யாழ்ப்பாண குளங்கள்

ஆக இந்த இரண்டு குளங்களும் இல்லாவிட்டால் ஆதிகாலத்தில் அது ஒரு ஊரே அல்ல. ஆறுகள் அரிதானவை. ஆறு இல்லாத ஊர் உண்டு. குளம் இல்லாத ஊர் இல்லை. சமயங்கள் வரமுதலே ஊரின் மையமாக இருந்தது குளம். கோயில்களை விட முந்தியவை குளங்கள். ஆதிகாலத்தில் குளத்தங்கரையே ஊரின் பஞ்சாயத்தாக உள்ளுராட்சி சபையாக இருந்தது.

தமிழில் வெளிவந்த முதல் சிறுகதை குளத்தங்கரை அரசமரம். இந்த தலைப்பு குளம் ஆதித்தமிழ் சமூகங்களில் வகித்த பங்கைச்சொல்லும்.

முன்னொரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் நவீன நாகரீகம் வரமுதல் போர்த்துக்கேசியர்கள் வரமுதல் ஊர் ஊராக இருந்த காலத்தில் வீட்டில் கக்கூஸ்கள் இருந்ததில்லை. அக்கால யாழ்ப்பாணத்தமிழில் மலங்களிப்பதை “வெளிக்குப்போவது” என்றுதான் சொல்வார்கள்.

அதாவது வீடடில் மலங்களிக்க முடியாது. “வெளியே” ஓரு மலங்களிக்கும் community பனங்காட்டில் மலங்களித்து விட்டு குளத்தின் பீச்சாங்கரையில் குண்டி கழுவிவிட்டு அதே குளத்தின் எதிர்க்கரையில் குளித்துவிட்டு வீடேகுவதுதான் அக்கால சடங்கு. இந்த இரகசிய விடயங்களை வைகறையிலேயே(அதிகாலை 4 இலிருந்து 6 மணிக்கு இடைப்பட்ட நேரம்) இருட்டில் ஒளி வருவதற்கு முதல் செய்துமுடிக்க வேண்டும்.

  1. குளத்தோடு கோபித்துக்கொண்டு குண்டி கழுவாமல் இருக்கப்போகிறீர்களா?
  2. குளம் எத்தனை குண்டியைக் கண்டிருக்கும்? குண்டி எத்தனை குளத்தைக் கண்டிருக்கும்?
    மேலுள்ள இரண்டு தமிழ் பழமொழிகளும் குளம் நம் ஆதிச்சமூகங்களில் ஒவ்வொரு ஊரிலும் வகித்த முக்கிய பங்கைச் சொல்லும். அதாவது குளம் தான் ஒவ்வோரு ஊரினதும் புலனாய்வு ஸ்தாபனம். ஊரிலுள்ள ஒவ்வொரு மாந்தரையும் அவர்தம் நிர்வாணங்களையும் மட்டுமல்ல அவர்தம் இரகசியங்கள் முழுக்க அறிந்தது குளம். ஏனெனில் குளிக்கும்போதுதான் மாந்தர் தம்தம் ரகசியங்களையும் கவலைகளையும் திட்டங்களையும் நெருங்கியவர்களோடு பகிர்ந்துகொள்வார்கள். யாருடைய மகள் சாமத்தியப்படப்போகிறாள்? யார் யாரோடு ஓடிப்போகப்போகிறார்கள் என்கிற புலனாய்வுத் தகவல்கள் குளத்துக்குத்தான் முதலில் தெரியவரும். இக்கால தொழில்நுட்பம் அக்காலத்தில் இருந்திருந்தால் உளவு ஸ்தாபனங்கள் செய்திருக்கவேண்டியது ஒன்றுதான். குளத்தில் நீருக்கடியில் ஒட்டுக்கேட்கும் கருவியை பொருத்துவதுதான். குளத்தங்கரை அரசமரம் சிறுகதையைப் படித்துப் பாருங்கள். புரியும்.
    அச்சுத்துறையும் பத்திரிகைகளும் வெளிவராத அக்கால வாய்மொழி மரபுக்காலத்தில் குளங்கள் ஊடகத்துறையாகவும் சனசமூக நிலையங்களாகவும் தொழிற்பட்டன. தனியே சாப்பிடுவது கொடுமை. அதைவிடக் கொடுமை கிணற்றிலோ முடிய பாத்ரூம் அறையிலோ தனியக் குளிப்பது. குளத்தில் ஊரே ஒருங்குசேரக்குளிப்பது பரவசம்.
    குளங்கள்தாம் அக்கால ஓர்கானிக் Swimming Pool. மீன்களோடு உரசிக்கொண்டு நன்னீரில் நீந்துவது நல்ல நீச்சல் பயிற்சி.
    உண்மையில் Clubhouse ஐ அந்தக்காலத்திலேயே நாம் கண்டுபிடித்துவிட்டோம். சிங்கிள் ஆண்களுக்கு ஒரு கிளப். சிங்கிள் பெண்களுக்கு ஒரு கிளப். இதைவிட காதலர்களுக்கும் கப்பிள்சுக்கும் பல பிறைவேற் கிளப்புக்கள். பிறைவேற் கிளப் காதலர்/ கப்பிள்ஸ் பீச்சும்போது பனங்காட்டில் வெகுதூரம்போய் பிறைவேற் ஏரியா பிடிச்சு பீச்சவேண்டும்.
    இக்கால கிளப்ஹவுஸ் போல அக்காலத்திலும் இருட்டில் ஒருவருடைய குரலை வைத்தே யார் பேசுகிறார் என்றறிந்தார்கள். இக்காலத்தைப்போல பக்கத்து கிளப்ஹஸுகளுக்கும் எட்டிக்கேட்டார்கள். பீச்சும் பனங்காடுகளும் பின் குளிக்கும் குளங்களும் தான் அக்காலத்தின் மிகப்பெரிய (குரல் மட்டும்) சமூக வலைத்தளங்கள். இக்கால கிளப்ஹவுஸில் தூசணம் கதைப்பது அக்கால இருட்டுக் காலத்தின் தொடர்மரபு.
    இந்து மதம் வருவதற்கு முதல், சாதிகள்/சாதி வெறி வருவதற்கு முதல் குளங்களே கோயில்களாக இருந்த ஒரு மகத்தான காலத்தில் வாழ நமது தலைமுறை கொடுத்துவைக்கவில்லை. அதுவொரு அற்புதமான காலம். முன்னிரவில் நிலவிலோ அமாவாசையிலேயோ கள்ளக்காதலர்கள் குளத்தில் நீராடியதைப்பற்றி எந்தச்சங்ககாலக் கவிஞனும் ஒரு கவிதை எழுதியிருக்கிறானா தெரியாது. அப்படியான கவிதைகள் இருந்தால் அவைதான் The Most Erotic Sangam poetry ever ஆக இருந்திருக்கும்.
    இப்போ காலம் மாறிவிட்டது. குளம் என்கிற Community Bathhouse ஐ நாம் மறந்துவிட்டோம். நல்ல தண்ணி குளத்தில் தண்ணீர் மொண்டு வந்த பெண்களிடம் கெஞ்சி கேட்டு தண்ணீர் அருந்திய எம் அப்பன்களின் காலத்தை மறந்துவிட்டோம். . மூன்று வயதுப் பெண்குழந்தையை ஊர்க்குளத்தில் அரப்புபோட்டு குளிப்பாட்டி நீராட்டி துடைத்து சீருடை உடுத்தி அருகிலுள்ள வைரவர் கோயிலுக்கு போய் வணங்கி வடைமாலை சாப்பிடும் வரம் நம்மெல்லோருக்கும் வாய்ப்பதில்லை.
    இப்போது நவீன காலத்தில் நாங்கள் குளத்தில் குளிப்பதை நாகரீகமாகக் கருதுவதில்லை. நம்மில் பலருக்கு நீந்தவும் தெரியாது. அந்தக்காலத்தில் நீந்தத்தெரியாத மாந்தர் இருந்ததில்லை. குளங்களை நாங்கள் நவீன வாழ்க்கைக்கேற்றவாறு மாற்றவேண்டும். குளிப்பதற்கு மட்டுமானதல்ல குளங்கள். குளங்களின் சூழலியல், அழகியல், கைத்தொழில், பொருளாதார, நீர்ப்பாசன, மரபுரிமை முதலிய பயன்களை அடியொற்றி நமது குளப்பயன்பாட்டு கொள்கையை வகுக்கவேண்டும்.
    யாழ்ப்பாணத்தில் காலனியாதிக்க காலத்திற்கு பின்னர் முக்கியமாக ஈழப்போர் காலத்தில் குளங்களை நாம் கைவிட்டுவிட்டோம். யுத்தம் முடிந்தபின் யாழ்ப்பாணக் குளப்புனரைப்பு முன்னோடி அமரர் ராமதாசன் எந்திரி, தற்போதையை யாழ்நகர நகரபிதா மணிவண்ணன், பெயரறியாத பல சூழலியல் நடவடிக்கையாளர்கள் ஆகியோரின் முயற்சியால் இப்போது குளங்களைப் புனரமைக்கும் சூழலியல் புரட்சியொன்று வெடித்துள்ளது. இதனை சரியாகப் பயன்படுத்திபயன்பெற ஈழத்து உள்ளூராட்சி சபைகளுக்கு சில ஆலோசனைகள்.
  3. முன்னேறிய நாடுகளின் உள்ளூராட்சி சபைகள் இயற்கையான ஏரி, குளம் முதலியவற்றை Organic நீச்சல் தடாகங்களாக்கி பராமரிக்கின்றன. யாழ்ப்பாண உள்ளூராட்சி சபைகள் தம்மிடமுள்ள சில குளங்களையும் இவ்வாறு நீச்சல் தடாகங்களாக்கலாம். இதற்கான பராமரிப்பு செலவை பாவனையாளர்களிடமிருந்து சிறு தொகையாக அறவிடலாம். இம்மாதிரியான பொழுதுபோக்கு உடற்பயிற்சி வசதிகள் ஹோர்மோன்கள் கதிச்ச யாழ் இளைஞர்/இளைஞிகளை நல்வழிப்படுத்தவும் உதவும்.
  4. வெப்ப நகரமான யாழில் குளங்கள் பழமுதிர்ச்சோலைகள். குளத்தை அண்டிய பகுதியை ஒரு பூங்காவாக்கி குளத்தில் மிதக்கும் Cafe/Restaurant/மதுச்சாலை ஆகவோ அருகிலுள்ள பூங்காவிலோ இவற்றை அமைத்து உள்ளூராட்சி சபைகள் இவற்றால் வருமானமும் ஈட்டலாம்.
  5. குளங்களின் ஆதிகால செயற்பாடுகளிலொன்றாகிய சனசமூக நிலையம் என்ற கொள்கையை அடியொற்றி ஒவ்வொரு குளத்தை அண்டியும் ஒரு நூலகத்தை அமைக்கலாம். இது முடியாவிட்டால் குளக்கரைகளில் ஒரு புத்தகப்பரிமாற்ற நிலையத்தை ஆரம்பிக்கலாம். உள்ளூராட்சி சபைகள் செய்யவேண்டியதெல்லாம் மழையிலும் வெய்யிலிலும் பாதிக்கப்படாதவாறான ஒரு பஸ் நிலையமளவுள்ள ஒரு கட்டடத்தை இங்கு கட்டுவதே. அங்கு பொதுமக்கள் தாங்கள் படித்த ஒரு புத்தகத்தை வைத்துவிட்டு அங்கிருக்கிற இன்னொரு எடுத்து செல்வதே நடைமுறை. இதற்கு புலம்பெயர் தமிழர்கள் உதவலாம். வெளிநாடுகளில் பல பாவித்த புத்தகங்கள் சந்தை, கடைகண்ணி, தேவாலயம், தெருமுனைகளில் கிடைக்கிறது. இவற்றையெடுத்து புலம்பெயர் தமிழர்கள் ஊருக்கு அனுப்பினாலே போதும்.
    4.குளம் ஒரு பழைய கால சாமான் என்பவர்களுக்காக யாழ் மாநகர சபையே ஆரிய குளத்தில் ஒரு பழைய (பாவித்த) புத்தகக்கடையை ஆரம்பிக்கலாம். புலம்பெயர் தமிழர் அனுப்பும் புத்தகங்களில் பழைய கிளாசிக் அரிய புத்தகங்களை ஒரு கொத்துரொட்டியின் விலைக்கு சமனாக யாழ் நகரசபை விற்றாலும் வருமானம் வராவிட்டாலும் நட்டம் வர வாய்ப்பில்லை.புத்தகக் கடையில் மாநகரசபை ஒருவருக்கு வேலை கொடுப்பது ஒரு வரம். ஆரிய குளத்தில் ரோல்ஸ்ரோயின் Anna Karenina வாசித்தவன் கலைஞனாவானே தவிர ஆவா குறூப் ஆகமாட்டான்.