தீவிரவாதம் பற்றிய வர்த்தமானி எழுப்பும் கேள்விகள்

(எம்.எஸ்.எம். ஐயூப்)

பொது இடங்களில் பேசுவோரும் எழுத்தாளர்களும், இப்போது முன்னரை விட பன்மடங்கு கவனமாகப் பேசவும் எழுதவும் வேண்டியுள்ளது. ஏனெனில், கடந்த 12 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ வெளியிட்ட விசேட வர்த்தமானியின் கீழ், தீவிரவாதத்தையும் வன்முறையையும் இனங்களுக்கு இடையிலான கசப்புணர்வையும் பரப்புவோர் எனச் சந்தேகிக்கப்படுவோர் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணையின்றி மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்படுவார்கள்.