140க்கும் அதிகமான வாக்குகளைப் பெறுவார்

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் நடத்தப்படவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் 140க்கு அதிகமான வாக்குகளைப் பெறுவார் என முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை குறித்து அதிரடி அறிவிப்பு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) மற்றும்  லங்கா ஐஓசி ஆகியவை எரிபொருள் விலையை இன்று இரவு 10 மணிமுதல் குறைக்கவுள்ளதாக அறிவித்துள்ளன. பெற்றோல் மற்றும் டீசல் விலையை 20 ரூபாயாலும் 95 ஒக்டேன் பெற்றோல் மற்றும் சுப்பர் டீசலின் விலை 10 ரூபாயாலும் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் சிக்கல்: வருகிறார் கோட்டா

ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்துள்ள கோட்டாபய ராஜபக்ஷ, அடுத்த மாதம் இலங்கை திரும்புவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சீனாவின் குள்ளநரித்தனம்

இலங்கையில் நிலவி வரும் மோசமான நிலைக்கு ஒரு வகையில் சீனாவும் ஒரு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. இதுதொடர்பில் பல்வே வழிகளிலும் அலசி ஆராயப்பட்டு வருகின்றன. சீனாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்றன.

இலங்கை: அரசியல் களம் பாராளுமன்றத்திற்குள்ளாகச் சுருக்கப்பட்டுள்ளது

அரசியல் களம் பாராளுமன்றத்திற்குள்ளாகச் சுருக்கப்பட்டுள்ளது. மக்கள் தெரிவுக்கு இடமற்று, அந்த மக்கள் தெரிவு செய்த பிரதிநிதிகளின் தெரிவே இன்றைய ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் சட்ட நிலைப்பாட்டின் படி அரசியல் யாப்பு அமைந்திருப்பதால், காலிமுகத்திடல் கிளர்ச்சிக்கு எந்த முக்கியத்துவமும் அற்றும் போயிருக்கிறது.

தோழர் வரதராஜா பெருமாளின் ( எழுந்து முன்னேற முடியாமல் இறுகிப் போயிருக்கும் )” இலங்கையின் பொருளாதாரம்” நூல்

தோழர் வரதராஜா பெருமாளின் ( எழுந்து முன்னேற முடியாமல் இறுகிப் போயிருக்கும் )” இலங்கையின் பொருளாதாரம்” நூல் விரைவில் எமது பதிப்பக வெளியீடாக வெளிவருகிறது!

இந்தியாவின் அதிரடி அறிவிப்பு

ஜனநாயக வழிமுறைகள் மற்றும் பெறுமானங்கள், நிறுவனமயப்படுத்தப்பட்ட அமைப்புகள், மற்றும் அரசியலமைப்பு ரீதியான ஒரு கட்டமைப்பு ஆகியவற்றின் ஊடாக செழுமை மற்றும் முன்னேற்றத்திற்கான தமது அபிலாசைகளை நனவாக்குவதற்கு எதிர்பார்த்திருக்கும் இலங்கை மக்களுடன் தொடர்ந்தும் துணை நிற்பதாக இந்தியா மீண்டும் வலியுறுத்திக் கூறுகின்றது.  

உயர் பதவிகளுக்கு உச்சபட்ச போட்டி

புதிய ஜனாதிபதி பதவிக்காக பாராளுமன்றத்தில் நான்கு முனை யுத்தம் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும மற்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோருக்கு இடையிலேயே இந்த யுத்தம் உருவாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வேட்பாளர்களை கை விட்டது ’கை’

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது, எதிர்வரும் 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என்று தீர்மானித்துள்ளதாக கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

அனுர குமாரவும் அதிரடி தீர்மானம்

ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள வாக்கெடுப்பில், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க போட்டியிடவுள்ளார் எனவும் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் ஜேவிபியின் எம்.பியான விஜித ஹேரத் அறிவித்துள்ளார். பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும மற்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோர் போட்டியிடவுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த நிலையிலேயே அனுரகுமாரவின் அறிவிப்பும் வெளியாகியுள்ளது.