மாலை 6 மணிக்கு கடைகளை பூட்டி விடுவார்கள்.

மேற்கு ஐரோப்பிய நாடுகளில், சரியாக மாலை 6 மணிக்கு கடைகளை பூட்டி விடுவார்கள். உண்மையில், தொழிலாளர் சுரண்டப் படுவதை தடுப்பதற்கான சட்டம் காரணமாகத் தான், ஆறு மணிக்கே கடை பூட்டுகிறார்கள் என்ற உண்மை பலருக்குத் தெரியாது.

(“மாலை 6 மணிக்கு கடைகளை பூட்டி விடுவார்கள்.” தொடர்ந்து வாசிக்க…)

எழுக தமிழின் பின்னணியில் இருக்கும் அபாயகரமான அரசியலும் அரசியல் சக்திகளும்

மன்னார் மாவட்டத்தின் தெற்குப் புறத்திலே உள்ள முசலிக் கிராமத்திலே ஆய்வு ஒன்றிலே ஈடுபட்டிருந்த போது அங்கிருந்த முஸ்லீம் பெரியவர் ஒருவர் என்னைப் பார்த்துக் கேட்ட விடயங்கள்: ‘நாங்கள் பாரம்பரியமாகப் பயன்படுத்தி வந்த காட்டு வளங்களைத் தொடர்ந்தும் பயன்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்துள்ளது. எனது வீட்டின் பின்புறம் வனவளப் பாதுகாப்பு அதிகாரிகளினால் இப்போது பாதுகாக்கப்பட்ட காடாக மாற்றப்பட்டுள்ளது. ஒரு மண்வெட்டி செய்ய பிடி தேவை என்றால் கூட என்னால் பின்னுக்கு இருக்கிற மரத்தினை வெட்ட முடியாது. முசலி தெற்குப் பகுதியில் புதிதாகப் புத்தர் சிலையும் அமைக்கப்பட்டிருக்கிறது. நாங்களும் வடமாகாணத்தினைச் சேர்ந்தவர்களே. உங்களுடைய முதலமைச்சர் ஐயா ஏன் எங்களுடைய பிரச்சினைகள் பற்றி எதுவும் பேசுவதில்லை. ஒரு கை தட்டினால் சத்தம் கேட்குமா? எல்லாரும் சேர்ந்து பிரச்சினைகளைத் தீர்க்க முன்வரலாமே?’

(“எழுக தமிழின் பின்னணியில் இருக்கும் அபாயகரமான அரசியலும் அரசியல் சக்திகளும்” தொடர்ந்து வாசிக்க…)

‘வங்கம் தந்த பாடம்’

‘வங்கம் தந்த பாடம்’ என்ற இந்த கட்டுரையை தோழர் சந்ததியார் எழுதவில்லை. இந்த கட்டுரையானது வங்கதேச விடுதலைப் போராட்டம் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டு இருந்தபோது டாக்கா நகரில் ‘Far Eastern Economic Review’ என்ற பிரபலமாக ஆங்கில சஞ்சியையின் செய்தியாளராக பணியாற்றிய Lawrence Lifschultz என்பவரால் 1979 இல் எழுதி வெளியடப்பட்ட The Unfinished Revolution’, என்ற நூலில் இடம்பெற்ற ஒரு அத்தியாயமாகும். இந்த இணைப்பில் அந்த குறிப்பிட்ட அத்தியாத்தை நீங்கள் காணலாம்.
http://www.nirmanblog.com/…/20…/03/unfinished-revolution.pdf

http://thesamnet.co.uk/?p=77086

(Jeyabalan Thambirajah)

அட்டைக்கத்தி நாயகர்கள்

(கருணாகரன்)

“எழுக தமிழ்“ என்றொரு யுகப் புரட்சி நடக்கப்போவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணத்தில் இதற்கான தடல் புடலான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த எழுச்சியை எப்படியும் கலையாடக்கூடியமாதிரி ஆக்க வேணும் என்ற நோக்கில் அங்கங்கே எழுதிக் குவிக்கிறார்கள் பலரும். விண்தொடக்கூடியமாதிரியான சுலோகங்கள் தயார்ப்படுத்தப்படுகின்றன. மக்களை அலையாகக் கடலாக எழுச்சி கொள்ள வைப்பதற்கான பயிற்சிகளும் முயற்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. இப்போது இந்த நிகழ்வைப்பற்றிய அறிவிப்புகளை ஒலிபெருக்கிகளில் ஊர்ஊராகச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

(“அட்டைக்கத்தி நாயகர்கள்” தொடர்ந்து வாசிக்க…)

வன்முறையும் ஆணியமும் பெண்ணியமும்

இதில் உள்ள தரவுகளை கொஞ்சம் மாற்றி எழுக தமிழுக்கு மாற்றி போட்டு படிக்கலாம் , எந்தவகையான ஆபத்தை நான் கவனத்தில் எடுக்க சொல்கிறேன் என்பது .-

(யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் உள்ள பெரும்பான்மை ஆண்களின் நிலை பற்றி சில பதிவுகள் இதில் உண்டு .. எனது கதையை விட்டு விடுங்கள் ,சக பெண்கள் எப்படி அதை பார்த்தார்கள் என்று பாருங்கள் )

ஒரே ஒரு பெண்ணை கூட இந்த உலகத்தில் சந்தோசமாக வைத்திருக்க தெரியாதவன் தான் நான். ஆணின் உளவியலில் ஆழமான பகுதி வன்முறையானது , அது வன்முறையை விரும்பும் அல்லது கொண்டாடும் பகுதி ,ஆகவே எனது இதயத்தின் மூலமாக வன்முறை , ஆணியம் , பெண்ணியம் என்பவற்றை விளங்கிக் கொள்ளும் முயற்சி தான் இந்தப் பத்தி.

(“வன்முறையும் ஆணியமும் பெண்ணியமும்” தொடர்ந்து வாசிக்க…)

என்னதான் நடந்து கொண்டிருக்கிறது?

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சி, PLOT, EPRLF, TELO ஆகியவை உள்ளன. இவற்றின் சி்ன்னம் வீடு. இது அகில இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சி்ன்னம். தமிழ் மக்கள் பேரவையில் அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ், PLOT, EPRLF, TELO இணக்கமாக உள்ளன. தமிழ் தேசிய மக்கள் முன்னணி இதில் முக்கியமான தரப்பு. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சி்ன்னம் சைக்கிள். இது அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸின் சின்னம். அகில இலங்கைத் தமிழரசுக் கட்சி எழுக தமிழ் நிகழ்வுக்கு எதிர்ப்பு. தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டவர்கள் அந்தச் சின்னத்துக்குரிய கட்சியைத் தனித்து விட்டு தமிழ் மக்கள் பேரவையின் நிகழ்வுக்குப் பயணம். தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான முதலமைச்சர் விக்கினேஸ்வரன் நிகழ்வில் பங்கேற்பு.

(“என்னதான் நடந்து கொண்டிருக்கிறது?” தொடர்ந்து வாசிக்க…)

எழுக தமிழ் பேரணி: பொறுமை காப்பதே தமது நிலைப்பாடு – சிறீதரன்

புலி ஏன் பதுங்குகிறது?
யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள எழுக தமிழ் பேரணியை முன்னெடுக்க வேண்டாம் என எந்தவொரு கருத்துக்களையும் தாம் வெளியிடவில்லை என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
எனினும் கடந்த காலங்களை விட தமிழ் மக்களுக்கு சாதகமான ஒரு சூழல் தற்போது உருவாகியுள்ளதால் பொறுமை காக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் அவர் கூறினார்.

(“எழுக தமிழ் பேரணி: பொறுமை காப்பதே தமது நிலைப்பாடு – சிறீதரன்” தொடர்ந்து வாசிக்க…)

அதிவேக பயணமும்! பரலோக பிராப்தமும்?


தமிழ்நாட்டில் என் கவனத்தை ஈர்த்த அறிவிப்புகள் ‘’வேகம் விவேகம் அல்ல’’. ‘’வளைவுகளில் முந்தாதே விளைவுகளால் வருந்தாதே’’, ‘’கரம் சிரம் புறம் நீட்டாதே’’. என்பவையே இவை ஒன்றும் ஒளவையார் சொன்ன ஆத்திசூடி அல்ல. சென்னை நெடுஞ்சாலைகளில், பேரூந்துகளில், பதிக்கப்பட்ட அதிவேக போக்குவரத்தின் போது ஏற்பட கூடிய ஆபத்தை உணர்த்தும் வாசகங்கள். நெடுஞ்சாலைகளில் பயணித்தவரில் பலர் எமலோக வாசலில் தேங்காய் உடைத்து, உயிர் தப்பியதால், அவர் பெற்ற துன்பம் அடுத்தவரும் பெற்றுவிடக்கூடாது என்ற, மனிதாபிமான சிந்தனையில் மற்றவர் நலன் காக்க முன் எச்சரிக்கை செய்யும் அறிவிப்புகள் அவை.

(“அதிவேக பயணமும்! பரலோக பிராப்தமும்?” தொடர்ந்து வாசிக்க…)