‘அரசியல் கைதிகள் பலர் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்’

“அரசியல் கைதிகள் பலர் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என பிரதமர் உறுதியளித்துள்ளதாக” நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இன்று (02) காலை பிரதமரின் அழைப்பின் பேரில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரனும் அதன் செயலாளரும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தனும் அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

(“‘அரசியல் கைதிகள் பலர் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்’” தொடர்ந்து வாசிக்க…)

120 குளங்களை புனரமைக்க 500 மில்லியன் ஒதுக்கீடு

“வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அழிவடைந்த நிலையில் காணப்படும் 120 குளங்களை புனரமைப்புச் செய்வதுக்காக நல்லிணக்க செயலணியால் 500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான பணியகத்தின் தலைவருமாக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

(“120 குளங்களை புனரமைக்க 500 மில்லியன் ஒதுக்கீடு” தொடர்ந்து வாசிக்க…)

சுயவிருப்பிலேயே இந்தியாவில் இருந்து இலங்கை அகதிகள் மீள திரும்புகின்றனர்.உயர்ஸ்தானிகர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி

பொதுவாகவே இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் வரலாற்றுக்காலம் முதலே இருதரப்பு உறவுகள் வலுவாக இருந்து வருகின்றன. அதன் தொடர்ச்சியான போக்கே தற்போதும் காணப்படுகின்றது. குறிப்பாக இந்திய மக்களுக்கும் இலங்கை மக்களுக்கும் இடையிலான தொடர்பு மிகவும் சிறப்பாகவே உள்ளது. இன்றைய காலத்தில் அந்த பிணைப்பு மென்மேலும் வலுவானதான ஒன்றாகவே மாறிக்கொண்டிருக்கின்றது. தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் தற்போது மேம்பட்டுச் செல்கின்றன.

(“சுயவிருப்பிலேயே இந்தியாவில் இருந்து இலங்கை அகதிகள் மீள திரும்புகின்றனர்.உயர்ஸ்தானிகர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி” தொடர்ந்து வாசிக்க…)

தோழர் தம்பி தில்லை முகிலன்

தோழர் தம்பி தில்லை முகிலன் என நம் எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட தம்பிப்பிள்ளை துரைவீரசிங்கம் 31.03.2018 அன்று மரணத்தைத்தழுவிக்கொண்டார்.இன்று (01.04.2018) மாலை அவருக்கான இறுதிக் கடமைகள் நிறைவேற்றப்பட்டன.தமிழர் சமுக ஜனநாயக கட்சியின்(SDPT)தோழர்களும் கலந்து தொண்டு தமது இறுதி அஞ்சலிகளைத் செலுத்தினர்.

(“தோழர் தம்பி தில்லை முகிலன்” தொடர்ந்து வாசிக்க…)

தேவராசா (தோழர் சீலன்)

22.03.2018 அன்று அதிகாலை 12.15 மணியளவில் வயிற்றில் ஏற்பட்ட கட்டியை அகற்ற சத்திரசிகிச்சை செய்தபோது அது பலனளிக்காமல் இயற்கை எய்திவிட்டார். அன்னார் மட்டக்களப்பு மகிழுரைச்சேர்ந்தவர். நாம் இடம் பெயரும் நிலை ஏற்பட்டபோது ஒரிசா, திருச்சி கொட்டப்பட்டு, புழல் போன்ற இடங்களில் இருந்தவர். பின்னர் மலேசியா சென்றார். கடந்த மூன்று மாதமாக அவரது சொந்த ஊரில் இருந்தபோதே இந்நிலை ஏற்பட்டது. சிறந்த பொது நோக்காளன். தோழர் களுடன் தோழைமையுடன் பழகும் குணமுடையவர்.
அவரது இறுதிக்கிரியை மகிழூரில் நடைபெற்றது.
தோழருக்கு SDPT யினரின் கண்ணீர் அஞ்சலி.

தந்தை செல்வா அவர்களின் 120வது பிறந்த நாள் நினைவு தினம்

(அருளம்பலம் விஜயன்)
தந்தை செல்வநாயகம் என்று அறியப்பட்ட சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் ள.த.எ.செல்வநாயகம் அவர்கள் 31.3.1798 அன்று மலேசியாவில் உள்ள ஈப்கோ நகரில் பிறந்தார்.
இலங்கைத் தமிழ் அரசியல் வாதியாக,வழக்கறிஞாரக,நாடாளுமன்ற உறுப்பினராக,இரண்டு தசாப்பதங்களுக்கு மேலாக இலங்கைத் தமிழர்களின் அரசியல் தலைவராகவும் இருந்தார்.
தந்தை செல்வா அவர்களின் தகப்பனார் ஆசிரியராக யாழ்பாணம் தொல்புரத்தில் கடமையாற்றிக்கொண்டிருந்தார்.அவர் மலேசியாவுக்கு இடம்பெயர்ந்து அங்கு வர்த்தக தொழில் ஈடுபட்டு வந்ததார்.மலேசியாவின் ஈப்கோ நகரில் முதலில் குடியேறிய அவர்கள் பின்னர் அங்குள்ள தைப்பிங் நகரில் வசித்து வந்தனர்.

(“தந்தை செல்வா அவர்களின் 120வது பிறந்த நாள் நினைவு தினம்” தொடர்ந்து வாசிக்க…)

நம்பிக்கையில்லாப் பிரேரணை – சிறிசேனவிடமே இறுதித் தீர்மானம் உள்ளது’

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோல்வியடையச் செய்வதும், வெற்றியடையச் செய்வதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையிலேயே உள்ள​தென தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நம்பிக்கையில்லாப் பிரேரணை சம்பந்தமாக பூரண நம்பிக்கை இருக்கின்றது என்றார்.

(“நம்பிக்கையில்லாப் பிரேரணை – சிறிசேனவிடமே இறுதித் தீர்மானம் உள்ளது’” தொடர்ந்து வாசிக்க…)

ஆப்கான் யுத்தக் களத்தில் ஐ.அமெரிக்கா எதிர் ரஷ்யா – பாகிஸ்தான்

வேகமாக மாறிவரும் பூகோள அரசியலில், சீனாவினதும் ரஷ்யாவினதும் அண்மைய ஆதிக்கம், பனிப்போரின் பின்னரான காலப்பகுதியில் ஐக்கிய அமெரிக்கா கொண்டிருந்த மேலாதிக்கத்தைச் சமநிலைப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது. இதன் ஒரு பகுதியாகவே, பிராந்திய வல்லாண்மையைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளில், மேற்கத்தேய நாடுகளுக்கு இணையாக ரஷ்யாவும், இராணுவ உடன்பாடு, இணைந்த பாதுகாப்பு உடன்படிக்கை மூலமாக, குறிப்பாக ஆசிய பிராந்தியத்தில் புதியதோர் இணைந்த கட்டமைப்புக்கு, வழிவகுத்திருக்கிறது.

(“ஆப்கான் யுத்தக் களத்தில் ஐ.அமெரிக்கா எதிர் ரஷ்யா – பாகிஸ்தான்” தொடர்ந்து வாசிக்க…)

தோழர் தம்பி தில்லை முகிலன்

புரட்சிகர செவ்வணக்கம்

தோழனே உன்னைப் பற்றி என்ன எழுத எதை எழுத எதை விட தோழமையும் உரிமையுமாய் நீண்ட பயணங்கள் .

திருமலை நகரில் எழுபதுகளின் ஆரம்பத்தில் முன்னோடிகள் சங்கப் பலகை நிகழ்வுகளில் முற்போக்கு முகம் கொண்டு மாக்சிய கருத்துக்களை அள்ளி வீசிய அந்த தருணங்கள்.உன் கம்பீரக் குரல் மிடுக்கேறிய உன் தோற்றம் பார்த்த மாத்திரத்திலேயே என்னை ஆதர்சித்த உன் தோற்றம் பின்னாளில் பல கவிதை அரங்குகளில் உன் புரட்சிகர முழக்கம் திருமலையில் ஒரு முற்போக்கு முகாமுக்கான முன்னறிவிப்பாய் அமைந்தன.

(“தோழர் தம்பி தில்லை முகிலன்” தொடர்ந்து வாசிக்க…)