இலங்கை: கொரனா செய்திகள்

“முன்னெடுக்கப்பட்ட ரெபிட் அன்டிஜன் பரிசோதனையின் போதே, இவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதியானது” என, வத்தளை சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவின்  மக்கள் சுகாதார பரிசோதகர் வருண அமரசேகர தெரிவித்துள்ளார்.

​அங்கு பணியாற்றும் ஊழியர்களில் 194 பேருக்கு பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. என்பதுடன், அந்த கைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களில் 92 பேர் இந்தியப் பிரஜைகள் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

12 மாவட்டங்களில், 24 கிராம  சேகவர் பிரிவுகள், நாளை (21) காலை 4 மணிமுதல் முடக்கப்படவுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது. கம்பஹா, அம்பாறை, மட்டக்களப்பு, இரத்தினபுரி, களுத்துறை,  யாழ்ப்பாணம், மாத்தளை, புத்தளம், நுவரெலியா, காலி, மாத்தறை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களிலேயே பிரதேசங்கள் முடக்கப்படவுள்ளன.