மீள் வாசிப்புக்கு!

இந்தளவுக்கு வேறு யாரும் ஈழ விடுதலைப் போராட்டத்தை மீளாய்வுக்குள் நிறுத்தியிருக்கிறார்கள் என்று பார்த்தால் இல்லையென்றே சொல்ல முடியும்.ஈழ விடுதலைப் போராட்டத்தைப் பற்றி நிறையப் பேர் பேசியிருக்கிறார்கள்.

அவர்கள் சார்பு மற்றும் எதிர் என்ற புள்ளியில் இருந்துதான் பேசியிருக்கிறார்கள்.

ஆனால், ஜேம்ஸ் சிவா முருகுப்பிள்ளை செய்தது முழுமையானதல்ல. ஆனாலும் மீளாய்வுக்கான அடிப்படையைக் கொண்டிருந்தது என்பதுதான் இங்கு சிறப்பு பெறுகிறது.

இதே மாதிரி இன்னும்… இன்னும் அகலமாகச் செய்ய வேண்டும். இது ஓர் தொடக்கம் என்பதில் நாம் நிச்சயம் நிமிர்ந்து உட்காரலாம்.

2009 இற்குப் பின்னான சூழல் எப்படி இருந்திருக்க வேண்டியது பற்றிக் கூறும் ஜேம்ஸ் சிவா முருகுப்பிள்ளை முன்னிறுத்தும் எடுதுகோள் அடையாளப்படுத்தும் சூழலை நாம் அவதானிப்புக்குள் கொண்டு வரும் பொழுது தமிழ் அரசியலின் புதிய வீச்சு சரியான பாதைகொள்ளும் சூழலுக்கு தொடக்கம் என்பது இங்கிருந்து தொடங்குவதாக நாம் கருதலாம்.

கற்றுக் கொள்ளுவதற்கான கருத்துக்களை, தரவுகளை உள்ளடக்கிய ஒலிப்பதிவாக நாம் இதைக் குறிப்பிடுவதில் சரியாக இருக்குமென நம்புகிறோம்! உங்கள் மீள் கருத்தையும் நாம் எதிர்பாக்கிறோம்!

(காணொளியைப் பார்க்க…..)