மதுரை விமான நிலையத்தில் இருந்து அகதிகள் நாயகம் திரும்பினர்.

கப்பல் சேவையை எதிர்பார்த்து பலர் தாயகம் திரும்ப காத்திருக்கின்றனர்.
தமிழக முகாம்களில் உள்ள அகதிகள் நாடு திரும்புதல் அதிகதித்துள்ள நிலையில் 9 குடும்பங்களைச் சேர்ந்த 17 ஆண்கள்,15 பெண்கள் என 32 பேர் மதுரை விமான நிலையத்தில் இருந்து 17.2.17 அன்று மாலை 4.30 இற்கு ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஸ்தானிகத்தின் உதவியுடன் தாயகம் திரும்பினர். 1990 மற்றும் 2009 காலப்பகுதியில் இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் சென்ற இவர்கள் சிவங்கை மாவட்டம் மூங்கில்ஊரணி,மதுரை மாவட்டம் உச்சப்பட்டி, ஆனையூர், இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், கன்னியாகுமரி மாவட்டம் பெருமாள்புரம், விருதுநகர் மாவட்டம் தாப்பாத்தி முகாம்களைச் சேர்ந்தவர்களாகும்.

(“மதுரை விமான நிலையத்தில் இருந்து அகதிகள் நாயகம் திரும்பினர்.” தொடர்ந்து வாசிக்க…)

பாஞ்சாலி சபதம்! காவியம் கலந்த நிகழ்கால நிலைமை!

ஏய்! அருச்சுனா என் சுயம்பரத்தில், அன்று தமிழரசு கட்சி தன் உணர்ச்சிகர பேச்சால் தமிழ் மக்கள் வாக்குகளை கவர்ந்தது போலவே, உன் வில்வீரம் காட்டி என்னை உனக்கு  மாலையிட வைத்தாய்.   தமிழ் காங்கிரஸ் மலையக மக்கள் விடயத்தில் தவறான் முடிவு எடுத்ததால், தமிழ் மக்கள் அதனை நிராகரித்தது போலவே, கர்ணன் வளர்ந்த குலத்தை சாட்டியே சபையினர் அவனை போட்டியில் இருந்து விலகவைத்தனர்.

(“பாஞ்சாலி சபதம்! காவியம் கலந்த நிகழ்கால நிலைமை!” தொடர்ந்து வாசிக்க…)

ஈராக்: மக்கள் எழுச்சிக்கான ஒத்திகை

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

சிதைக்கப்பட்ட தேசங்களின் கதை கொடுமையானது. அவ்வாறு சிதைக்கப்பட்ட தேசங்களின் மீளுகை, இலகுவில் நடந்துவிடக் கூடியதல்ல. ஒருபுறம் ஒரு தேசத்தைச் சிதைத்ததன் பின்னணியில் செயற்பட்ட சக்திகள், சிதைத்ததற்கான காரணங்களையும் தாண்டிச் செல்வாக்குச் செலுத்துகின்றன. மறுபக்கமாக, சிதைக்கப்பட்டதன் விளைவால் புதிய சக்திகள் அரங்காடிகளாகவும் ஆதிக்க சக்திகளாகவும் தோற்றம் பெறுகின்றன. இவற்றுக்கிடையிலான அதிகாரப் போட்டியும் அதிகாரத்துக்கான அவாவும் அத்தேசத்தின் எதிர்காலத்தை எதுவித ஜயத்துக்கும் இடமின்றிக் கேள்விக்குறியாக்கின்றன.

(“ஈராக்: மக்கள் எழுச்சிக்கான ஒத்திகை” தொடர்ந்து வாசிக்க…)

ஒத்துழைப்புக் கோரல் – மக்கள் தொழிலாளர் சங்கம்

கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கிற்காக உங்கள் ஒத்துழைப்பை கோருகின்றோம் -மக்கள் தொழிலாளர் சங்கம்

கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் என்ற வகையில் நான் மேன்முறையீட்டு நீதிமன்றம் தாக்கல் செய்துள்ள எழுத்தானை வழக்கானது தனித்து எனதோ அல்லது எமது சங்கத்தின் முயற்சி என்றும் மட்டும் நாம் பார்க்கவில்லை. மாறாக கூட்டு ஒப்பந்த்திற்கு எதிராக தொழிலாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்த வழக்கிட வேண்டும் என்று வெளிப்படையாக கூறிய மற்றும் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று அபிப்பராயம் கொண்டிருந்த தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மீது அக்கறை கொண்டவர்கள் சார்பாகவே நாம் வழக்கிட்டுள்ளோம் என்று கருதுகின்றோம்.

(“ஒத்துழைப்புக் கோரல் – மக்கள் தொழிலாளர் சங்கம்” தொடர்ந்து வாசிக்க…)

பா.ஜ.கவின் பிளவுபடுத்தி ஆளும் காலனிய சூழ்ச்சி

பா.ஜ.க இவ்வளவு விரைவில் ஒ.பி.எஸ்ஸை கைவிடும் என நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவருக்கும் மத்திய அரசுக்குமான உறவில் ஏதோ ஒரு பிசகு நேர்ந்திருக்கிறது. ஒ.பி.எஸ்ஸின் புகழ் ஒரு பக்கம் உயரும் போது பா.ஜ.கவினர் தீபாவை முறுக்கேற்றி முன்னுக்கு கொண்டு வர துவங்கினர். அப்போதே பா.ஜ.கவின் பிளவு படுத்தி ஆளும் காலனிய உத்தியை கவனித்தேன். ஆனாலும் இவ்வளவு சீக்கிரம் அவரை தெருவில் விடுவார்கள் என நான் நினைக்கவில்லை.

மத்திய அரசு நினைத்தால் சசிகலா குழுவினரின் அடித்தளத்தை பெயர்க்க ரொம்ப நேரம் ஆகாது. ஆனால் பா.ஜ.கவின் தேவை அத்தரப்பை அழிப்பது அல்ல. கட்டுப்படுத்துவது. அதாவது பூனையையும் சீண்டி விட வேண்டும்; எலியையும் பாதுகாக்க வேண்டும். சசிகலாவை ஜெயிலுக்கு அனுப்பியதுடன் பா.ஜ.கவின் முதல் தேவை ஓரளவு நிறைவேறி விட்டது. பூனைக்கு அது மணி கட்டி விட்டது.

(“பா.ஜ.கவின் பிளவுபடுத்தி ஆளும் காலனிய சூழ்ச்சி” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கையை பிரதிபண்ணும் தமிழகம்

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் பதவிப் போட்டியின் போது இடம்பெற்றுள்ள ஒரு விடயத்தைப் பார்க்கும் போது, 1987ஆம் ஆண்டில் இலங்கையில் மாகாண சபைகள் அறிமுகப்படுத்தப்படும் போது இடம்பெற்ற ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வருகிறது. அந்த ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி, இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவும் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தைக் கைச்சாத்திட்ட போது, நாட்டில் தென் பகுதிகளில், அதற்கு எதிராகக் கடும் எதிர்ப்பு ஆரப்பாட்டங்கள் இடம்பெற்றன. சுமார் 140 பேர், அரச படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆளும் ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளும் பிரதமர் ஆர்.பிரேமதாச உள்ளிட்ட சிலர், அதனை எதிர்த்தனர்.

(“இலங்கையை பிரதிபண்ணும் தமிழகம்” தொடர்ந்து வாசிக்க…)

அனந்தி சசிதரன் எழுப்பியிருக்கும் கலகக்குரல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் (எழிலன்) மீண்டும் ஒருமுறை கலகக்குரல் எழுப்பியிருக்கின்றார். தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்ற ‘எழுக தமிழ்’ பேரணியின் கூட்டத்தில் பெண் பிரதிநிதிகள் யாருக்கும் உரையாற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கவில்லை. இந்த விடயம் தொடர்பிலேயே அனந்தி சசிதரனின் ‘உரிமை கோரலுக்கான குரல்’ கலகக்குரலாக மேலெழுந்திருக்கின்றது.  கலகக்குரல் என்பது குழப்பம் விளைவிக்கும் செயன்முறை என்கிற அடையாளப்படுத்தல்கள் எமது சூழலில் பலமாக இருந்து வருகிறது.

(“அனந்தி சசிதரன் எழுப்பியிருக்கும் கலகக்குரல்” தொடர்ந்து வாசிக்க…)

வெளியாள் உற்பத்தி முறை தொடர்பாகவும் கூட்டு ஒப்பந்தம் தொடர்பாகவும் தொழிலாளர்கள் சார்பான ஆய்வுகள் அவசியம் – மலையக சமூக நடவடிக்கை குழு

1951ஆம் ஆண்டு 14 அம்சக் உடன்டிக்கையில் உள்ள தொழிலாளர்களை தோட்ட நிர்வாகம் தொழிலார்களை வேலையில் இருந்து நீக்குவதை தடுப்பதற்கான எற்பாடுகள் இருந்துள்ளன. எனினும் 2003ஆம் ஆண்டு செய்துக் கொள்ளப்பட்ட பெருந்தோட்டத் தொழிற்துறைக்கான பிரதான கூட்டு ஒப்பந்தத்தில் ஏற்பாடுகள் தொழிலாளர்களை தோட்டத் துறைமார் தொழில் இருந்து நீக்குவதனை தடுப்பதற்கான விசேட ஏற்பாடுகள் எதனையும் கொண்டிருக்கவில்லை. அத்துடன் தொழிற்சங்கங்களின் செயற்பாடுகளை தோட்ட முகாமை முடக்குவதனை தடுப்பதற்கான ஏற்பாடுகளை தடுப்பதற்கான விசேட ஒழுங்குப்படுத்தல் முறைகளை கொண்டிக்காமை மிகவும் பலவீனமான அம்சம். எனவே இதனையும் ஏனைய விடயங்களையும் கருத்திற்கொண்டு தற்போதுள்ள கூட்டு ஒப்பந்தம் எதிர்காலத்தில் மாற்றியமைக்கப்பட வேண்டும். இவ்வாறு மலையக சமூக நடவடிக்கை குழு ஏற்பாடு செய்திருந்த ‘பெருந்தோட்டத் தொழிற்துறையின் எதிர்காலமும் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளும்’ என்ற கருத்தரங்கில் உரையாற்றிய அக்குழுவின் உறுப்பினர் சுகுமாரன் விஜயகுமார் குறிப்பிட்டார்.

(“வெளியாள் உற்பத்தி முறை தொடர்பாகவும் கூட்டு ஒப்பந்தம் தொடர்பாகவும் தொழிலாளர்கள் சார்பான ஆய்வுகள் அவசியம் – மலையக சமூக நடவடிக்கை குழு” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் A.F.C ( பகுதி 103 )

வட கிழக்கு மாகாண சபை தேர்தல் இந்திய இராணுவ உதவியுடன் நடாத்தி முடிக்கப்பட்டது.இதில் ஈ.பி.ஆர.எல்.எப் உம் ஈ.என்.டி.எல் எப் உம் கூட்டாக வெற்றி பெற்றன.முஸ்லீம் காங்கிரஸ் எதிர்க்கட்சியானது.புலிகளின் அச்சுறுத்தலையும் மீறி மக்கள் வாக்களித்தனர்.

(“பற்குணம் A.F.C ( பகுதி 103 )” தொடர்ந்து வாசிக்க…)

பிலவுக்குடியிருப்பு:கொதிக்கும் நிலம்

(கருணாகரன்)

சொந்த வீட்டுக்குத் திரும்பும் வரைட, வீதியில்தான் எங்கள் வாழ்க்கை” என்று பத்து நாட்களாக வீதியிலேயே படுத்து எழும்பிப்போராடிக் கொண்டிருக்கிறார்கள், முல்லைத்தீவு – கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பு மக்கள். “வீடு திரும்பும் வரையில் வீதியை விட்டுச் செல்ல மாட்டோம்” என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். குழந்தைகள், சிறுவர்கள், முதியோர்கள், பெண்கள் என கிராமத்திலுள்ள அனைவரும் வீதிக்கு வந்து விட்டனர். போராட்டக்களமாகியிருக்கிறது, வீதி.

(“பிலவுக்குடியிருப்பு:கொதிக்கும் நிலம்” தொடர்ந்து வாசிக்க…)