திலீபன் சிறுவயதில் தாயைஇழந்த ரௌடியா? தியாகியா?

1. தமிழ்க்கவி(Thamayanthy Ks) சொல்கிறார்.
“உண்ணாவிரத மேடைக்குப் போகும் போதே திலீபன் இறப்பது …நிச்சயம் என்பது உறுதியாகவே இருந்தது. இடையில் நடந்ததெல்லாம் நாடகத்தின் காட்சிகளே.மக்களை புலிகளின்பால் மீட்டெடுக்க இந்த நாடகம் தேவையாக இருந்தது. இந்திய அமைதிப்படையின் வருகை புலிகள் விரும்பாத விடயம். வீணாக கொடுத்த விலை. அவ்வளவே.”

(“திலீபன் சிறுவயதில் தாயைஇழந்த ரௌடியா? தியாகியா?” தொடர்ந்து வாசிக்க…)

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் முரண்பாடு

தியாக தீபம் திலீபனின் 31ஆவது ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் முதல் நாள் நிகழ்வு, இன்று (15) ஆம்பிக்கப்பட்ட நிலையில் நிகழ்வில் அரசியல் கட்சி உறுப்பினர்களுக்கிடையில் வாய்தர்க்கம் ஏற்பட்டது. பருத்தித்துறை வீதி – நல்லூர் பகுதியில் அமைந்துள்ள திலீபன் நினைவு தூபியில், மேற்படி நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

(“திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் முரண்பாடு” தொடர்ந்து வாசிக்க…)

விக்னேஸ்வரனின் செவ்வியும் ஊடகங்களும்

முதலமைச்சர் விக்னேஸ்வரனின் செவ்வி ஒன்று, கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியாகி இருந்தது. கூட்டமைப்புத் தலைமைக்கும், அவருக்கும் இடையிலான பனிப்போர், தீவிரம் பெற்ற பின்னர், அவர், விரிவாகப் பல விடயங்களைப் பேசிய ஒரு செவ்வியாக இது இருந்தது.  அந்தச் செவ்வி வெளியானதுமே, அதைத் தமிழ் மொழியாக்கம் செய்து, முதலமைச்சரின் செயலகம், பெரும்பாலான தமிழ் ஊடகங்களுக்கு அனுப்பியிருந்தது.தமிழ் ஊடகங்களும் அப்படியே வெளியிட்டிருந்தன.

(“விக்னேஸ்வரனின் செவ்வியும் ஊடகங்களும்” தொடர்ந்து வாசிக்க…)

சொகுசு வாகனத்தை நிராகரித்த தென் மாகாண ஆளுநர்

தென் மாகாண ஆளுநருக்கு, 430 இலட்சம் ரூபாய் செலவில் வாகனமொன்றை ​கொள்வனவு செய்வதற்காக, மாகாண சபையில் ஒதுக்கப்பட்ட நிதியை, அவர் நிராகரித்துள்ளார். அத்துடன் குறித்த நிதியை, அபிவிருத்தி பணிகளுக்காக பயன்படுத்தவுள்ளதாக, ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். தென் மாகாண செயலாளருக்கு கடிதம் மூலம் இந்த அறிவிப்பை அவர் விடுத்துள்ளார். வாகன கொள்வனவுக்காக ஒதுக்கப்பட்ட குறித்த நிதியை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவுக்கமைய முன்னெடுக்கப்பட்டுவரும், விசேட வேலைத்திட்டங்களுக்காக பயன்படுத்தி மக்களுக்கு சேவையாற்ற எண்ணியுள்ளதாக, ஆளுநர் தனது கடித்தில் குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்று நினைவுகள்

பேச்சுவார்த்தை என்று அழைக்கபட்டு புலிகளால் நய வஞ்சமாக படு கொலை செய்யப்பட்ட புளொட் உறுப்பினர்கள் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் அரசியற் செயலாளர் வாசுதேவா (வாசு), படைத்துறைச் செயலாளர் ஜோதீஸ்வரன் (கண்ணன்), பாவானந்தன் (சுபாஸ்), ஆனந்தன், மற்றும் பலரின் 30ம் ஆண்டு நினைவுநாள். 1987ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 13ம் திகதி காலை புளொட் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களான வாசுதேவா, கண்ணன், சிவராம் (தராக்கி), ஆகியோர்கள் தங்கியிருந்த வாசுதேவாவின் அக்கா வீட்டிற்கு சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்களான பொட்டம்மான், கருணா (ஸ்ரீலங்கா அரசின் தற்போதைய மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்), கரிகாலன், சித்தா உள்ளிட்ட புலிகளின் பிரதிநிதிகள் புளொட் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நாடாத்தி காலை உணவினை வாசுதேவாவின் சகோதரியின் இல்லத்தில் ஒண்றாக இருந்து அருந்தி மத்தியானச்சாப்பாட்டிற்கு தங்களது அலுவலகத்திற்கு வருமாறு அழைப்புவிடுத்து.

(“வரலாற்று நினைவுகள்” தொடர்ந்து வாசிக்க…)

‘வெப்பமே உயிரிழப்புக்கு காரணம்’

வடக்கு மாகாணத்தில் தற்போது நிலவும் வரட்சியுடன் கூடிய வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள அதிக வெப்பத்தாலேயே, நந்திக்கடல் பகுதியில், மீன்கள் உயிரிழந்து கரையொதுங்கியுள்ளதாக, மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன், இன்று (12) தெரிவித்தார். முல்லைத்தீவு – நந்திக்கடல் பகுதியில், நேற்று (11) பெருமளவான மீன்கள் உயிரிந்த நிலையில் கரையோதுங்கியுள்ளன. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகின்றது. இது தொடர்பில் வினவியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்துக் கருத்துரைத்த அவர், கடந்த வருடமும், அதிக வெப்பநிலை காரணமாக இதேபோன்று, மீன்கள் உயிரிழந்து கரையொதுங்கியதாகத் தெரிவித்தார்.

சிரியாவின் இட்லிப்: வரலாற்றின் முடிவு?

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

நீண்ட யுத்தமொன்று, அதன் கடைசிக் கட்டத்தை அடைந்திருக்கிறது.
பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காவுகொண்டு, இலட்சக் கணக்கானோர் இடம்பெயரக் காரணமான யுத்தத்தின் முடிவு நெருங்குகிறது. இந்த யுத்தத்தை யார் முன்னெடுத்தார்களோ, யார் தொடக்கினார்களோ, நடைபெற்ற அனைத்து அவலத்துக்கும் பொறுப்புச் சொல்ல வேண்டியவர்கள் யாரோ, அவர்கள் இன்று அமைதி பற்றியும் மனிதாபிமானம் பற்றியும் பெண்கள், குழந்தைகள் பற்றியும் பேசுகிறார்கள்.

(“சிரியாவின் இட்லிப்: வரலாற்றின் முடிவு?” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும் (தொடர் _ 6)

(Thiruchchelvam Kathiravelippillai)

சிறிலங்கா 1955 ஆம் ஆண்டுவரை மாகாணங்களையே நிருவாக அலகாகக் கொண்டிருந்தது. 1955 இல் ஒன்பது மாகாணங்கள் 21 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன. 1961 இல் அம்பாறை மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது. 1978 இல் கம்பஹா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இறுதியாக 1984 பெப்ரவரியில் கிளிநொச்சி 25 ஆவது நிருவாக மாவட்டமாக உருவானது.
1961 ஆம் ஆண்டு அம்பாறை உருவாக்கப்பட்ட போது பொலன்னறுவையிலிருந்து 57கி.மீற்றர்கள் தூரமும் அம்பாறையிலிருந்து 135கி.மீற்றர்கள் தூரமும் அம்பாறை மாவட்டத்திலேயே அதிகளவு சனத்தொகையைக் (முழுமையாக சிங்களவர்கள்) கொண்டிருப்பதுமான தெஹியத்தைக்கண்டிய பிரதேச செயலக பிரிவு கிழக்கு மாகாணத்தில் உள்வாங்கப்பட்டது தமிழ்பேசும் மக்களது பெரும்பான்மையை கிழக்கு மாகாணத்தில் குறைப்பதற்காகும்.

(“தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும் (தொடர் _ 6)” தொடர்ந்து வாசிக்க…)

ஊடக சந்திப்பு

பெருந்தோட்ட உழைப்புரிமை ஒன்றியம்
වැවිලි ශ්‍රම යිති මුහය
Plantation Labour Rights Confederation
152 1/3 Hulftsdorp Street, Colombo 12
plantationlabour@gmail.com 071-6275459
10-09-2018

பிரதம ஆசிரியர்
மதிப்புக்குரிய ஐயா/அம்மணி,
ஊடக சந்திப்பு
பெருந்தோட்ட கூட்டு ஒப்பந்தமும் தொழிலாளர்களின் சம்பள உரிமையும்
திகதி: 12-09-2018
நேரம்: பி.ப. 2.00 மணிக்கு
இடம்: பிரைட்டன் ரெஸ்ட் இல. 214ஃ2, மெசஞ்சர் வீதி, கொழும்பு 12.

(“ஊடக சந்திப்பு” தொடர்ந்து வாசிக்க…)