என் பார்வையில் இந்தக்கொலைகள்

நான் எனது பதிவுகளில் அடிக்கடி நினைவூட்டுவது என்னவென்றால், விடுதலை போராட்டத்தில் போராடி இறந்தவர்களையும்,
தற்போது போராட்டத்தை விட்டு உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் ஒதுங்கி இருப்போர்களையும்,
புனர்வாழ்வு பெற்று இருப்போரையும் மதிக்கிறேன், அவர்களில் சிலர் ஆரம்பகால அடிமட்ட போராளிகளிகளாக
இருந்தவர்கள்,பெரும் தலைமை பொறுப்புகளில்,இருந்தவர்கள், டிரைவர் ஆக இருந்தவர்கள், புலனாய்வுத்துறையில் இருந்தவர்கள், காவல்துறையில் இருந்தவர்கள்,காவல் துறை தலைமை அதிகாரியாக இருந்தவர்கள், ஏரியா பொறுப்பாளர்களாக இருந்தவர்கள்,
பெரிய தளபதிகளுக்கு பாதுகாவலர்களாக
இருந்தவர்கள் , அனுராதபுரத்தில் விகாரையில் சுட்டு பிக்குகளையும் பொதுமக்களையும் கொன்றவர்கள்,சகோதர அமைப்புகளை கொலை செத்தவர்கள் என இன்னும் பெயர் குறிப்பிட முடியாத நல்ல நண்பர்கள் எனது முகப்புத்தகத்தில் இருக்கிறார்கள்,
ஆனால் இந்த புலிவாலுகளையும் , புலி பினாமிகளையும்தான் அடியோடு வெறுக்கிறேன். (“என் பார்வையில் இந்தக்கொலைகள்” தொடர்ந்து வாசிக்க…)

போரில் உயிரிழந்த எமது உறவுகளுக்கு அஞ்சலிகள்.

இது யாரால் ஏற்பட்டது ?

சகோதர படுகொலைகளும், இரு நாடுகளின்
இருபெரும் தலைவர்களான ராஜீவ் காந்தி,
பிரேமதாசா உட்பட, பத்மநாபா
அமிர்தலிங்கம் ,துரையப்பா ,லக்ஸ்மன் கதிர்காமர் , ஆகிய பெரும் தலைவர்களையும்
புலிகள் கொன்றது தான் முள்ளிவாய்க்காலின் அவலத்துக்கு முக்கிய காரணமாகும். மூர்க்கத்தனமாகவும் ,முட்டாள்தனமாகவும் செயல்பட்ட புலிகள் இந்த சகோதரப்படுகொலைகளையும், தலைவர்களையும் கொன்றவுடனே
செத்துவிட்டார்கள். (“போரில் உயிரிழந்த எமது உறவுகளுக்கு அஞ்சலிகள்.” தொடர்ந்து வாசிக்க…)

Another USAID covert plan exposed

According to an investigation by the Associated Press, the U.S. Agency for International Development, USAID, attempted to infiltrate the Cuban hip-hop movement as part of a covert project to destabilize the country.

AUTOR: ACN

According to an investigation by the Associated Press, the U.S. Agency for International Development, USAID, attempted to infiltrate the Cuban hip-hop movement as part of a covert project to destabilize the country.

(“Another USAID covert plan exposed” தொடர்ந்து வாசிக்க…)

விதைத்தவர்கள் உறங்கலாம் ஆனால் விதைகள் உறங்குவதில்லை(பாகம் 1)

(Sham Varathan)

30 வருடங்களுக்கு மேல் மேற்கொள்ளப்பட்ட அகிம்சை போராட்டம் , பெரும்பான்மை இனத்தவரின் இரும்புக் கரம் கொண்டு ஆயுத முனையில் அடக்கப்பட்ட போது கிளர்ந்து எழுந்த இளைஞர்கள் மத்தியில் தடம்பதித்தவர்கள் இருவர்.

(“விதைத்தவர்கள் உறங்கலாம் ஆனால் விதைகள் உறங்குவதில்லை(பாகம் 1)” தொடர்ந்து வாசிக்க…)

எங்களினுடைய பிழைகளை ஏன் கருணாநிதி மீது போடுகிறீர்கள்?

கருணாநிதி அவர்கள் தன்னுடைய கடைசிக் காலங்களில் மருத்துவமனையில் இருந்த போதும், மரணித்த போதும் “நாம் தமிழர்” அமைப்பினர் மற்றும் சில இலங்கைத் தமிழர்கள் மிகக் கடுமையான விமர்சனங்களை வைத்தார்கள். ஈழத் துரோகி என்பது தொடங்கி தெலுங்கர் தமிழர்களைக் காட்டிக் கொடுத்து விட்டார் என்பது வரையான இனவெறி, சாதிவெறி கொண்ட இழிவான தாக்குதல்களை காணக் கூடியதாக இருந்தது. விமர்சனம், சுய விமர்சனம் என்பன இல்லாத எந்தவொரு போராட்டமும் முன்னோக்கிச் செல்ல முடியாது. தம்முடைய தவறுகளை மற்றவர்களின் தலை மீது சுமத்துவது என்பது மற்றுமொரு அழிவிற்கே நம்மை மறுபடியும் இட்டுச் செல்லும்.

(“எங்களினுடைய பிழைகளை ஏன் கருணாநிதி மீது போடுகிறீர்கள்?” தொடர்ந்து வாசிக்க…)

மரணத்தை கொண்டாடும் மனநோயாளிகள்

(கருணாகரன்)

07.08.2018 மாலை 6.40 அளவில் கிளிநொச்சி நகரத்தில் பட்டாசுகள் வெடித்தன. அந்த நேரம் எதற்காக இப்படித் திடீரென வெடி கொழுத்தப்படுகிறது என்று பக்கத்தில் நிvediன்ற கடைக்காரரைக் கேட்டேன். அவருக்கும் விவரம் தெரியவில்லை. சற்று நேரத்தில் வெடிச்சத்தம் கேட்ட திசையிலிருந்து வந்தவர்களிடம் விசாரித்தோம். அது கருணாநிதி இறந்த சேதி அறிந்து வெடி கொழுத்துகிறார்கள் என்று சொல்லிக்கொண்டு போனார்கள். மனதில் கவலை ஏறியது.

(“மரணத்தை கொண்டாடும் மனநோயாளிகள்” தொடர்ந்து வாசிக்க…)

சட்டம் எப்போதுமே ஏழைகளுக்கு எதிரானது

அண்மையில் நாவற்குழி தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான வீடுகளில் குடியேறிய சிங்கள மக்களுக்கு எதிராக சட்டத்தரணி கேசவன் சயந்தன்( மாகாணசபை உறுப்பினர்) வழக்கு தொடுத்ததாக செய்திகளில் படித்தேன். இந்த வழக்கு சட்டரீதியாக சரியாக இருக்கலாம்.இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியது தேசிய வீடமைப்பு அதிகாரசபை மற்றும் அரசாங்க அதிபர் அவர்களுமே. அவர்கள் அதை செய்யாதது தவறு.

(“சட்டம் எப்போதுமே ஏழைகளுக்கு எதிரானது” தொடர்ந்து வாசிக்க…)

பேட்டைக்காரன் கலைஞர்.

(தமிழ்ப் பிரபா)

கலைஞரைப் பற்றி இங்கே எழுதக்கூடிய நிதானமான மனச்சூழல் இப்போதுதான் கிடைத்தது. கலைஞர் செய்த முக்கியமானதொரு காரியமாக என்னளவில் நினைப்பது, ‘மெட்ராஸ்’ கூவத்தை ஒட்டி வாழ்ந்த குடிசைப்பகுதி மக்களுக்கு ஹவுசிங் போர்டு கட்டிக் கொடுத்தது. ஏறத்தாழ நாற்பதாண்டுகளுக்கு முன் ‘குடிசை மாற்று வாரியம்’ என்று அவர் தொடங்கிய ஹவுசிங்போர்டு திட்டம் அடித்தட்டு மக்களின் வாழ்வியலில் மிகப்பெரிய உளவியல் பலத்தை சேர்த்தது. கலாசார மாற்றத்தைக் கொண்டுவந்தது. தங்களிடையே இப்படியொரு மாற்றத்தை நிகழ்த்திய கலைஞரையும் மக்கள் இன்றளவும் விட்டுக் கொடுத்ததில்லை.

(“பேட்டைக்காரன் கலைஞர்.” தொடர்ந்து வாசிக்க…)

கேரளாவில் 22 பேர் இறந்திருக்கலாமென அச்சம்

இந்தியாவின் கேரளாவின் வயனட், இடுக்கியில் மழை தொடர்பான சம்பங்களால் குறைந்தது 22 பேர் இறந்திருக்கலாமென அச்சம் வெளியிடப்பட்டதுடன், டசின் கணக்கானோருக்கு மேல் காணவில்லை என்று கூறப்படுகிறது.

(“கேரளாவில் 22 பேர் இறந்திருக்கலாமென அச்சம்” தொடர்ந்து வாசிக்க…)