யாழ்ப்பாணம்: குளத்தின் அவலம்


இந்த குளத்தில் நடைபெற்று வரும் ஆக்கிரமிப்புகளை அவதானிக்கலாம்.
முதலில் கடவுளின் பெயரில் நடக்கும் ஒரு சர்வாதிகாரமான யாரும் கேட்க முடியாத ஆக்கிரமிப்பு, தேர்தரிப்பிடத்திற்கருகில்
இரண்டாவது CEB யின் ஆக்கிரமிப்பு (அவர்களால் கை விடப்பட்ட தூண்கள்)
மூன்றாவது ஆங்காங்கே பலராலும் குளத்திலும் குளத்தின் அருகிலும் போடப்பட்ட குப்பைகளும் கழிவுகளும் மற்றும் ரசாயன கழிவுகளும். பல்லாயிரக்கணக்கான மீன் வகைகள் உயிரிழந்து மீன் பிணங்களால் குளம் முழுவதும் நாறத் தொடங்கியது. குளத்தை சுற்றி வசித்த குடும்பங்களின் ஏகோபித்த மனு ஒன்றின் பின் மணிவண்ணன் தலைமையில் floating pontoon மூலம் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் நடை பெற்று வருகிறது.
நாலாவது இயற்கையின் ஆக்கிரமிப்பு, அழகான மிதக்கும் தாவரங்கள். இவை குளத்தின் நீரை ஆவியாக இழப்பதை தடை செய்யும் ( cuts down evaporation losses).
நகர சபையின் பராமரிப்பு வேதனைக்குரிய விடயம்.
சரித்திரத்தில் முதலிடத்தில் யாழ் முதல்வராக திகழ்ந்த அல்பிரட் துரையப்பாவின் படு கொலையின் பின் அப்படியான செயல் திறனுள்ள மக்களை நேசிக்கும் முதல்வரை யாழ் மக்கள் கண்டிருக்கவில்லை. அவரின் படு கொலை தமிழ் மக்களை முள்ளிவாய்க்கால் வரை கொண்டு சென்றது மட்டுமா? இதற்கு பொறுப்பு கூறுவது யார்?
யுத்தத்திற்கு பின் முதலாவது முதல்வர் யோகேஸ்வரி. மிகப்பெரிய பிரச்சனைகள் மத்தியிலும் அவர் தரை மட்டமாக இருந்த யாழ் நகரை ஓரளவுக்கு கட்டி எழுப்பினார், குறைகள் பல இருந்த போதிலும். தற்போதும் அவர் ஒரு MMC ஆக செயல் படுவதால் அவ தனது அனுபவங்களை மக்களின் நன்மைக்காக பகர வேண்டும் எனக் கேட்கிறேன்.
யாழ் நகரத்திலுள்ள மிகப்பேர் போன மணிக் கூட்டுக் கோபுரத்தையும் மணிக்கூட்டையும் சீராக்கி செயல் படுத்திய பெருமை அவருக்கே சேரும். தொடர்ந்து யாழ் மக்களுக்கு நேரத்தை வீணாக்காமல் இருப்பதற்காக நேரத்தையும் மணி ஓசையையும் தந்து கொண்டே இருந்தது. பின் தற்போது வரை அது தொடர்ந்து செயலிழந்து உள்ளது!
நாம் அனைவரும் + அனைத்துக்கட்சிகளும் மக்கள் நலன் கருதி மணிவண்ணனை செயல் திறனுடன் இயங்க ஒத்துழைக்க வேண்டும்.
40 க்கு மேற்பட்ட குளங்கள் யாழ் நகரில் உண்டு. இவை எல்லாவற்றிலும் இதே பிரச்சனைகள்தான்.
இவை அனைத்தும் வாய்க்கால்கலால்
தொடுக்கப்பட்டு குடி மனைகளுக்கு சேதமின்றி மழை நீரை கடலுக்கு கொண்டு செல்லக்கூடிய ஒரு மகத்தான திட்டம் பிரித்தானிய ஆட்சியின் போது உருவாக்கப்பட்டு நன்றாக செயல் பட்டு வந்தது.
விடுதலைப்புலிகளின் காலத்திலும் அதன் பின் இருந்த நகரசபைகளின் பராமரிப்புக் குறைபாடுகலாலும் ஊழல்கலாலும் தான் இப்போ நகரசபை இந்த நிலையில் உள்ளது.
இந்த குளங்கள் எல்லாவற்றையும் கட்டாயம் நிவர்த்தி செய்ய வேண்டும், முடியும்.
பல காரணங்கள்:

  1. வெள்ளப்பெருக்கு வருவதை தடுக்கலாம்
  2. சுகாதாரத்தை பேணலாம்
  3. மழை நீரை குளத்தில் தேக்கலாம்
  4. நிலத்தடி நீரை அதிகரிக்கலாம், அது மட்டுமே எமது உயிரை காக்கும் ஒரே ஒரு நீர்வளம்!
  5. தொடர்ச்சியாக மீன் வளர்க்கலாம்
  6. விவசாயத்திற்கு தேவையான நீரை சேகரிக்கலாம்
  7. குளத்தில் உள்ள நீரை நம்பி வாழும் உயிரினங்களுக்கு எப்போதும் குடிக்க நீர் கிடைக்கும்
    பறவைகள்
    மீன் இனங்கள்
    ஆடு, மாடு, நாய்கள்
    சுற்றுள்ள மரங்கள் செடிகள்
    மற்றும் நூற்றுக்கணக்கான பிராணிகள, கிருமிகள்
  8. இது ஒரு பேணிப் பாதுகாக்க வேண்டிய அழகு நிறைந்த கண்ணுக்கு குளிர்ச்சியான இயற்கை வளம்!
    It has great potential for leisure and sports activities.
    Also these kulams can be used for ‘integrated farming’ plus solar power generation.