சர்வதேச பெண்கள் தினம்

(சாகரன்)
பிறப்பிற்கு முன்பு தன் குழந்தையை கற்பத்திற்குள் சுமப்பவள் பெண். இதனால் தாயாக மதிக்கப்படுகின்றாள். இதன் தொடர்சியாக குழந்தையின் வளர்சிக்காக பிறப்பிற்கு பின்பும் சுமக்கின்றார் தான் பெற்ற பிள்ளைகளை. இந்த பிறப்பிற்கு சரிபாதி காரணமாக இருக்கும் ஆண் பிறப்பிற்கு பின்பு தன் குழந்தைகளை பெண் அளவிற்கு சுமப்பதில்லை. இதனை உலகம் பொது நியதியாக்கி பெண் மீதான மேலாதிக்கத்திற்கு அத்திவாரம் இடுகின்றது. தொடர்ந்து வரும் வாழ்க்கை பயணத்திலும் குடும்ப சுமையை சுமக்கும் உயிரினமாக மாற்றப்பட்டு சுதந்திரத்தை சமூகம் மறுக்கின்றது. இந்த ஆண் மேலாதிக்க சமூகத்தின் வளர்ச்சிப் போக்கில் பயணிப்பவள் தனது தேடலுக்காக புறப்பட எத்தனிக்கும் போது ஏளனமாகப் பார்க்கப்படுகின்றார். மேலும் இந்தப் பார்வை பெண் குழந்தையாக இருக்கும் போதே ஆணை விடக் கீழானவள் என்ற கருத்தியலையும் ஒழுக்கம் என்பது பெண்ணுக்கு மட்டும் உரித்தானது என்று சமூக கட்டுப்பாடு, மதக்கட்டுப்பாடு என்றும் தடை போட்டு நியாயப்படுத்த முயலுகின்றது.

(“சர்வதேச பெண்கள் தினம்” தொடர்ந்து வாசிக்க…)

பெண் விடுதலையில் அம்பேத்கர்

* 1919 – பெண்களுக்கான சிறப்பு மாநாடுகளில் அம்பேத்கர் கலந்து கொண்டு, தலித் சமூகம் விடுதலை பெற, அதன் முன் தேவையாக தலித் சமூகப் பெண்கள் விடுதலை பெற வேண்டும் என்றார்.
* 1921 – சாதிப் பெயர்களை ஆண்கள் தங்கள் பெயர்களின் பின்னால் இணைத்துக் கொண்டு அதை வெளிப்படுத்துகின்றனர். ஆனால், பெண்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் அத்தகைய பெயர்களைத் தவிர்க்கின்றனர். அதே நேரம் திருமணம் போன்ற நிகழ்வுகளால் சாதி உணர்வை வலியுறுத்த வேண்டிய சூழலில் பெண்கள் உள்ளனர். இதைக் களைந்தெறிய, பெண்கள் போதுமான அளவு பொதுத் தளத்திற்கு வர வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றார் அம்பேத்கர்.

(“பெண் விடுதலையில் அம்பேத்கர்” தொடர்ந்து வாசிக்க…)

வட  கொரியா-மலேஷியா: போர் மூளுமா?

(எஸ். ஹமீத்.)
வட கொரியாவுக்கும் மலேசியாவிற்குமிடையில் போர் ஒன்று மூளும் அபாயத்தை அவ்வளவு இலகுவில் மறுதலித்துவிட முடியாத நிலைமைகளே தற்போது காணப்படுகின்றன. வட கொரியாவின் சர்வாதிகார  அதிபர் கிம் ஜாங் உன்னின் ஒன்றுவிட்ட சகோதரரான கிம் ஜாங் நம் என்பவர் அண்மையில் மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்துக் கொலை செய்யப்பட்டிருந்தார். இந்தக் கொலைக்கு உலக நாடுகளினால் தடை செய்யப்பட VX  என்ற இரசாயனம் பயன்படுத்தப்பட்டிருந்தது. சர்வதேசத்தையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இக்கொலையைத் தொடர்ந்து, மலேஷிய போலீசார் சந்தேகத்திற்குரியவர்கள் சிலருடன் மேலும் இரண்டு பெண்களைக் கைது செய்திருந்தனர்.

(“வட  கொரியா-மலேஷியா: போர் மூளுமா?” தொடர்ந்து வாசிக்க…)

சிறப்புக் கட்டுரை: காலத்தைத் தோற்கடித்த கலைஞர்

(ரவிக்குமார்)

மார்ச் 2ஆம் தேதி இரவு எட்டு மணி. கோபாலபுரம் – திமுக தலைவர் கலைஞரின் இல்லம். நானும் எமது கட்சியின் தலைவர் திரு தொல்.திருமாவளவன் அவர்களும் அங்கு போவது முதன்முறையல்ல. திமுக கூட்டணியில் நாங்கள் இடம்பெற்றிருந்தபோது அடிக்கடி அங்கு சென்று தலைவர் கலைஞரைச் சந்தித்து எத்தனையோ செய்திகளை பகிர்ந்துகொண்டிருக்கிறோம். எங்களை தமது உடன்பிறப்புகளாகவே கருதி திமுக-வின் உள்கட்சிப் பிரச்னைகளைக்கூட அவர் எங்களிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார். ஒவ்வொருமுறை அவரை சந்தித்துத் திரும்பும்போதும் ஏதாவது ஒரு புதிய செய்தியை, ஒரு அனுபவத்தை நாங்கள் உள்வாங்கி வந்திருக்கிறோம். இன்று, கோபாலபுரம் இல்லத்தில் நுழையும்போது தலைவர் கலைஞரை பார்க்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியைவிட, அவர் எப்படி இருக்கிறாரோ என்ற தவிப்புதான் என் உள்ளத்தில் மேலோங்கியிருந்தது.

(“சிறப்புக் கட்டுரை: காலத்தைத் தோற்கடித்த கலைஞர்” தொடர்ந்து வாசிக்க…)

கண்ணாடி வீட்டிலிருந்து கொண்டு கல்லெறியும் சுமந்திரன்!

“அப்படி விசாரிக்கும் போது, தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தை மேடையில் வைத்துக் கொண்டு, அவரது ஆட்சேபனை எதுவும் இல்லாமல், “தமிழ் துரோகிகளுக்கு இயற்கை மரணம் கிடையாது” என்று பேசிய அன்றைய தமிழ் இளைஞர் பேரவைத் தலைவர்களின் (மாவை சேனாதிராசா, வண்ணை ஆனந்தன் போன்றவர்கள் அன்றைய பிரபல தலைவர்கள்) உரைகள், எப்படி புலிகளின் மிக மோசமான அராஜகம் வரை இட்டுச் சென்றது என்பதை வரலாறு பதிவு செய்வதுடன், சுமந்திரன் இன்று அங்கம் வகிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படும்.

(“கண்ணாடி வீட்டிலிருந்து கொண்டு கல்லெறியும் சுமந்திரன்!” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கை தொடர்பான அமெரிக்காவின் அறிக்கை வெளியானது! ஈழத்தமிழர்கள் அதிர்ச்சியில்

ஜெனிவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான அமெரிக்காவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஈழத்தமிழர் தரப்புக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்த்திருந்த குறித்த அறிக்கை, தமிழர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது. இதில் இலங்கை அரசை காப்பாற்றும் வகையிலேயே இலங்கை தொடர்பான அமெரிக்காவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அடிமைத்தனத்திலிருந்து விடுதலை நோக்கி——-

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருமளவில் நிகழும் இடங்களாக எமது பிரதேசங்கள் மாறியுள்ளன. பெண்கள் சிறார்களுக்கான சமூக பாதுகாப்பு அச்சம் தரும் வகையில் குறைந்துள்ளது. ஆளரவமற்றுப்போகும் ஊர்கள் என்பன பெண்களுக்கெதிரான வன்முறைகளின் களமாக மாறுகின்றன.
கைக்கோடரி வாள் வீச்சு கோஸ்டிகள் பொதுவாக சமூகத்திற்கு மாத்திமல்ல குறிப்பாக பெண்களுக்கெதிரான வன்முறைகளை இலக்காக கொண்டவை.

(“அடிமைத்தனத்திலிருந்து விடுதலை நோக்கி——-” தொடர்ந்து வாசிக்க…)

எழுபதுகளில் இருந்து மாறுபட்ட இன்றைய மாணவர் செயல்!?

அண்மைக்காலமாக மாணவர்களின் அரசியல் பார்வை அவர்களை எடுப்பார் கை பிள்ளை நிலைக்கு உட்படுத்டுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஒரு குறிப்பிட்ட அரசியல் தலைமையை மட்டும் விமர்சிப்பது முதல், சர்வதேச அரசியலில் முதிர்ச்சி உள்ளவர் போல அவர்கள் பேசும் பேச்சுக்களே அவ்வாறு எண்ணத் தூண்டுகிறது.

(“எழுபதுகளில் இருந்து மாறுபட்ட இன்றைய மாணவர் செயல்!?” தொடர்ந்து வாசிக்க…)

வேலையில்லாதவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உற்பத்திசார் பொருளாதார கொள்கைகளே தேவை

(கருணாகரன்)

வேலைகோரும் பட்டதாரிகள் வீட்டிலும் வீதியிலுமாக நிறைந்து போயிருக்கிறார்கள். படித்துப் பட்டம் பெற்ற பிறகு வேலை கிடைக்கவில்லை என்றால், அவர்களால் என்ன செய்ய முடியும்? வேலை கேட்டுப்போராடுவார்கள். இந்தப் போராட்டத்தைப் பற்றி அரசாங்கம் அக்கறைப்படவில்லை என்றால், அதைக் கோவிப்பார்கள், அரசாங்கத்துக்கு எதிராகக் குரல் எழுப்புவார்கள். கூடவே தங்களுக்கு முன்னே உள்ள அரசியல்வாதிகளையும் அதிகார அமைப்புகளையும் எதிர்ப்பார்கள். இப்போது நடந்து கொண்டிருப்பது இதுதான்.

(“வேலையில்லாதவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உற்பத்திசார் பொருளாதார கொள்கைகளே தேவை” தொடர்ந்து வாசிக்க…)

ஜக்கி:விலைபொருளாக்கும் வித்தை கூடியவர்.

தேசத்தின் பொருளாதாரத்தில் சுற்றுலாப் பொருளாதாரம் எப்போதும் முக்கியமான பங்கு வகிக்கின்றது. அதிலும் பன்னாட்டு மூலதனப் பெருக்கத்திற்குப் பின் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதனால் ஒவ்வொரு நாடும் சுற்றுலாத் தலங்களை உருவாக்கி விளம்பரப்படுத்தி விற்கின்றன. பல நாடுகளின் சுற்றுலாக் கையேடுகளைக் கண்டும் வாசித்தும் பார்த்தால், அந்நாடுகளில் விற்பனைக் கருத்தியல் என்ன என்பதை உணர முடியும்.

(“ஜக்கி:விலைபொருளாக்கும் வித்தை கூடியவர்.” தொடர்ந்து வாசிக்க…)