உக்ரேன் பயணிகளுக்கும் கதவுகள் மூடப்பட்டன

நேற்று முன்தினம் யால பூங்காவுக்கு சுற்றுலா சென்ற குறித்த பயணிகள், சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு காரணமாக, சுற்றுலாத்துறை அமைச்சு விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இதற்கு தடைவிதித்ததாக மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு வருகைத் தந்துள்ள குறித்த உக்ரேன் பயணிகள், இன்றும் நாளையும் மத்திய கலாசார நிதியத்தின் கட்டுபாட்டில் உள்ள பொலன்னறுவை மற்றும் சீகிரியா ஆகிய இடங்களைப் பார்வையிட இருந்ததாகவும் இதனால் உள்ள 100 பேர் சுற்றுலாப் பயணிகளுக்கு குறித்த இடங்களை பார்வையிட அனுமதி வழங்கப்படாதென்றும் நிதியம் தெரிவித்திருந்தது.