யாழில் கசிப்புடன் கைதான மாணவன்

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை  ஊரிப் பகுதியில் 3 லிட்டர் கசிப்புடன் கைது செய்யப்பட்ட 15 வயதுடைய பாடசாலை மாணவனை, அச்சுவேலி பகுதியில் அமைந்துள்ள சான்று பெற்ற சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் ஒப்படைக்குமாறு யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்ற நீதவான் திங்கட்கிழமை  உத்தரவிட்டார். குறித்த மாணவன்  3 லிட்டர் கசிப்பு மற்றும் 16 லிட்டர் கோடாவினை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு இருந்தான்.   கைது செய்யப்பட்ட சிறுவனை விசாரணைகளின் பின்னர்  யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றத்தில் முற்படுத்திய போதே சிறுவனை நன்னடத்தை பாடசாலையில் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். 

2023 ஆண்டுக்கான செலவு எகிறியது : கடனும் கூடியது

அரசாங்கத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான வருமானம் செலவை விடவும் குறைவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், அரசாங்கத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான செலவு 7,885 மில்லியன் ரூபாயென மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான நிதியொதுக்கீட்டு பிரேரணைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

உணவு பொருட்களின் விலைகளும் எகிறின

கொத்துரொட்டி, பிரைட் ரைஸ் மற்றும் சோற்றுப் பொதி ஆகியவற்றின் விலைகள் 10 ரூபாவினால் அதிகரிக்கப்படுமென அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார். சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி மற்றும் பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று உயர்வு

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டு நாணய மாற்று விகிதங்களுக்கமைய இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று உயர்வடைந்துள்ளது. எனினும், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மாறாமல் உள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின் படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை மாற்றமின்றி 369 ரூபாய் 91 சதமாக உள்ளது. அத்துடன், அவுஸ்திரேலிய மற்றும் கனேடிய டொலர்களுக்கு எதிராக ரூபாயின் பெறுமதி சற்று உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் ஸ்டெர்லிங் பவுண்டுக்கு எதிராக மேலும் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

2 இலட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்

மின் கட்டண அதிகரிப்பால் பல நிறுவனங்களை நடத்த முடியாமல் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் ஏறக்குறைய இரண்டு இலட்சம் தொழிலாளர்கள் வேலைகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தொழிலாளர் சங்கத் தலைவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வடக்கு, கிழக்கு மக்களின் நிலங்களை தொல்பொருள் திணைக்களம் அபகரிக்கிறது

நிலங்கள் சம்மந்தமாக தொல்லியம் திணைக்களம் இது போல வெவ்வேறு சட்டங்களின் கீழ் இயங்கும் திணைக்களங்கள் மக்களுடைய காணிகளை அபகரிக்கும் செயற்பாடு வடக்கிலும் கிழக்கிலும் நீண்ட காலமாக இடம் பெற்று வருகின்றது.என ஜனாதிபதி சட்டத்தரணியுமான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

உக்ரேன் தொடர்பில் புட்டின் விடுத்துள்ள அறிவிப்பு

உக்ரேனின் ஷெபோரீஷியா மற்றும் கேர்சன் ஆகிய பகுதிகளை சுதந்திர வலயங்களாக அறிவித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆணைப் பிறப்பித்துள்ளார். அத்துடன், இன்றைய தினம் கிழக்கு உக்ரேனின் நான்கு பகுதிகள் சர்வசன வாக்கெடுப்பின் பின்னர் ரஷ்யாவுடன் இணைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ரஷியாவின் செயலுக்கு ஐ.நா கடும் கண்டனம்

உக்ரேனில் ரஷியா கைப்பற்றிய நான்கு பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைக்கும் திட்டத்தை ரஷியா முன்னெடுத்து வருகிறது.

திலீபனை அவமானப்படுத்திய விடாக்கண்டன்களும் கொடாக்கண்டன்களும்

(புருஜோத்தமன் தங்கமயில்)

(தமிழ் மக்கள் மத்தியில் நிலவும் போலித் தேசியத்தை உரித்துக் காட்டுவதற்கு இந்த பதிவு)

வாக்கு அரசியலுக்காக எதையும் செய்யத் துணியும் பொறுக்கிக் கூட்டங்கள், இனம் ஒன்றின் விடுதலை அரசியலை ஆக்கிரமித்துவிட்டால், அந்த இனம் இலகுவாக அரசியல் நீக்கம் செய்யப்பட்டுவிடும்.