’’ புதிய படையணியை உருவாக்குவது முரண்பாடுகளை ஏற்படுத்தும் ’’

சமகால நிலைமைகள் தொடர்பாக யாழ். ஊடக  மையத்தில் செவ்வாய்க்கிழமை (19) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்  போதே  அவர்  இவ்வாறு  தெரிவித்துள்ளார் .

அவர்  மேலும் தெரிவிக்கையில்,

” இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைகள் தீர்வு காணப்படவேண்டியது அவசியம். இந்தியாவின் துறைசார் அமைச்சுடன் பேசி ஈழத்து மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் தீர்வு காணப்பட வேண்டும். அதனை விடுத்து கடல் காவலர்கள் என்றும் குடியியல் தன்னார்வ படையை உருவாக்கி தமிழக மீனவர்களுடன் மோதவிடுவது ஆரோக்கியம் அல்ல. இது இரு நாட்டு மீனவர்களிடமும் முரண்பாட்டை ஏற்படுத்தும்.இலங்கை கடற்படையை நல்லவராக்கி இலங்கை மீனவர்களை கெட்டவர்களாக காட்டும் என்ற சந்தேகம் நிலவுகிறது.

இவ்வாறு நடந்தால் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான தமிழக மீனவர்களின் போராட்டம் ஈழத்தமிழர்களுக்கு எதிரானதாக திரும்பும்.

குறித்த பிரச்சினையை ஜனாதிபதியும்  அமைச்சரும் பார்த்துக்கொள்ள வேண்டும். இதை கடற்றொழிலாளர்களிடம் கையளித்தால் தேவையற்ற குழப்பம் ஏற்படும்.கடற்படை செய்யவேண்டிய வேலையை சிவில் அமைப்பிடம் வழங்கப்படுவதை நாம் விரும்பவில்லை. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவை தாக்கல் செய்த அமைச்சரவை பத்திரத்தை மீளப்பெற வேண்டும்.

குறித்த விடயத்தின் ஆழத்தை புரிந்து கடற்றொழிலாளர் சங்கங்கள் எதிர்க்க வேண்டும் ”  என குறிப்பிட்டுள்ளார் .