வாழைச்சேனையில் ஆர்ப்பாட்டம்

வாழைச்சேனை மீன்பிடித் துறைமுக நிருவாகம் மற்றும் மீன் பிடித் திணைக்களம் என்பவற்றுக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

வெசல்; மொனிட்டரிங் சிஸ்டம் (VMS) கட்டணம் தொடர்பாகவும், ஐஸ் கட்டியின் விலை அதிகரிப்பு, தரமான வலை கிடைப்பதில்லை, துறைமுக இடம் பற்றாக்குறையாகவுள்ளதை நிவர்த்தி செய்து தருமாறு கோரியும் போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

வெசல்; மொனிட்டரிங் சிஸ்டம் (VMS) என்ற கருவியை அவுஸ்திரலிய அரசாங்கம் கடத்தல்களை கட்டுப்படுத்தும் திட்டத்தில் படகுகளை கண்கானிக்கும் நோக்கில் இலவசமாக வழங்கப்பட்ட கருவிகளுக்கு மாதாந்தம் ஆறாயிரம் ரூபா அறவிடுவதும் அப்பணத்தினை செலுத்தாத பட்சத்தில் படகு தொழிலுக்கு செல்வதற்கான அனுமதியை மறுப்பதும் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்ட காரர்கள் தெரிவித்தனர்.