மஹிந்த – இந்தியா உறவு: காதலா, வியாபாரமா?

(எம்.எஸ்.எம். ஐயூப்)

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுடன், பிரதமர் நரேந்திர மோடியின் இந்திய அரசாங்கத்துக்கு ஏதாவது பிரச்சினை இருந்திருந்தால், தரகராகப் பாவிக்கப்படுவதற்கு மிகவும் பொருத்தமானவர், பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன்சுவாமியே ஆவார். எனவே, இப்போது ஏதோ ஒரு காரணத்துக்காக, இந்திய அரசாங்கத்துக்கு, மஹிந்த ராஜபக்‌ஷவின் நட்புத் தேவையாக இருந்தால், மீண்டும் உறவை ஏற்படுத்திக் கொள்ள, சுப்ரமணியன்சுவாமியையே தரகராகப் பாவிப்பதற்கு, பிரதமர் மோடி ஆர்வமாயிருப்பார்.

(“மஹிந்த – இந்தியா உறவு: காதலா, வியாபாரமா?” தொடர்ந்து வாசிக்க…)

புலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part5)

சனங்கள் தங்களின் சேமிப்பிலும் சேகரிப்பிலுமிருந்த பொருட்களையே எடுத்துச்செல்ல முடியாத நிலையில் படை நடவடிக்கைகள் தீவிரமடைந்ததால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் கட்டாய ஆட்சேர்ப்பைத் தவிர்க்கும்படியும், போருத்திகளை மாற்றி அமைக்குமாறும், அமைதிப் பேச்சுக்குத் திரும்பும்படியும் இந்தியாவோடு இணக்கத்துக்குப் போகுமாறும் சிலர் புலிகளை வலியுறுத்தினர். ஆனால் புலிகளின் தலைமையோ பிடிவாதமாக மரபுவழி இராணுவ நடவடிக்கையிலேயே குறியாக இருந்தது. வேறு எவருடைய எந்தவிதமான அபிப்பிராயங்களையும் அது பொருட்படுத்தத் தயாராக இருக்கவில்லை. சனங்கள் படுகின்ற அவலத்தையோ அவர்களின் துயரத்தையோ புலிகள் பொருட்படுத்தவில்லை. சிங்களத் தரப்பை மிகக் கொடூரமான வரலாற்று எதிரி என்று வர்ணித்து அதற்குத் தக்க பாடம் படிப்பிக்க வேண்டும் என்று தமது நடவடிக்கையை மேற்கொண்டனர். கிளிநொச்சியைப் படைத்தரப்பு கைப்பற்றும் வரையில் புலிகள் ஏதாவது உத்திகளைக் கையாண்டு படைத் தரப்பைச் சிதைத்து வெல்வார்கள் என்ற நம்பிக்கை சனங்களுக்கிருந்தது உண்மையே. அந்த நம்பிக்கையோடு தான் அவர்கள் இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர். தமது ஆட்சி, அதிகாரம் அரசுக் கட்டுமானம் என்ற கனவு குலைந்துபோகும் எனப் புலிகள் அஞ்சினார்கள். அதனாலேயே அவர்கள் மரபுவழியான நடவடிக்கையைத் தொடர்ந்தனர்.

(“புலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part5)” தொடர்ந்து வாசிக்க…)

தெஹ்ரான் உடன்படிக்கை

(ஜனகன் முத்துக்குமார்)

துருக்கி, ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகளின் ஜனாதிபதிகள், முத்தரப்பு உச்சிமாநாடொன்றை, இம்மாதம் 7ஆம் திகதியன்று, தெஹ்ரானில் நடத்தினர். பல பார்வையாளர்களின் கருத்துப்படி, உச்சிமாநாட்டின் முடிவுகள், சிரியாவின் வடமேற்கில் உள்ள இட்லிப் நகரின் விதியை, குறிப்பாக போராளிக் குழுக்களைத் தகர்த்தல் தொடர்பாகத் தீர்மானிக்க ஏதுவாய் இருந்தது எனக் கருதப்படுகின்றது. இது டமாஸ்கஸ் தொடர்பில் இந்நாடுகள் மேற்கொண்ட கலந்துரையாடல்கள், அதனைத் தொடர்ந்து டமாஸ்கஸிலிருந்து ஆயுததாரிகள் வெளியேற்றப்பட்டமையைத் தொடர்ந்தே, இட்லிப் நகர் தொடர்பான மாநாடு நடைபெற்றுள்ளது.

(“தெஹ்ரான் உடன்படிக்கை” தொடர்ந்து வாசிக்க…)

எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த…….! (Part 6)

இன்றைய நாளின் இறுதி பயணமாக மாதகல், கீரிமலை, காங்கேசன்துறை என்று கடந்த வருடம் முற்பகுதியில் உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசத்தை பார்வையிடுவது எனத் தீர்மானித்து பண்ணைப் பாலத்தினூடு யாழ் பெரு நிலப்பரபை அடைந்தேன். நேரப் பற்றாக்குறையை சரி செய்ய நாவாந்துறைஇ காக்கைதீவு சந்தியூடாக மானிப்பாயை அடைந்து சித்தங்கேணி பண்டத்தரிப்பு ஊடாக மாதகல் கடற்கரையை அடைவது திட்டம். எனக்கு மிகவும் அத்துப்படியான பிரதேசங்கள் இவை. எனது வழிகாட்டல்களும்? சந்திகளில் திருப்பல் என்ற குறுக்குப் பாதை அறிவுறுத்தல்களும் எனது வான சாரதிக்கு ஆச்சரியமாக இருந்தாலும் எனக்கு இது ஒன்றும் 30 வருடங்கள் கடந்தாலும் எனக்கு புதிதாக தோன்றவில்லை.

(“எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த…….! (Part 6)” தொடர்ந்து வாசிக்க…)

குற்றத்துக்கு தண்டனை நிச்சயம் கிடைக்கவேண்டும்

குற்றத்துக்கு தண்டனை நிச்சயம் கிடைக்கவேண்டும் செய்த தவறை நினைத்து நினைத்து சம்பந்தப்பட்டோர் வருந்தவேண்டும்.அதுவும் பாரத தேசத்தின் பெரும் தலைவரான ராஜீவ் காந்தியையும் , ஈழ மக்கள் தலைவர் பத்மநாபாவையும் புலிகள் கொன்றதற்கு அவர்கள் சரியான தண்டனையை அனுபவிக்க வேண்டும் அனுபவித்தும் விட்டார்கள். (“குற்றத்துக்கு தண்டனை நிச்சயம் கிடைக்கவேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)

திலீபன் சிறுவயதில் தாயைஇழந்த ரௌடியா? தியாகியா?

1. தமிழ்க்கவி(Thamayanthy Ks) சொல்கிறார்.
“உண்ணாவிரத மேடைக்குப் போகும் போதே திலீபன் இறப்பது …நிச்சயம் என்பது உறுதியாகவே இருந்தது. இடையில் நடந்ததெல்லாம் நாடகத்தின் காட்சிகளே.மக்களை புலிகளின்பால் மீட்டெடுக்க இந்த நாடகம் தேவையாக இருந்தது. இந்திய அமைதிப்படையின் வருகை புலிகள் விரும்பாத விடயம். வீணாக கொடுத்த விலை. அவ்வளவே.”

(“திலீபன் சிறுவயதில் தாயைஇழந்த ரௌடியா? தியாகியா?” தொடர்ந்து வாசிக்க…)

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் முரண்பாடு

தியாக தீபம் திலீபனின் 31ஆவது ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் முதல் நாள் நிகழ்வு, இன்று (15) ஆம்பிக்கப்பட்ட நிலையில் நிகழ்வில் அரசியல் கட்சி உறுப்பினர்களுக்கிடையில் வாய்தர்க்கம் ஏற்பட்டது. பருத்தித்துறை வீதி – நல்லூர் பகுதியில் அமைந்துள்ள திலீபன் நினைவு தூபியில், மேற்படி நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

(“திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் முரண்பாடு” தொடர்ந்து வாசிக்க…)

விக்னேஸ்வரனின் செவ்வியும் ஊடகங்களும்

முதலமைச்சர் விக்னேஸ்வரனின் செவ்வி ஒன்று, கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியாகி இருந்தது. கூட்டமைப்புத் தலைமைக்கும், அவருக்கும் இடையிலான பனிப்போர், தீவிரம் பெற்ற பின்னர், அவர், விரிவாகப் பல விடயங்களைப் பேசிய ஒரு செவ்வியாக இது இருந்தது.  அந்தச் செவ்வி வெளியானதுமே, அதைத் தமிழ் மொழியாக்கம் செய்து, முதலமைச்சரின் செயலகம், பெரும்பாலான தமிழ் ஊடகங்களுக்கு அனுப்பியிருந்தது.தமிழ் ஊடகங்களும் அப்படியே வெளியிட்டிருந்தன.

(“விக்னேஸ்வரனின் செவ்வியும் ஊடகங்களும்” தொடர்ந்து வாசிக்க…)