்காச்சல் மலேரியா போன்றவற்றின் தாக்கங்களும் ஏற்படுமென எதிர்வுகூறப்படுகின்றது.

இரவுநேர மழையாயின் மின்சாரத்துண்டிப்புக்கள் ஏற்பட வாய்ப்பதிகமே. ஆதலால் குழந்தைகளை வைத்திருப்போர் விளக்குகள் மற்றும் மின்சூழ்களை (Light) போன்றவற்றை தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும்.

வரும்முன் காப்போம்.
எமது சுற்றுச்சூழலுக்கு நாமே பொறுப்புடையோர்.