அறிவு என்பது நம் அறியாமையை நாம் அறிந்துகொள்வதே…

டபிஷ் கேர் பிஹாரில் பிறந்தவர். கவிஞர், புனைவு மற்றும் புனைவு சாரா எழுத்தாளர். முக்கிய நூல்கள் பலவற்றின் ஆசிரியர். டென்மார்க் பல்கலைக்கழகம் ஒன்றில் ஆங்கிலப் பேராசிரியர். அவரது சுவையான, சிந்தனையைத் தூண்டும் கட்டுரை ஒன்று இன்றைய The Hindu நாளிதழில் வந்துள்ளது.

(“அறிவு என்பது நம் அறியாமையை நாம் அறிந்துகொள்வதே…” தொடர்ந்து வாசிக்க…)

எழுப்பபடும் சந்தேகங்கள்

கொக்குவில்லில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பயிலும் இரண்டு மாணவர்கள் மீது காவல்துறையினரால் நிகழ்த்தப்பட்ட சர்ச்சைக்குரிய துப்பாக்கிச் சூடு

(டி.பி.எஸ் ஜெயராஜ்)

பகுதி – 1

கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் யாழ்பபாண பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் இரண்டு இளநிலை பட்டதாரி மாணவர்கள் தங்கள் உயிர்களைப் பலி கொடுத்துள்ளார்கள், காவல்துறையினரால் நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்படும் துப்பாக்கிச் சூடு ஆத்திரமூட்டும் அரசியல் சர்ச்சை எழுவதற்கு காரணமாக அமைந்துள்ளது. ஆரம்பத்தில் அந்த மரணங்கள் ஒரு விபத்து காரணமாக ஏற்பட்டது என்று அறிவிக்கப்பட்டது ஆனால் அதைத் தொடர்ந்து உந்துருளியில் பயணம் செய்த இரண்டு பேருக்கு காவல்துறையினர் நிறுத்தும்படி வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அவர்கள் கீழ்படிய மறுத்ததினால் காவல்துறையினர் அவர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக பின்னர் தெரிவிக்கப் பட்டது.

(“எழுப்பபடும் சந்தேகங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

நீதிபதி இளஞ்செழியனின் செயற்பாடுகள்…….

(Theepa Pirathy and Saakaran)
யாழ்மக்களின் மனங்களில் நீதித்தேவைதையாக வலம்வந்த யாழ்மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அவர்களை யாழ்பல்கலைக்கழக மாணவர்களின் இருவரினதும் இறப்பிற்கு பின்னர் சில இணையத்தளங்களிலும் முகநூலிலும் வசைபாடுவதை காணமுடிகின்றது.

(“நீதிபதி இளஞ்செழியனின் செயற்பாடுகள்…….” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கைக் குழப்பும் நிகழ்ச்சி நிரல்

(கே சஞ்சயன்)

வடக்கில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் முயற்சிகள், சாண் ஏறினால் முழம் சறுக்குகின்ற கதையாகவே நீண்டு செல்கின்றன. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தையடுத்து, பெரிதும் நம்பிக்கையோடு இருந்த தமிழ் மக்களுக்கு ஏமாற்றங்களும் இழப்புகளும் தான் மிஞ்சி நிற்கின்றன. அரசியல்த் தீர்வு, அரசியல் கைதிகளின் விடுதலை, காணிகள் விடுவிப்பு, படைக்குறைப்பு, மீள்குடியேற்றம், காணாமற்போனோர் பிரச்சினைக்குத் தீர்வு, போர்க்குற்ற விசாரணை என்று தமிழ் மக்கள் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் எதிர்பார்த்த விடயங்கள் ஏராளம்.

(“வடக்கைக் குழப்பும் நிகழ்ச்சி நிரல்” தொடர்ந்து வாசிக்க…)

கொலைகளுக்கான நியாயமும் கண்டனமும் நீதி கோரலும்

அண்மையில் வடபகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதனைத் தொடர்ந்து பல விதமான அறிவிப்புகள்-செய்திகள்-நடவடிக்கைகள்-ஆய்வுகள்-கண்டனங்கள்-நியாயப்படுத்தல்கள்-ஆறுதல்கள்-உரைகள் என்பன ஊடகப் பரப்பில் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. இதேவிதமான ஒரு சூழல் இற்றைக்கு சுமார் 17 மாதங்களுக்கு முன்னர் (13 மே 2015ல்) மாணவி வித்தியா கொலை சம்பவத்தையொட்டி ஏற்பட்டிருந்தது. அதற்கு இன்று வரை நீதித் தீர்ப்பு கிடைக்கவில்லை. நீதி கிடைக்கக் கூடிய திசையில் அவ் வழக்கு செல்லவதாக தென்படவும் இல்லை.

(“கொலைகளுக்கான நியாயமும் கண்டனமும் நீதி கோரலும்” தொடர்ந்து வாசிக்க…)

குளவிக் கூட்டை கலைக்காதீர்

(விஸ்வா)

வடக்கை ஒரு குழப்ப நிலையில் வைத்திருக்கும் வேலைகளை கடந்த அரசாங்கம் மேற்கொண்டிருந்தது. ஏதாவது ஒரு குற்றச் செயல் நடந்தால் அதனை விடுதலைப்புலிகளுடன் தொடர்பு படுத்தும் விதமான கருத்துக்கள் அக்காலங்களில் பரப்பப்பட்டன. விடுதலைப்புலிகளை மீளுருவாக்கம் செய்ய முனைவதாக குற்றம் சாட்டப்பட்டு பலர் கைது செய்யப்பட்டனர். பொது மக்கள் மேற்கொள்ளும் ஜனநாயக வழியிலான போராட்டங்களை குழப்புவதற்கு தயாராக பாதுகாப்பு தரப்பிலிருந்தே பலர் செயற்பட்டனர்.

(“குளவிக் கூட்டை கலைக்காதீர்” தொடர்ந்து வாசிக்க…)

தாயகம் திரும்பும் இலங்கை அகதிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது: இவர்கள் மீது இலங்கைஅரசு,வடக்கு,கிழக்கு மாகாண சபை விசேட கவனம் செலுத்தவேண்டும்.

தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பும் இலங்கை அகதிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்கள் மீது இலங்கைஅரசு,வடக்கு,கிழக்கு மாகாண சபை விசேட கவனம் செலுத்தவேண்டும்.
(அ.விஜயன்)
இலங்கையில் ஏற்பட்ட உள்ளாநாட்டு பிரச்சினை காரணணமாக தமிழகத்திற்கு அகதிகளாக சென்ற பலர் தமிழகத்தின் பல்வேறு முகாம்களில் வாழ்ந்து வருகிறார்கள்.இவர்கள் பல்வேறு காலகட்டங்களில் இலங்கையின் வடக்கு,கிழக்கு பகுயில் இடம்பெயர்ந்தவர்களாவர்.

(“தாயகம் திரும்பும் இலங்கை அகதிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது: இவர்கள் மீது இலங்கைஅரசு,வடக்கு,கிழக்கு மாகாண சபை விசேட கவனம் செலுத்தவேண்டும்.” தொடர்ந்து வாசிக்க…)

இனவாதம் வளர்க்க நெய் கொண்டு திரியும் தமிழ் அரசியல்வாதிகள்!!!

ஜெயபாலன். த உடன் இணைந்து சாகரன்

தங்கள் சொந்த அரசியல் லாபத்திற்காக எம் பி ஆசனத்திற்காக தமிழ் தேசியத்தை அழுங்குப் பிடியில் வைத்துள்ள தமிழ் அரசியல் தலைமைகளும் அவர்களைக் காவடி எடுக்கும் ஊடகங்களும் மக்களை பிளவுபடுத்தி இனவாதத்தைத் தூண்டுவதற்கு எப்போதும் நெய்கொண்டு திரிகின்றனர். அவர்களுக்கு அண்மையில் கிடைத்தது பொலிஸார் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொண்ட படுகொலைத் துப்பாக்கிப் பிரயோகம்.

(“இனவாதம் வளர்க்க நெய் கொண்டு திரியும் தமிழ் அரசியல்வாதிகள்!!!” தொடர்ந்து வாசிக்க…)

யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் கொலை: ஒரு புதிய தகவல்-நண்பர்கள் கவனத்திற்கு

(விஜய பாஸ்கரன் உடன் இணைந்து சாகரன்)

கொல்லப்பட்ட மாணவர்கள் தொடர்பான தெரிந்த சில நண்பர்களிடம் இன்று பகிர்ந்து கொண்டேன். இலங்கையில் போக்குவரத்து பொலிசாரின் லஞ்சம் காரணமாக ஆயுதங்கள் பறிக்கப்பட்டு நிராயுத பாணிகளாகவே பணிபுரிவதாக சொன்னார்கள்.ஒரு சிலரிடம் மட்டுமே ஆயுத பாவனைகள் உண்டு.

(“யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் கொலை: ஒரு புதிய தகவல்-நண்பர்கள் கவனத்திற்கு” தொடர்ந்து வாசிக்க…)

தீபாவளி: ஆக்கிரமிப்பாளர்களின் வெற்றித் திருநாள்!

இன்று இந்துக்கள் என அழைத்துக் கொள்ளும் பலர், தீபாவளியை வணிக மயப்படுத்தப் பட்ட பண்டிகையாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். தீபாவளி எதற்கு கொண்டாட வேண்டும் என்று, ஆயிரம் வருடங்களாக கூறப்பட்டு வரும் கதையை இப்போதும் தம் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள். “மக்களுக்கு கொடுமை செய்த நரகாசுரனை கிருஷ்ணன் அழித்த நாள்.” என்பதில் மறைந்துள்ள அரசியலை புரிந்து கொள்ள முடியாத படி மதம் கண்ணை மறைக்கின்றது.

(“தீபாவளி: ஆக்கிரமிப்பாளர்களின் வெற்றித் திருநாள்!” தொடர்ந்து வாசிக்க…)