ரஷ்ய தாக்குதலின் 4ஆம் நாளில் கார்கிவ் விழுந்தது

அதேவேளையில், உக்ரேனின் 2வது பெரிய நகரமான கார்கிவ், ரஷ்யாவின் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. உக்ரேன் இராணுவத்தினர் 471 பேரையும் ரஷ்யப் படைகள் கைது செய்துள்ளது.

நேற்றைய (26) நிலவரப்படி உக்ரேன் நாட்டில் அப்பாவி பொதுமக்கள் 198 பேர் பலியாகியிருந்தனர். 1,000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதுவரை 240 அப்பாவி மக்கள் உக்ரேனில் உயிரிழந்திருக்கலாம் எனக் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கணிக்கிறது.

ரஷ்ய தரப்பில் 3,500 இராணுவ வீரர்களை வீழ்த்தியுள்ளதாக உக்ரேன் ஜனாதிபதி வொலடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

  இதற்கிடையில் கார்கிவ் நகருக்குள் ரஷ்யப் படைகள் நுழைந்துவிட்டன. இது உக்ரேனின் வடகிழக்குப் பகுதி. இதனை உக்ரேனின் உள்துறை அமைச்சரான ஆன்டன் ஹெராஸ்சென்கோ உறுதிப்படுத்தியுள்ளார். கார்கிவ் நகரில் பல முக்கியமான மருத்துவப் பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன.    

போர் தொடங்கிய முதல் தாங்கள் தனித்துவிடப்பட்டுள்ளதாக உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி வேதனை தெரிவித்திருந்தார்.  ரஷ்யாவுக்கு அனைவரும் அஞ்சுவதாகக் கூறியிருந்தார். பொருளாதாரத் தடைகளைத் தாண்டி உதவிகள் வேண்டும் என்று கேட்டிருந்தார்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரேன்னுக்கு 350 மில்லியன் டாலர் மதிப்புள்ள இராணுவ தளவாடங்களை அனுப்புவதாகக் கூறியுள்ளார். ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளும் இராணுவ உதவி அளிக்க முன்வந்துள்ளன. போலந்து நாடு உக்ரேனில் இருந்து வந்துள்ள 1 இலட்சம் பேருக்கு தஞ்சம் அளித்துள்ளது. ஹங்கேரி, ருமேனியா நாடுகள் இதுவரை 50,000 உக்ரேனியர்களுக்கு தஞ்சம் கொடுத்துள்ளது.
இதுமட்டுமல்லாது, சர்வதே பணப் பரிவர்த்தனையில் இருந்து ரஷ்யாவை தனிமைப்படுத்தும் நடவடிக்கை ஐரோப்பிய நாடுகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.