2 ஆண்டுகளுக்குப் பின்னர் பாடசாலைகளைத் திறந்த உகாண்டா

அதை தொடர்ந்து அங்கு மாணவர்களுக்கு ஒன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தும் பணிகள் தொடங்கின. எனினும்அந் நாட்டில் உள்ள பெரும்பாலான அரச பாடசாலைகளில் ஒன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கான வசதிகள் இல்லாததால் மாணவர்களின் கல்வி வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான மாணவர்கள் சுரங்களில் வேலைக்கு சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது,

இவ் விவகாரத்தில் அந்நாட்டு ஜனாதிபதி யோவேரி முசெவேனி கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டபோதும் பாடசாலைகளைத் திறக்க அவர் உத்தரவிடவில்லை.

இந் நிலையில் சுமார் 2 ஆண்டுகளுக்கு பின்னர் உகாண்டாவில் நேற்றைய தினம் பாடசாலைகள்  மீண்டும் திறக்கப்பட்டன.

இதன் காரணமாக தலைநகர் கம்பாலா உள்ளிட்ட பல நகரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.