2002 பேச்சுவார்த்தைக்குப் பின் புலிகள் இயக்கத்தில் சலசலப்பு வந்தது.

2002 பேச்சுவார்த்தைக்குப் பின் புலிகள் இயக்கத்தில் சலசலப்பு வந்தது.

ஆனையிறவின் மகத்தான வெற்றிக்குப் பின்னும் புலிகள் யுத்தத்தை தொடரவில்லை. காரணம் பற்றாக்குறை.

யாழ்ப்பாணத்தார் வசதியானவர்கள் என்பதால் புலிகளுக்கு கப்பம் கட்டிவிட்டு ஐரோப்பா , கனடா என தப்ப, புலிகளின் ஆள்திரட்டல் குறி வறுமையான கிழக்குப் பக்கம் பதிந்தது.

இந்நிலையில் நார்வே வேறு பேசிக்கொண்டிருந்தது, இம்முறை புலிகள் முடிவிற்கு வந்தே தீரவேண்டும் என கட்டளை இட்டன மேற்குலக நாடுகள்.

(“2002 பேச்சுவார்த்தைக்குப் பின் புலிகள் இயக்கத்தில் சலசலப்பு வந்தது.” தொடர்ந்து வாசிக்க…)

“வெருகல் “

சகோதரர்களே ஒருவரை ஒருவர் கொன்று குதறி இரத்தத்தை குடித்து மகிழ்ந்த துயரம். வரலாற்றில் நினைவில் கொள்ளப்பட வேண்டிய கொலைக்களம். பிரபா-கருணா என இருவருமே வீழ்ச்சியை சந்தித்த நாள் April 10, 2004. @ On April 10th 2004, 175 Karuna cadres, including female cadres, were massacred in Verukal in an attack by the LTTE to prevent the separation. பி.கு: படம்-வடபகுதி தமிழர்களால் பெரிதாக கண்டுகொள்ளப்படாத வாகரையில் அமைந்துள்ள வெருகல் சம்பவத்தில் கொல்லப்பட்ட கிழக்கு புலிகளின் நினைவு தூபியும். பலியான தமது உரவுகளுக்காக இந்த நாளில் அஞ்சலி செலுத்துபவர்களும்.

கிளிநொச்சி மாவட்டம் அது பின்தங்கியே இருக்கின்றது

கிளிநொச்சி மாவட்டத்தின் அரசியல் தலைமைத்துவம் பிழைத்ததால் மாவட்டத்தின் கல்வி மிகப் பின்தங்கியிருக்கிறது.

கல்வி நிர்வாகத்தில்மோசமான முறையிலான அரசியல் தலையீடுகளைச் செய்தது –

கல்விக்கான பௌதீக வளத் தேவைகளை உரிய முறையில், உரிய காலத்தில் நிறைவேற்றத் தவறியது –

ஆசிரிய, அதிபர் இடமாற்றங்களில் அரசியல் விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் செய்தது –

போன்றவை இதற்குக் காரணங்கள்.

(“கிளிநொச்சி மாவட்டம் அது பின்தங்கியே இருக்கின்றது” தொடர்ந்து வாசிக்க…)

வடமாகாண சபை உறுப்பினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

முல்லைத்தீவில் இடம்பெறுகின்ற திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த கோரி, வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் முன் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். முல்லைத்தீவுக்கு இன்று (10) விஜயம் செய்த வடமாகாண சபையின் உறுப்பினர்கள், அங்கு இடம்பெறும் திட்டமிட்ட குடியேற்றங்கள், சட்டவிரோத விகாரை அமைக்கும் பணி, அத்துமீறிய கடற்றொழில் நடவடிக்கைகள் நடைபெறும் இடங்களுக்கு நேரடியாகச் சென்று நிலைமைகளை பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து மாவட்டச் செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்ததுடன், ஜனாதிபதிக்கான மகஜர் ஒன்றையும் மாவட்டச் செயலரிடம் கையளித்துள்ளனர்.

‘இதய பூமி’; இன்று ‘இருள் நிறைந்த பூமி’

(காரை துர்க்கா)
சங்ககால குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற நிலத்துக்கே உரித்தான சகல பண்புகளையும் தன்னகத்தே கொண்ட பெருமைகளையுடைய மாவட்டமாக, முல்லைத்தீவு மாவட்டம் விளங்குகின்றது. வடக்கு மாகாணத்துக்குட்பட்ட வவுனியா மாவட்டத்தின் பெரும் பகுதியையும் மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களின் சிறு பகுதிகளையும் கொண்டு, 1978ஆம் ஆண்டடில் உருவாக்கப்பட்டதே, இந்த முல்லைத்தீவு மாவட்டமாகும்.

(“‘இதய பூமி’; இன்று ‘இருள் நிறைந்த பூமி’” தொடர்ந்து வாசிக்க…)

வாகரை பிரதேச சபையின் தலைவராகத் தெரிவானவர் சற்று நேரத்தில் கைது

மட்டக்களப்பு, கோறளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேச சபையின் அதிகாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றிய சற்று நேரத்தில், அதன் தலைவரும் மற்றொரு உறுப்பினரும் கைது செய்யப்பட்டுள்ளனரென, வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதல் சம்பவமொன்று தொடர்பாகவே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனரெனப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த வாகரைப் பிரதேச சபையின் தலைவர் சிவஞானம் கோணலிங்கமும் உறுப்பினரான தெய்வேந்திரன் சத்தியநாதன் என்பவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

(“வாகரை பிரதேச சபையின் தலைவராகத் தெரிவானவர் சற்று நேரத்தில் கைது” தொடர்ந்து வாசிக்க…)

மொழிப் பிரச்சினையால் சபை அமர்வு ஒத்திவைப்பு

காலி மாநகர சபையில் ஏற்பட்ட மொழிப்பிரச்சினையால், சபையின் முதலாவது அமர்வு இன்று 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நகர மேயர் பிரியந்த சஹபந்து தலைமையில் இன்று சபை கூடிய போது, சபை நடவடிக்கைகள் சிங்கள மொழியில் முன்னெடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எம்.எப்.ரிஹான, சிங்கள மொழியை புரிந்தகொள்வதில் பிரச்சினை இருப்பதாகவும், தனக்கு மொழப் பெயர்ப்பாளர் ஒருவர் தேவை எனவும் வலியுறுத்திய நிலையில் சபையில் குழப்பம் ஏற்பட்டது.

(“மொழிப் பிரச்சினையால் சபை அமர்வு ஒத்திவைப்பு” தொடர்ந்து வாசிக்க…)

ஒரு தீர்ப்பும் ஒரு போராட்டமும்

(எம். காசிநாதன்)

இந்தியாவில் மீண்டுமொரு சமூக நீதிப் புரட்சி போல், வட மாநிலங்களில் கடுமையான போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கு எதிரான வன்முறைகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கும், ‘தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்களுக்கு எதிரான வன்முறைத் தடுப்புச் சட்டம் 1989’ பற்றி, நாட்டின் தலைமை நீதிமன்றமான உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புத்தான் இந்த சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

(“ஒரு தீர்ப்பும் ஒரு போராட்டமும்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழும் சிங்களமும் அரச கரும மொழிகள்; திருத்தச் சட்டம் விரைவில்

தமிழ் மற்றும் சிங்கள மொழியை அரச கரும மொழிகளாக்கும் வகையில் 21ஆவது திருத்தச் சட்டமூலத்தை எதிர்காலத்தில் நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அரச மொழிக் கொள்கையை மீறி செயற்படுகின்றமை தொடர்பிலான முறைப்பாடுகளை பதிவு செய்தல் மற்றும் மொழிப் பிரச்சினை தொடர்பில் கையாளும் அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அமைச்சரவை மாற்றம் தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து தீரமனாங்களை மேற்கொள்வார்கள் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

தோழர் ரஞ்சித் 03.04.1986 அன்று கடற்படையினரின் முற்றுகையில் போரிட்டு வீரகாவியமாகிய நாள்.

ரஞ்சித் தோழர் அல்லது பெரிய ரஞ்சித் தோழர் என்று தோழர்களால் பாசத்தோடு அழைக்கப்பட்டவர்.1978ம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட சூறாவளி அனர்த்தத்தை தொடர்ந்து நிவாரண வேலைகளுக்காக தோழர் நாபாவின் தலைமையில் சென்ற குழுவினருடன் இனைந்து பணியாற்ற முன்வந்த கிழக்குமாகான இளைஞ்ஞர்களில் தோழர் ரஞ்சித்தும் ஒருவர். களுவாஞ்சிக்குடியை பிறப்பிடமாக கொண்ட வர். கல்வியிலும் பொருளாதார வளங்களிலும் செழிப்பான குடும்பப்பின்னணியிலிருந்து வந்தவர்.பார்ப்பதிற்கு மிகவும் துடிப்புமிக்க, அழகானகட்டமைப்புடைய உடலமைப்பைக்கொண்ட இளைஞனாகவும் , மிடுக்கான பேச்சும் சில சிலசமயங்களில் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்துபவராகவும் காணப்படுவார்

(“தோழர் ரஞ்சித் 03.04.1986 அன்று கடற்படையினரின் முற்றுகையில் போரிட்டு வீரகாவியமாகிய நாள்.” தொடர்ந்து வாசிக்க…)