இந்தியாவை மேலுயர்த்தும் மொழிப் பன்முகத்தன்மை?

இந்தியர்கள் தங்கள் தாய்மொழிகளைப் பற்றி மிகவும் பெருமைப்படுதுடன், அவர்களின் மொழிப் பயன்பாடு நாடு முழுவதும் கலாச்சார அடையாளங்களை வலுப்படுத்த உதவியது.

ஆங்கிலத்தை ஒரு தகவல் தொடர்பு ஊடகமாக ஏற்றுக்கொண்டமை இந்தியாவை உலகளவில் செழிக்க பெரிதும் உதவியிருந்தாலும், நாட்டில் உள்ள வட்டார மொழி மாணவர்களின் வெற்றி விகிதம் அதிகரித்து வருவது தாய்மொழி மூலம் அறிவைப் பெறுவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.

மேலும், பழக்கமான சொற்கள் மற்றும் சொற்றொடர்களைப் பயன்படுத்தி கருத்துக்கள் விளக்கப்படும்போது, ​​அது மேம்பட்ட விளக்கத்துக்கு வழிவகுக்கும் என்றும் ஆராய்ச்சி காட்டுகிறது.

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டொக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள் உள்ளூர் மொழிகளில் குழந்தைகளுக்கு அறிவியல் கற்பிப்பதை ஊக்குவித்தார்.

இந்தியாவின் புதிய கல்விக் கொள்கையானது ஆரம்ப வகுப்புகளுக்கு உள்ளூர் மொழிகளில் கல்வியை வலியுறுத்தியுள்ளது.

நாட்டில் உள்ள ஒன்லைன் வீடியோ பார்வையாளர்களில் சுமார் 85 சதவீதம் பேர் இந்திய மொழிகளில் உள்ளடக்கத்தை விரும்புகிறார்கள் என கூகுளின் இந்தியா குறித்த 2020 அறிக்கை தெரிவிக்கிறது. எனவே, உள்ளூர் மொழிகளில் உள்ளடக்கத்திற்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்திய மொழிகளில் இணைய பயனர்களின் எண்ணிக்கை 536 மில்லியனை எட்டும் என்று கூகுள் கூறுகிறது. இந்த போக்கை தெளிவாக உணர்ந்து, இந்திய அரசாங்கமும் பல்வேறு எட்-டெக் தளங்களும் புதுமை வெளியில் மொழியியல் பன்முகத்தன்மையின் வரம்பைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளன.

பன்மொழி பார்வையாளர்களின் நலன்களைக் கண்காணித்து, எட்-டெக் தளங்கள் இந்தி, தமிழ் மற்றும் பெங்காலி போன்ற பல மொழிகளில் தங்கள் உள்ளடக்கத்தை வடிவமைக்க திட்டமிட்டுள்ளன. உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி குறித்து, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் மருத்துவம் ஆகியவை உள்ளூர் இந்திய மொழிகளில் அதிகளவில் கற்பிக்கப்படுகின்றன.

சமீபத்தில் மத்தியப் பிரதேசத்தில் இந்தியில் மருத்துவப் பாடத்திட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் ஆரம்பிக்கப்பட்டது. மருத்துவத் தொழிலில் நுழைய ஆசைப்பட்ட பல ஹிந்தி மொழி பேசுபவர்களுக்கு இந்த முடிவு ஒரு வரப்பிரசாதமாக இருந்தது.

“ஒரு பிராந்திய மொழியைக் கற்றுக்கொள்வது, பரந்த அளவில் சிந்திக்கவும் ஆராய்ச்சி செய்யவும் உதவுகிறது. பிராந்திய மொழியில் படிக்கும் மாணவர்கள், பரீட்சைக் கண்ணோட்டத்தில் புத்தகம் சார்ந்து இருக்காமல் ஆராய்ச்சியை சிறப்பாகச் செய்ய முடியும்” என்கிறார் கல்வியாளர் ஜெய்பிரகாஷ் காந்தி.

இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் பழங்குடியின மொழியை ஒரு பயிற்றுமொழியாக ஏற்று நடத்தும் சோதனைகள், கற்றலில் மொழித் தடையை நீக்குவதற்கான ஒரு பெரிய படியாகும்.

புதிய இந்தியா, மொழி ஒரு தடையாக இருக்கக்கூடாது என்று நம்புகிறது, மாறாக, அறிவைப் பெறுவதற்கு ஒரு வசதியாக இருக்க வேண்டும், மேலும் பிராந்திய மொழிகளை மேம்படுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள், நாட்டின் போட்டித்தன்மை வாய்ந்த கல்வித் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ள இந்தியக் குடிமக்களில் அதிகமானவர்களை அனுமதிக்கின்றன.