தாயகம் திரும்பும் இலங்கை அகதிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது: இவர்கள் மீது இலங்கைஅரசு,வடக்கு,கிழக்கு மாகாண சபை விசேட கவனம் செலுத்தவேண்டும்.

தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பும் இலங்கை அகதிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்கள் மீது இலங்கைஅரசு,வடக்கு,கிழக்கு மாகாண சபை விசேட கவனம் செலுத்தவேண்டும்.
(அ.விஜயன்)
இலங்கையில் ஏற்பட்ட உள்ளாநாட்டு பிரச்சினை காரணணமாக தமிழகத்திற்கு அகதிகளாக சென்ற பலர் தமிழகத்தின் பல்வேறு முகாம்களில் வாழ்ந்து வருகிறார்கள்.இவர்கள் பல்வேறு காலகட்டங்களில் இலங்கையின் வடக்கு,கிழக்கு பகுயில் இடம்பெயர்ந்தவர்களாவர்.


இவர்களில் பலர் அண்மைக்காலங்களாக தாயகம் திரும்புவதில் ஆர்வம்காட்டி வருகின்றனர்.இவர்கள் சென்னை,திருச்சி.மதுரை விமானநிலையங்களில் இருந்து தாயகம் திரும்பி செல்கின்றனர்.இம்மாதம் மதுரை விமானநிலையத்தில் இருந்து 18.10.16 அண்று 30 பேர்களும் 25.10.16 அன்று 25நபர்களும் தாயகம் திரும்பினார்கள். திருச்சி விமான நிலையத்தில் இருந்து 27.10.16 இல் ஆண்கள் 25,பெண்கள் 15 என மொத்தம் 40 நபர்கள் நாடு திரும்பினார்கள்.இவர்கள் திருச்சி மாவட்டம் வாழவந்தான்கோட்டை, கொட்டப்பட்டு, ஈரோடு மாவட்டம் பவானிசாகர், சேலம் மாவட்டம் சித்திரக்கோயில் முகாம்களைச் சேர்ந்தவர்களாவர்.
பருத்தித்துறை குடத்தனை, மன்னார் அள்ளப்பிட்டி, திருகோணமலை, மூதூர் போன்ற இடங்களில் இருந்து 1990 மற்றுமும் 2006 இல் தமிழகத்திற்கு அகதிகளாக வந்தவர்களே திருச்சி விமைனநிலையத்தில் இருந்து 27.10.16 அன்று தாயகம் திரும்பியவர்களாகும்.

இவர்களை ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் திருச்சி வழியனுப்பும் குழுவின் நிர்வாகி திரு.விசாகபெருமாள் மற்றும் மதுரை மாவட்டத்தொண்டர் திரு.கனகராசா, ஆகியோர் திருச்சி விமானநிலையம் சென்று வழியனுப்பி வைத்தது. இவர்கள் மீது இலங்கை அரசு,வடக்கு,கிழக்கு மாகாண சபை விசேட கவனம் செலுத்தவேண்டும். இலங்கை ஆவணங்கள் மற்றும் இலங்கை பிறப்புச்சான்று என்னவற்றை எடுத்தச் செல்கிறார்களா? என கேட்டறிந்தனர். அத்துடன் இலங்கையில் உள்ள ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் பிராந்திய அலுவலகங்களின் விலாசம் மற்றும் தொலைபேசி இலக்கங்களையும் வழங்கினர்.

தாயகம் திரும்பியவர்களை வழியனுப்ப வந்திருந்த அவர்களது உறவுகள் இடையே பிரிவுத்துயரை அவதானிக்க கூடியதாக இருந்தது.
தாயகம் திரும்பியர்வகள் தமிழகமக்களுக்கும். தமிழ்நாட்டு அரசாங்கத்துக்கும் பெரிதும் நன்றிகடன் உள்ளவர்களாக இருப்போம் என்றும் இவ்வளவு காலமாமாக எம்மையும் எமது மக்களையும் அரவணைத்து ஆதரித்ததிற்கு மீண்டும் மீண்டும் தங்களது நன்றியினை தெரிவிப்பதாக, ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக்கழக பணியாளர்களிடம் கூறினார்கள்.

தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்புகிறவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளதுடன்,கப்பல் ஏற்பாடுகளுக்கு வழிவகுத்தால் அது இன்னும் பல மடங்டகு அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. கப்பல் பயணம் என்பது தாயகம் திரும்புகிறவர்களுக்கு பல நன்மைமைகளையும் கொடுக்கும்.
தாயகம் திரும்புக் அகதிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்.
இந்தியாவில் பிறந்த குழந்கைகளுக்கான இலங்கைப் பிறப்புச் சான்று மற்றும் குடியுருமைச் சான்று என்பன இவர்களிடம் கண்டிப்பாக இருக்க வேண்டும். இதனை பலர் முகாம்களில் இருக்கும்போதே சென்னையில் உள்ள துணைத்தூதரகத்தில் எடுத்திருப்பார்கள் சிலர் இதனை எடுக்க தவறியிருப்பார்கள். அல்லது இதனை எடுப்பதற்று அவர்களிடம் இலங்கைத் தூதரகத்தில் சபர்பிக்கவேண்டிய ஆவணங்கள் இல்லாதிருக்கும்..இங்கு பிறந்த குழந்தைகளுக்கு மேற்சொன்ன சான்றுகள் எடுப்பதற்கு குழந்தைஇந்தியாவில் பிறந்ததிற்கான பதிவு,தாய் தகப்பனின் திருமணப்பதிவு,தாய் தகப்பனின் இலங்கை பிறப்புச்சான்று அத்துடன் முகாம் அடையாளச் சான்று என்பவற்றை சமர்பிக்க வேண்டும்.இவை இல்லாத பட்சத்தில் உரிய ஆவணங்களைப் பெற்ற பின்னரே பிள்ளைகளுக்கான இலங்கை பிறப்பு மற்றும் குடிடிருமைச் சான்றுகளை இலங்கைத் தூதரகத்தில் பெறடியும்.
அதே போல் தழிகத்தில் கல்வி கற்ற மாணவர்கள் தாங்கள் இந்தியாவில் கல்வி கற்ற சான்றுகளை வைத்து இலங்கையில் கல்வியை தொடரமுடியும். கல்லூரி கல்வியை முடித்தவாகள் இலங்கை சென்றால் இலங்கையில் உள்ள பல்கலைக்கழக ஆணைக்குழுவில் சமவலுச் சான்று பெற்று அவர்கள் இலங்கையில் வேலை வாயப்பினை பெற்றுக் கொள்ள முடியும்.
தாயகம் திரும்பும் அகதிகள் விடயத்தில் இந்திய-இலங்கை அரசுகள், அவர்கள் தாயகம் திரும்பி அவர்களது, வாழ்வாதாரத்தைத் தொடர திட்டங்களை அவர்களுக்காக ஒழுங்குபடுத்தியாக வேண்டும். ஏனென்றால் பலவருடங்களாக அகதி வாழ்க்கை வாழ்ந்த அவர்கள் தங்களுக்ளுக்கான வாழ்வாதரத்திற்காக முதலில், இருந்து தொடங்கவேண்டிய நிலை உள்ளதால், தாயம் திரும்பும் அகதிகளுக்கான விசேட திட்டங்களே அவர்ளின் வலிகளுக்கு ஆறுதலைக் கொடுக்கும்.
இதில் வடக்கு.கிழக்கு மாகாண அரசுகளும் தங்களது மக்கள் தலைநிமிரச் செய்யும் செயற்பாட்டில் இறங்கவேண்டும். ஏனென்றால் தாயகம் திரும்புகிறவர்களில் அனேகமானோர் வடக்கு-கிழக்கைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். இவர்கள் தாயகம் திரும்பும்போது இவர்களை வடக்கு, கிழக்கு மாகாணசபையைச் சேர்தவர்கள் சென்று சந்தித்து அவர்களை மறுகுடியமர்த்துவதற்காகவும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் திட்டங்களை வகுத்தால் தாயகம் திரும்புகிறவர்களுக்கு அது ஒரு ஆறுதலைக் கொடுப்பதுடன் அம் மக்களின் மனக்காயங்களுக்கு அது நல்லநிவாரணியாவும் அமைந்துவிடும்.