பலிக்கடாக்களாகும் அரசியல் கைதிகள்

(கே. சஞ்சயன்)

அநுராதபுர சிறைச்சாலையில், மூன்று தமிழ் அரசியல் கைதிகள் நடாத்தி வரும், தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை அடுத்து, தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம், மீண்டும் தீவிர கவனிப்புக்குரிய விவகாரமாக மாறியிருக்கிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளில், அரசியல் கைதிகள் விவகாரம், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், காணிகள் விடுவிப்பு விவகாரம் என்பன, அவ்வப்போது சில சம்பவங்கள், போராட்டங்களால் உச்ச கவனிப்புக்குரியதாக மாறுவதும், பின்னர் அது தணிக்கப்படுவதும் அல்லது தணிந்து போவதும் வழக்கமாகியுள்ளன.

(“பலிக்கடாக்களாகும் அரசியல் கைதிகள்” தொடர்ந்து வாசிக்க…)

நெஞ்சம் மறப்பதில்லை……….

எழுபதுகளின் பிற்பகுதி எண்பதுகளின் ஆரம்பம் என் வாழ்வில் மறக்க முடியாத இனிமேலும் கிடைக்க முடியாத தன்னலமற்ற உறவுகளை தந்த காலம். ஒன்றிரண்டு வயசு மட்டுமே வித்தியாசமான அதற்கு முன்பு எந்தவித அறிமுகமும் இல்லாத இளையவர் நாம் ஒன்றாக அணிதிரண்ட காலம். இனம் பற்றிய சிந்தனை மட்டுமே எம் மனதில் இருந்த நாம் வரித்துக்கொண்ட இலட்சியம்.

(“நெஞ்சம் மறப்பதில்லை……….” தொடர்ந்து வாசிக்க…)

கரையோர மாவட்டமும் தனி அலகும் தெளிய வேண்டிய மயக்கங்கள்

(மொஹமட் பாதுஷா)

மொழிகளில் பாண்டித்தியம் பெற்றிருப்பவர்களுக்கும் கூட, சில வேளைகளில் அந்தமொழிகளில் இருக்கின்ற சில சொற்களின் அர்த்தங்கள் விளங்காமல் போவதுண்டு. ஒரே மாதிரியான இரு சொற்கள் மயக்கத்தை ஏற்படுத்துவதுண்டு. அதுபோல, முஸ்லிம் மக்களால் கோரப்படுகின்ற கரையோர மாவட்டம் மற்றும் முஸ்லிம் தனியலகு ஆகியவை தொடர்பிலும் பெருமளவானோர் குழம்பிப் போய் இருக்கின்றனர். இரண்டினதும் ஆழ அகலங்கள் என்ன? அவற்றுக்கிடையான வித்தியாசங்கள் என்ன? என்பது பற்றி, ஒருசில மக்கள் பிரதிநிதிகளும் விளங்காத்தனமாக அறிக்கை விடுவதைக் காண முடிகின்றது.

(“கரையோர மாவட்டமும் தனி அலகும் தெளிய வேண்டிய மயக்கங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

குர்திஷ் பொதுசன வாக்கெடுப்பு: தனிநாடு என்ற சூதாட்டம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
ஒடுக்குமுறைக்காளாகிய சமூகங்கள் போராடுகின்றபோது, அதன் இறுதி இலக்காகத் தனிநாட்டைக் கொள்வது இயல்பு. இரண்டாம் உலகப்போரைத் தொடர்ந்த, கொலனியாதிக்க விடுதலைப் போராட்டங்கள், பலநாடுகள் விடுதலையடையவும் புதிய நாடுகள் தோற்றம் பெறவும் உதவின. கெடுபிடிப்போரின் முடிவு, நாடுகள் பிரிக்கப்பட்டு, புதிய நாடுகள் பலவற்றின் தோற்றத்துக்கும் வழிவகுத்தது. புதிய நாடு இவ்வாறுதான் தோற்றம் பெறவேண்டுமென்ற சூத்திரமெதுவும் இல்லை.

(“குர்திஷ் பொதுசன வாக்கெடுப்பு: தனிநாடு என்ற சூதாட்டம்” தொடர்ந்து வாசிக்க…)

பிரின்ஸ் காசிநாதர் அவர்கள் வாழும் போதே நினைவு மீட்கும் என் பதிவு.

என்ன மாதவம் செய்தேன் இத்துணை பெரியவர்களுடன் நானும் சரிசமமாக அமர என என்னை அன்று எண்ண வைத்த தருணம் நான் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண பேரவை தலைவராக தேர்வான தினமே. எமை அவையத்து முந்தி இருக்க செய்தல் தந்தை செயல் என்பதை எனக்கு செய்தது நான் இணைந்து செயல்ப்பட்ட நாபா தலைமையிலான ஈ பி ஆர் எல் எப் கட்சி என்பதை என்றும் மறவேன்.

(“பிரின்ஸ் காசிநாதர் அவர்கள் வாழும் போதே நினைவு மீட்கும் என் பதிவு.” தொடர்ந்து வாசிக்க…)

கூட்டமைப்புக்கு எதிராக மாற்று அணி தேடும் புதிய தலைவர் யார்?

(புருஜோத்தமன் தங்கமயில்)

எதிர்வரும் 2018, தேர்தல்களுக்கான ஆண்டாக இருக்கப் போகின்றது. முதலாம் காலாண்டுப் பகுதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களோடு ஆரம்பிக்கும் தேர்தல் பரபரப்பு, மாகாண சபைத் தேர்தல்கள் வரையில் நீடிக்கும் வாய்ப்புண்டு. அந்தக் காலப்பகுதிக்குள், புதிய அரசமைப்பு மீதான, பொது வாக்கெடுப்புக்கான சாத்தியமும் காணப்படுகின்றது. தமது அரசியல் தலைமைத்துவத்தை, வாக்கு அரசியல் மூலமாகத் தேடிக்கொள்ள நினைக்கும் சமூகமொன்றில், தேர்தல்கள் செலுத்தும் தாக்கம் மிகப்பெரியது. அப்படியான கட்டத்தை தென்னிலங்கை 1950களின் ஆரம்பத்திலேயே அடைந்துவிட்டது.

(“கூட்டமைப்புக்கு எதிராக மாற்று அணி தேடும் புதிய தலைவர் யார்?” தொடர்ந்து வாசிக்க…)

புலம்பெயர் சமூகத்திடமிருந்து தாயக மக்கள் எதிர்பார்ப்பது என்ன?

(எஸ்.கருணாகரன்)
புலம்பெயர்ந்திருக்கும் சமூகத்தினரிடமிருந்து தாயக மக்கள் எதிர்பார்ப்பது என்ன? அல்லது அவர்கள் எத்தகைய செயற்றிட்டங்களுக்கு உதவவேண்டும்”? என்று இரண்டு நாட்களுக்கு முன்பு, கேட்டார் புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடொன்றில் வாழ்கின்ற நண்பர் ஒருவர். யுத்தம் முடிந்து எட்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், எழுப்பப்பட்டிருக்கும் கேள்வி இது. இன்னும் சொல்லப்போனால், யுத்தத்துக்குப் பிறகு, இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்கள் நடந்த பிற்பாடு, எழுப்பப்பட்டிருக்கும் கேள்வி இது.

(“புலம்பெயர் சமூகத்திடமிருந்து தாயக மக்கள் எதிர்பார்ப்பது என்ன?” தொடர்ந்து வாசிக்க…)

சிறீதரனின் ஆதரவுடன் காணிகளை கையடக்கும் சுவிஷ்நாட்டு பணக்காரர்

அக்கராயனில் உள்ள கரும்புத் தோட்டக் காணியைப் போராளிகளுக்கு (இது ஒரு போலி ஏற்பாடு) பகிர்ந்து அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு கடந்த சில தினங்களுக்கு முன்பு கிளிநொச்சியில் ஒரு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டைச் செய்தவர் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் என்பது பகிரங்கமான தகவல். (“சிறீதரனின் ஆதரவுடன் காணிகளை கையடக்கும் சுவிஷ்நாட்டு பணக்காரர்” தொடர்ந்து வாசிக்க…)

சாய்ந்தமருதுக்கான பிரதேச சபை கோரிக்கையை போலவே மல்வத்தைக்கான பிரதேச சபை கோரிக்கையும் நீதியானது!

(விருட்சமுனி)
அம்பாறை மாவட்டத்தில் உள்ள பழம்பெரும் தமிழ் கிராமங்களில் ஒன்று மல்வத்தை. மல்வத்தை கிராமத்தை மையமாக கொண்டு பிரதேச சபை ஒன்றை அமைத்து தர வேண்டும் என்று இக்கிராமத்தையும், அண்டிய கிராமங்களையும் சேர்ந்த தமிழ் மக்கள் கடந்த ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக கோரி வந்திருக்கின்றனர். ஆயினும் அரசாங்கங்களும் சரி, தமிழ் பேசும் தலைமைகளும் சரி இவர்களின் கோரிக்கைகளை பொருட்படுத்தி நடந்ததாக தெரியவில்லை. இந்நிலையில் அண்மைய வருடங்களில் இக்கோரிக்கைக்கான கோஷங்கள் நீறு பூத்த நெருப்பாக அடங்கி கிடந்தன. சாய்ந்தமருதுக்கான பிரதேச சபை கோரிக்கை ஆட்சியாளர்களால் நிறைவேற்றி கொடுக்கப்படுகின்ற தறுவாயிலை அடைந்தபோது மல்வத்தைக்கான பிரதேச சபை கோரிக்கையும் மீண்டும் புத்துயிர் பெற்று உள்ளது.

(“சாய்ந்தமருதுக்கான பிரதேச சபை கோரிக்கையை போலவே மல்வத்தைக்கான பிரதேச சபை கோரிக்கையும் நீதியானது!” தொடர்ந்து வாசிக்க…)