விஜயின் கணிப்புப் பலிக்குமா?

(எம். காசிநாதன்)

‘சர்க்கார்’ பட சர்ச்சை, இளைய தளபதி விஜய்க்கு, இலவச விளம்பரத்தைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது.
‘தேவர் மகன்-2’ என்று, நடிகர் கமல்ஹாசன் தலைப்பு வைக்கக் கூடாது என்று, ஓர் எதிர்ப்புக் கிளம்பியிருக்கின்ற நிலையில், அ.தி.மு.க அரசாங்கத்தின் இலவசங்களையும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவையும் விமர்சனம் செய்வதாக, அ.தி.மு.க தொண்டர்கள் திரையரங்குகள் முன்பு, ஆர்ப்பாட்டம் நடத்திப் பரபரப்பாக்கி இருக்கிறார்கள்.

(“விஜயின் கணிப்புப் பலிக்குமா?” தொடர்ந்து வாசிக்க…)

‘ பொதுத் தேர்தலை எவராலும் தடுக்க முடியாது’

விசேட வர்த்தமானி அறிவித்தலின்படி பொதுத்தேர்தல் நடைபெறும். இதனை எவராலும் தடுக்க முடியாது. தேர்தல் என்பது மக்களுக்குள்ள உரிமையாகும். இதனை நீதிமன்றத்தால் கூட சவாலுக்குட்படுத்த முடியாது எனத் தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலுக்குச் செல்லத் தாம் எடுத்திருந்த தீர்மானம் குறித்து விரைவில் சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகளைச் சந்தித்து விளக்கமளிக்கப்போவதாகவும் தெரிவித்தார்.

(“‘ பொதுத் தேர்தலை எவராலும் தடுக்க முடியாது’” தொடர்ந்து வாசிக்க…)

ரஷ்யாஎமதுஇறைமைக்குள்தலையிட்டதேயில்லை – தயான்ஜெயதிலக

உலகளாவியகூட்டாட்சிதலைமைக்குள்இழுத்துக்கொள்ளப்படும்முயற்சிகளில்இலங்கைதன்னைஈடுபடுத்திக்கொள்ளாதுஎன்றுரஷ்யாவுக்கானஇலங்கைத்தூதுவர்தயான்ஜயதிலக்ககூறினார். உலகின்சிலதலைநகரங்களில்இருந்துமேற்கொள்ளப்படும்சிலகொள்கைபிரசாரங்களையிட்டுஇலங்கைமகிழ்ச்சியாகஇல்லைஎன்றுஅவர்மேலும்கூறினார். “உலகின்சிலபகுதிகளில்உள்ளஎமதுநண்பர்களிடம்இருந்துகேட்கும்குரல்கள்எங்களுக்குமகிழ்ச்சியைதருவதாக இல்லை. ஏனெனில்உலகின்சிலதலைநகரங்களில்இருந்துவரும்கொள்கைபிரசாரங்களாகஅமைந்துள்ளன.

(“ரஷ்யாஎமதுஇறைமைக்குள்தலையிட்டதேயில்லை – தயான்ஜெயதிலக” தொடர்ந்து வாசிக்க…)

கலைந்தது பாராளுமன்றம்

பொதுத் தேர்தல் 2019 − ஜனவரி 5
வேட்பு மனுத்தாக்கல் 19−26 வரை
புதிய பாராளுமன்றம் ஜனவரி 17 இல் கூடும்

பாராளுமன்றம் நேற்று முன்தினம் நள்ளிரவுடன் கலைக்கப்பட்டது.

இதற்கான, விசேட வர்த்தமானி அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியாகியது.

ஜனாதிபதியினால் ஒப்பமிடப்பட்ட இதற்கான விசேட வர்த்தமானி நேற்று இரவு அரசாங்க அச்சக கூட்டுத்தாபன அச்சகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

(“கலைந்தது பாராளுமன்றம்” தொடர்ந்து வாசிக்க…)

பாதிக்கப்பட்டிருக்கும் முல்லை கிராமங்கள் காட்டு யானைகள், குரங்குகளின் அட்டகாசத்தால்

(ஜது பாஸ்கரன்)
முல்லைத்தீவு மாவட்டத்தின் பெரிய மற்றும் சிறிய காடுகளைக் கொண்ட எல்லைப்புறக்கிராமங்களிலும் இதேபோன்று வவுனியா மன்னார் போன்ற எல்லைப்புறக் கிராங்களிலும் வாழுகின்ற மக்கள் அன்றாடம் இந்த யானை பிரச்சினையால் பெரும் துன்பங்களை எதிர் கொள்கின்றனர். வாழ்வாதாரத்தையும் தொழில் வாய்ப்பையும் தினமும் தேடி அலையவேண்டிய நிலையில் வாழும் இந்த மக்கள் இவ்வாறான யானைகளின் தொல்லைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியுள்ளது.

(“பாதிக்கப்பட்டிருக்கும் முல்லை கிராமங்கள் காட்டு யானைகள், குரங்குகளின் அட்டகாசத்தால்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழர்களுக்கு என்ன அதிகாரங்களை கொடுப்பீர்கள்? வாய்திறந்த ரணில்!

(அதிரன்)

வடக்கு கிழக்கு இணைப்புத் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தவிர பிற கட்சிகள் எதுவுமே அந்தக் கோரிக்கையை முன்வைக்கவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் சர்வதேச ஊடகமான பிபிசிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியொன்றில் கேட்கப்பட்ட கேள்விகளையும் அதற்கு அவர் வழங்கிய பதில்களையும் இங்கு இணைக்கிறோம்.

(“தமிழர்களுக்கு என்ன அதிகாரங்களை கொடுப்பீர்கள்? வாய்திறந்த ரணில்!” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நிதிசார் பயன்கள் /படிகள்

  1. பின்வரும் படிகள் 2017.01.01 இலிருந்து வலுவிற்கு வரும் வகையில் மீளாய்வு செய்யப்பட்டுள்ளன.

படிகள் அனைத்து அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் அமர்வுப் படி ஒவ்வொரு பாராளுமன்றக் கூட்டத்திற்கும் சமுகமளிப்பதற்காக ரூ. 2,500/=. குழுப் படி        அமர்வு இல்லாத தினங்களில் குழு நடைபெறும்போது ஒவ்வொரு குழுக் கூட்டத்திற்கும் சமுகமளிப்பதற்காக ரூ. 2,500/=. (அமர்வு தினங்களில் நடைபெறும் குழுக்கூட்டத்திற்கு சமுகமளிப்பதற்கு படியெதுவும் செலுத்தப்படுவதில்லை.)

(“இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நிதிசார் பயன்கள் /படிகள்” தொடர்ந்து வாசிக்க…)

கலைக்கப்படுகிறது நாடாளுமன்றம். ஜனவரி 5இல் பொதுத் தேர்தல்?

நாடாளுமன்றத்தை இன்று நள்ளிரவுடன் கலைக்கும் வர்த்தமானியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைச்சாத்திட்டுள்ளதாகவும், அரச அச்சுத் திணைக்களத்துக்கு வர்த்தமானி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சரொருவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதி விசேட வர்த்தமானியில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைச்சாத்திட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படும் நிலையில், எதிர்வரும் ஜனவரி 5ஆம் திகதியன்று, பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.அமெரிக்காவில் பெண்களின் அலை

உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளிலும், #MeToo இயக்கம் மூலமாக, பெண்களின் குரல்கள் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் நிலையில், ஐக்கிய அமெரிக்காவின் மத்தியகாலத் தேர்தலிலும், அக்குரல்கள் ஓங்கி ஒலித்திருக்கின்றன. ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபைக்கு, 100க்கும் மேற்பட்ட பெண்கள் தெரிவாகியிருக்கின்றனர். இது, அந்நாட்டு வரலாற்றில், முதன்முறையாக நடந்துள்ளது. தற்போதைய பிரதிநிதிகள் சபையில், 84 பெண்கள் தான் காணப்படுகின்றனர்.

(“ஐ.அமெரிக்காவில் பெண்களின் அலை” தொடர்ந்து வாசிக்க…)

‘ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து உரிய பதிலில்லை’

தற்போது சிக்கலாகியுள்ள பிரதமர் பதவி குறித்து ரணில் விக்கிரமசிங்க உயர்நீதிமன்றத்துக்கு செல்லாதது ஏன் என்பது தொடர்பில் இதுவரை ​ஐக்கிய தேசியக் கட்சியினர் எவ்வித பதிலையும் வழங்கவில்லையென்று ஸ்ரீ லங்கா கொம்யூனிஸ்ட் கட்சியின் பிரதான செயலாளர் டி.யு. குணசேகர தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2015ஆம் ஆண்டு, பிரதமராக ரணிலை சட்டவிரோதமாக நியமித்ததைப் போன்றே, இம்முறையும் பிரதமர் ஒருவரை சட்டவிரோதமாக நியமித்துள்ளாரென, ஸ்ரீ லங்கா கொம்யூனிஸ்ட் கட்சியின் பிரதான செயலாளர் டி.யு. குணசேகர தெரிவித்துள்ளார். அன்று விவசாயியின் மகனான ஜயரத்னவை பிரதமர் சட்டவிரோதமாக பதவி விலக்கும் போது, அமைதியாக இருந்தவர்கள் இன்று அதேப்போன்று ரணிலை பதவி நீக்கவும் பாரிய எதிர்ப்பை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.