இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று உயர்வு

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டு நாணய மாற்று விகிதங்களுக்கமைய இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று உயர்வடைந்துள்ளது. எனினும், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மாறாமல் உள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின் படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை மாற்றமின்றி 369 ரூபாய் 91 சதமாக உள்ளது. அத்துடன், அவுஸ்திரேலிய மற்றும் கனேடிய டொலர்களுக்கு எதிராக ரூபாயின் பெறுமதி சற்று உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் ஸ்டெர்லிங் பவுண்டுக்கு எதிராக மேலும் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

2 இலட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்

மின் கட்டண அதிகரிப்பால் பல நிறுவனங்களை நடத்த முடியாமல் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் ஏறக்குறைய இரண்டு இலட்சம் தொழிலாளர்கள் வேலைகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தொழிலாளர் சங்கத் தலைவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வடக்கு, கிழக்கு மக்களின் நிலங்களை தொல்பொருள் திணைக்களம் அபகரிக்கிறது

நிலங்கள் சம்மந்தமாக தொல்லியம் திணைக்களம் இது போல வெவ்வேறு சட்டங்களின் கீழ் இயங்கும் திணைக்களங்கள் மக்களுடைய காணிகளை அபகரிக்கும் செயற்பாடு வடக்கிலும் கிழக்கிலும் நீண்ட காலமாக இடம் பெற்று வருகின்றது.என ஜனாதிபதி சட்டத்தரணியுமான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

உக்ரேன் தொடர்பில் புட்டின் விடுத்துள்ள அறிவிப்பு

உக்ரேனின் ஷெபோரீஷியா மற்றும் கேர்சன் ஆகிய பகுதிகளை சுதந்திர வலயங்களாக அறிவித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆணைப் பிறப்பித்துள்ளார். அத்துடன், இன்றைய தினம் கிழக்கு உக்ரேனின் நான்கு பகுதிகள் சர்வசன வாக்கெடுப்பின் பின்னர் ரஷ்யாவுடன் இணைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ரஷியாவின் செயலுக்கு ஐ.நா கடும் கண்டனம்

உக்ரேனில் ரஷியா கைப்பற்றிய நான்கு பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைக்கும் திட்டத்தை ரஷியா முன்னெடுத்து வருகிறது.

திலீபனை அவமானப்படுத்திய விடாக்கண்டன்களும் கொடாக்கண்டன்களும்

(புருஜோத்தமன் தங்கமயில்)

(தமிழ் மக்கள் மத்தியில் நிலவும் போலித் தேசியத்தை உரித்துக் காட்டுவதற்கு இந்த பதிவு)

வாக்கு அரசியலுக்காக எதையும் செய்யத் துணியும் பொறுக்கிக் கூட்டங்கள், இனம் ஒன்றின் விடுதலை அரசியலை ஆக்கிரமித்துவிட்டால், அந்த இனம் இலகுவாக அரசியல் நீக்கம் செய்யப்பட்டுவிடும். 

தேசிய பேரவையின் முதலாவது கூட்டம் இன்று

தேசிய பேரவையின் முதலாவது கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று கூடுகின்றது. இன்று காலை 10.30 மணிக்கு பாராளுமன்ற கட்டடத் தொகுதியின் குழு அறை 2இல் இக்கூட்டம் நடைபெறவுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேசிய பேரவையினை பரிந்துரை செய்திருந்தார். இதன் அடிப்படையில் 35 பேர் கொண்ட தேசிய பேரவையின் யோசனையை பிரதமர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றில் கடந்த 20ஆம் திகதி முன்வைத்திருந்தார். அந்த யோசனை வாக்கெடுப்பின்றி சபையில் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

FitsAir takes to smarter flying as Sri Lanka’s first private scheduled intl. carrier

  • Low-cost operator announces thrice weekly flights from BIA to Dubai, Male’ and Trichy deploying A320-200s starting from 5 Oct.
  • Ex-Emirates, SriLankan, Oman Air and aviation veteran Peter Hill as Vice President says FitsAir will make regional travel affordable and reliable
  • In tandem with demand plans to increase frequencies and destinations within South Asia, Middle East and Southeast Asia
  • Aberdeen Holdings’ subsidiary Fits Aviation with 25 years of dedicated freighter services, plans to operate FitsAir intl. passenger flights from Jaffna as mini-hub to Southern India and Ratmalana as well as domestic scheduled services

கொழும்பில் புதிய இராணுவ முகாம்கள்

உயர் பாதுகாப்பு வலயம் என்கிற பெயரில் அரசாங்கம் கொழும்பில் இராணுவ முகாம்களை அமைத்துள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.