மாகாணசபை முறை நீடிப்பு தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமானது.

வடக்கை பிரதிநிதித்துவப்படும் தமிழ் கட்சிகள் அனைத்தும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளதுடன், ஜே.வி.பியை தவிர்த்து நாட்டின் ஏனைய பிரதானக் கட்சிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளன.

13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக தமிழ்க் கட்சிகளின் எம்.பி.க்களுடன் மட்டும் கலந்துரையாடுவது போதுமானதல்ல.

இது நாடு முழுவதும் அமுல்படுத்தும் விடயம் என்பதால் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்றும் ஜனாதிபதி கூறினார்.

ஒன்பது மாகாண சபைகளில் ஏழு மாகாண சபைகள் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பிரதேசங்கள் என்றும், எதிர்காலத்தில் மாகாணசபை முறைமையை நீடிக்க வேண்டுமானால் தற்போதுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டியது அவசியமானது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.