சாந்தனுக்கு அனுமதி

இதற்கிடையே நோய்வாய்ப்பட்டுள்ள தனது தாயை கவனிக்க தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றில் சாந்தன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.குமரேஷ்பாபு ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான சட்டதரணி, “திருச்சி சிறப்பு முகாமில் உள்ள சாந்தன் இலங்கை திரும்புவதற்கான தற்காலிக பயண ஆவணத்தை இலங்கை துணை தூதரகம் அனுப்பியுள்ளது. இந்த ஆவணங்கள் மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், “இதுவரை தங்களுக்கு அந்த ஆவணங்கள் கிடைக்கவில்லை. தற்போது உயர் நீதிமன்றில் வழங்கப்பட்டுள்ள ஆவணங்களை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கிறேன். அதனடிப்படையில், சாந்தனை இலங்கைக்கு அனுப்ப ஒரு வாரத்தில் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும்” என தெரிவித்தார். இதையடுத்து, வழக்கை வருகிற 29 ஆம்  திகதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.