கனடாவில் கியூபெக் நகரில் உள்ள பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு

கனடாவில் கியூபெக் நகரில் உள்ள பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தை மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ. எல். எம். உவைஸ் காஜியார் வன்மையாக கண்டித்து உள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஏராளமான மக்கள் தொழுகைக்காக திரண்டு காணப்பட்டபோது இத்தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதில் 06 பேர் கொல்லப்பட்டு 08 பேர் காயப்பட்டு உள்ளனர். இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என்று பொலிஸார் நம்புகின்றனர். அத்துடன் இருவரை கைது செய்து உள்ளார்கள். இந்நிலையில் முஸ்லிம்களின் வணக்க தலமாகவும், புகலிடமாகவும் உள்ள கியூபெக் இஸ்லாமிய கலாசார நிலையம் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதல் அதிர்ச்சியையும், கவலையையும் ஒரே நேரத்தில் தந்து உள்ளது என்று உவைஸ் காஜியார் தெரிவித்து உள்ளார். இது காட்டுமிராண்டிகளின் கோழைத்தனம் என்று கூறி உள்ள இவர் இச்சம்பவத்தில் இறந்தவர்களுக்காகவும், பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்வதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.

‘வட-கிழக்கு இணைப்பு தொடர்பில் மக்களை தெளிவுப்படுத்த ​​வேண்டும்’

“வட-கிழக்கு இணைப்பினை உறுதிப்படுத்த குரல் எழுப்பும் தரப்பினர், முதலில் முஸ்லிம் மக்களுக்கு ஏன் அது முக்கியமானதென்பதை தெளிவுபடுத்த வேண்டும்” என காத்தான்குடி முஸ்லிம் போரம் தெரிவித்துள்ளது. வடக்குக்கு பயணமொன்றை மேற்கொண்டிருந்த காத்தான்குடி முஸ்லிம் போரத்தின் பிரதிநிதிகள், யாழ். ஊடக அமையத்தில் வடக்கு ஊடகவியலாளர்களை சந்தித்து, நேற்று கலந்துரையாடினார்.

(“‘வட-கிழக்கு இணைப்பு தொடர்பில் மக்களை தெளிவுப்படுத்த ​​வேண்டும்’” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ்க்கவி – வாழ்வே வழிமுறையும் ஆயுதமும்

(கருணாகரன்)

தமிழ்க்கவியை முதன்முதலில் சந்தித்தது எப்போதென்று சரியாக நினைவு கொள்ள முடியவில்லை. 1993 அல்லது 1994 ஆக இருக்கலாம். சாம்பவி என்ற பெண் போராளியோடு சந்திக்க வந்திருந்தார். (பின்னாளில் புநகரிப் படைத்தளத்தின் மீதான தாக்குதலில் சாவடைந்தார் சாம்பவி). சட்டென தமிழ்க்கவியைத் திரும்பிப்பார்க்க வைத்தது அவருடைய குரல்தான். சற்றுத் தடிப்பான குரலில் உரத்த தொனியில் பேசிக் கொண்டிருந்தார். என்ன, ஏதும் பிரச்சினையோ என்று கவனத்தைத் திருப்பிக் கூர்ந்து கவனித்தபோது, அப்படி எதுமில்லை. அவருடைய குரலும் கதைக்கும் முறையும் அப்படித்தான் என்று புரிந்தது. பேச்சிலடித்தது கிராமிய மணம். அறிமுகமில்லாத புதிய முகம். ஏறக்குறைய ஐம்பதுகளை நெருங்கிய தோற்றம். குரலைப்போலவே சற்றுத் தடித்த உடல். ஆனால், மிகச் சுறுசுறுப்பாக இயங்கும் ஆளாகத் தெரிந்தார். அவருடைய பேச்சும் அப்படித்தான். படுவேகமானது. படபடவென்று ஆயிரம் விசயங்களைப் பேசித்தள்ளி விடும் ஒரு மாய இயந்திரத்தைப்போல. இப்போதும் தமிழ்க்கவி அப்படித்தான். ஒரு பேச்சியந்திரம்.

(“தமிழ்க்கவி – வாழ்வே வழிமுறையும் ஆயுதமும்” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கைக்கு எதிராக விரல் நீட்டிய அமெரிக்க அதிகாரிகள் நீக்கம்

அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகள் 4 பேர், அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்பால் பதவி நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நால்வரும், இலங்கை படையினர் யுத்தக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டினை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஜெனிவா கூட்டத்தொடரில் முன்வைத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

(“இலங்கைக்கு எதிராக விரல் நீட்டிய அமெரிக்க அதிகாரிகள் நீக்கம்” தொடர்ந்து வாசிக்க…)

சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்ட கர்ப்பிணிப் பெண்களின் நலன்கள்

(சட்டத்தரணி எஸ்.மோகனராஜன்)

கர்ப்பகால கொடுப்பனவுகள் மற்றும் அதனோடு தொடர்புடைய கர்ப்பிணிப் பெண்கள் நலன் சம்பந்தமான விடயங்ளை உறுதிப்படுத்தும் ஒரு முக்கியமான சட்டமாக பிரசவ நலக் கட்டளை சட்டம் காணப்படுகிறது. 1981 மற்றும் 1985 ஆம் ஆண்டுகளில் திருத்தங்களுக்குட்பட்ட இச்சட்டம், சர்வதேச தராதரத்துடன் ஒப்பிடும் போது இன்னும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டிய தேவை இப்பொழுது காணப்படுகிறது.

(“சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்ட கர்ப்பிணிப் பெண்களின் நலன்கள்” தொடர்ந்து வாசிக்க…)

முள்ளுள்ளபுதர்களின் மத்தியில்…….(அத்தியாயம் 8)

(அக்கினிஞானஸ்நானம்)
பழையபுலிகள் மனம் திறந்துகதைப்பதுஅரிது.
தங்களின் இயக்கநடவடிக்கைகள் குறித்துவாயேதிறக்கமாட்டார்கள். எமதுநிறுவனத்தில் இரண்டுவருடங்களாகப் பணிபுரியும் முன்னாள் ‘பளைப்பொறுப்பாளரும்,மல்லாவிப் பொறுப்பாளரும்’ இதற்குவிதிவிலக்கல்ல. நான் சிலசமயங்களில்,அவர்கள் பங்குபற்றியதாக்குதல்கள்,மறக்கமுடியாததாக்குதல்கள,; மற்றும் ஏன் அவர்கள் இயக்கத்தைவிட்டுவெளியேறினார்கள் என்றுபவ்வியமாகக் கேட்பேன். ‘பெரிசாய் சொல்வதற்க்குஒன்றும் இல்லை தம்பி இயக்கத்திலசேர்ந்திட்டன். அம்மா தனிச்சுப்போனா.குடும்பத்தைப் பார்க்கஒருதரும் இல்லை…’போன்றசாட்டுக்களைக் பட்டும்பாடாமலும் கூறுவார்கள். நானும் ஒன்றையும் விடுத்துவிடுத்துக்கேட்கமாட்டேன். அவர்கள் இயக்கத்தைவிட்டுவெளியேறுகையில் இயக்கநடவடிக்கைகளைப்பற்றிவெளியில் வாய் திறக்கக்கூடாது என்ற கடும் நிபந்தனை அவர்களுக்குவிதிக்கப்பட்டிருக்கும் என்பது எனக்கு தெரியாதல்ல.

(“முள்ளுள்ளபுதர்களின் மத்தியில்…….(அத்தியாயம் 8)” தொடர்ந்து வாசிக்க…)

உறவுகளின் கதறல்! சம்மந்த(ர்)பட்டோரின் அசமந்தம்?

உரிமைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட உடன் அரசுகளின் முதல் நடவடிக்கை, கைது செய்தல் பின் தடுத்து வைத்தல், அதன் பின் தெருவோர பிணங்கள் ஆக்கல், முடிவாக காணாமல் போகச்செய்தல் எனத் தொடர்ந்த வரலாற்றில், தம் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறியாதவர் நிலைதான் மிகவும் கொடுமையானது. உடலங்களை காணாதவரையில் அவர்கள் எங்காவது உயிரோடு இருக்க வேண்டும் என்றுதான் எவரும் விரும்புவர்.

(“உறவுகளின் கதறல்! சம்மந்த(ர்)பட்டோரின் அசமந்தம்?” தொடர்ந்து வாசிக்க…)

கம்பியா:து(ர்)ப்பாக்கி(ய) ஜனநாயகம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

ஜனநாயகம் பல வழிகளில் நிறுவப்படுகிறது. வாக்குப் பெட்டி முதல் துப்பாக்கி முனை வரை பல்வேறு அந்தங்களில் அது நிலைநாட்டப்பட்டுள்ளது. அவ்வாறு நிலைநாட்டப்பட்ட ஜனநாயகத்தின் தன்மையானது, அது அடையப்பட்ட வழிமுறையில் தங்கியுள்ளது. முறை எவ்வாறானதாயினும் முடிவில் எல்லாம் ஜனநாயகத்தின் பெயரால் அரங்கேறுகின்றன. ஜனநாயகம் என்றால் என்ன என்பதற்கான பொருட்கோடல் பரந்த தளத்தில் நடைபெறுவதால் எல்லாவற்றையும் ஜனநாயகம் என வசதியாக அழைத்துக் கொள்ளவியலுமாகிறது.

(“கம்பியா:து(ர்)ப்பாக்கி(ய) ஜனநாயகம்” தொடர்ந்து வாசிக்க…)

ஜல்லிகட்டுப் போராட்டமும் காவல்துறை அத்துமீறல்களும்

(by A Marx)

(ஜல்லிகட்டுப் போராட்டம்: இறுதி நாட்களில் நடைபெற்ற காவல்துறை அத்துமீறல்கள்: உண்மை அறியும் குழு அறிக்கை சென்னை, ஜன 25,2017)

ஜல்லிக்கட்டுத் தடையை நீக்கக் கோரி சென்னை மெரினா கடற்கரையிலும், தமிழகம் முழுமையிலும் இந்த மாதம் 17ம் தேதி முதல் இளைஞர்கள் பொதுவெளிகளில் கூடி இரவிலும் பகலிலும் அகலாமல் அமர்ந்து முற்றிலும் அமைதி வழியில் போராடினர். எந்த ஒரு குறிப்பான கட்சி அல்லது இயக்க வழிகாட்டலும் இன்றி தன்னெழுச்சியாகவும் முற்றிலும் அமைதியாகவும் நடைபெற்ற இந்தப் போராட்டம் பல வகைகளிலும் 2011- 12 களில் நியூயார்க்கில் நடைபெற்ற ‘வால்ஸ்ட்ரீட் அமர்வு’ போராட்டத்தை நினைவூட்டியது.
அனைத்துத் தரப்பினரின் ஆதரவுடன் நடைபெற்ற இப்போராட்டம் கொடுத்த அழுத்தத்தின் விளைவாக தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க நேர்ந்தது. மத்திய அரசை வற்புறுத்தி அவசரச் சட்டம் ஒன்றை இயற்ற வைப்பதில் தோல்வியுற்ற தமிழக அரசு சென்ற ஜன 21 அன்று ஜல்லிக்கட்டுத் தடையை நீக்கும் வகையில் மிருக வதைத் தடைச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்து அவசரச் சட்டம் ஒன்றை இயற்றியது. அடுத்த நாளே மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிகட்டுப் போராட்டம் நடத்தப்படும் எனவும் முதலமைச்சர் அதில் கலந்து கொள்வார் எனவும் அறிவிக்கப்பட்டது.

(“ஜல்லிகட்டுப் போராட்டமும் காவல்துறை அத்துமீறல்களும்” தொடர்ந்து வாசிக்க…)

ஜல்லிகட்டு் போராட்டம் நமக்கு சொல்லும் செய்தி என்ன ?

தமிழன், தமிழ்தேசியம், பாரம்பரியம் என்றெல்லாம் மிகவும் ஓங்கி ஒலித்தது குரல்கள். ஐ.டி கம்பெனி அம்பி முதல் முக்குலத்து சொந்தம் வரை தமிழ் உணர்வு பீறிட்டு அடித்தது. ஆனால் கடைசியில் காவல்துறையிடம் அடிபட்டு, உடைமைகள் எரிக்கப்பட்டு, தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பவர்கள் சென்னையின் பூர்வகுடிகள் மட்டுமே. தமிழன் ஜாலியாக மாட்டின் வாலை கடிக்க தயராகி கொண்டு இருக்கிறான்.

(“ஜல்லிகட்டு் போராட்டம் நமக்கு சொல்லும் செய்தி என்ன ?” தொடர்ந்து வாசிக்க…)