நன்றியுடன் விடை கொடுப்போம்….! மன உறுதியுடன் முன்னேறுவோம்……!!

(சாகரன்)

வருடம் ஒன்று விடை பெறுகின்றது….. வருடம் மற்றொன்று வரவேற்கின்றது. நம்பிக்கையுடன் மன உறுதியுடன் ஐக்கியப் பட்டு புதிய ஆண்டை வரவேற்போம்….. எதிர் கொள்வோம்…. வெற்றி பெறுவோம்…. அனைவருக்கும் புது வருட நல் வாழ்த்துகள்

2022இல் கொரோனா தோற்கடிக்கப்படும்

2022 இல் கொரோனா தொற்றுநோய் தோற்கடிக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.

ஒமிக்ரானை அடுத்து புதிய வைரஸ் கண்டுபிடிப்பு

இஸ்ரேல் நாட்டில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு இருக்கிறது. கொரோனா வைரஸ், ப்ளூவென்சா தொற்று ஆகிய இரண்டு தொற்றுகள் சேர்ந்து “ப்ளூரோனா” என்ற புதிய வகை தொற்று ஏற்பட்டு இருக்கிறது. 

’இந்திய மீனவர்களை விடுவிக்க முயல்வேன்’

இழுவைமடித் வலைத் தொழிலில் ஈடுபடுவதனால் கடல் வளங்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களையும், இலங்கை கடற்றொழிலாளர் எதிர்கொள்ளுகின்ற வாழ்வாதார அச்சுறுத்தல்களையும் தமிழக உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

வடகொரிய ஜனாதிபதி: உணவு தான் முக்கியமே தவிர அணு ஆயுதங்கள் அல்ல

இன்றைய பொருளாதார சூழலில் பொதுமக்களுக்கு உணவு தான் முக்கியமே தவிர அணு ஆயுதங்கள் அல்ல என்றும் வளர்ச்சி திட்டங்களில் தான் இனி முழு கவனமும் செலுத்தப்படும் என்றும் வடகொரிய  ஜனாதிபதி கிம் ஜோங் உன் அறிவித்துள்ளார்.