அடிமைத்தனத்திலிருந்து விடுதலை நோக்கி——-

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருமளவில் நிகழும் இடங்களாக எமது பிரதேசங்கள் மாறியுள்ளன. பெண்கள் சிறார்களுக்கான சமூக பாதுகாப்பு அச்சம் தரும் வகையில் குறைந்துள்ளது. ஆளரவமற்றுப்போகும் ஊர்கள் என்பன பெண்களுக்கெதிரான வன்முறைகளின் களமாக மாறுகின்றன.
கைக்கோடரி வாள் வீச்சு கோஸ்டிகள் பொதுவாக சமூகத்திற்கு மாத்திமல்ல குறிப்பாக பெண்களுக்கெதிரான வன்முறைகளை இலக்காக கொண்டவை.


இலங்கையின் சமூக வாழ்வை ஜனநாயக மயப்படுத்துவதே 2015 ஜனவரி 8 இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பிரதான வாக்குறுதியாக இருந்தது. இந்த பிராதான வாக்குறுதி கருதியே அனைத்து இன சமூக மக்களும் ஆட்சி மாற்றத்திற்கு வாக்களித்தார்கள்.
தற்போது அரசியல்யாப்பு சீர்திருத்தத்திற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அனால் இன சமூகங்களின் சமத்துவமான ஐக்கியம் ஒடுக்கப்பட்ட சமுகப் பிரவினர் பால்நிலை சமத்துவம் சுற்றாடல் பற்றிய அக்கறைகள் எந்தளவு தூரம் அழுத்தமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

சமகால உலகுடன் வேகமாக நடைபோட எம்மால் முடியவில்லை.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நில ஆக்கிரமிப்பு- பாலியல் வன்முறைகள் படுகொலைகள் தொடர்பான போராட்டங்களில் பெண்களே முன்நிலை வகிக்கிறார்கள்.
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படுவதும், பொது மற்றும் தனிப்பட்ட வாழ்வு கண்காணிக்கப்படுதல் மற்றும் அச்சமூட்டும் தொல்லைகள் இலங்கையில் பூரணமாக முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.

தொழில் துறைகள், கல்வி, உயர் கல்வி, மருத்துவம், சட்டம் ஆகியவற்றில் பெண்கள் குறிப்பிடத் தகுந்தளவு பிரவேசித்திருக்கிறார்கள் எனினும்
சமூக வாழ்வில் ஆண்- பெண் சமத்துவம் நிலைநாட்டப்படுவதற்கு இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது.
சமூகத்தில்- குடும்பத்தில் வன்முறை என்பது அன்றாட நிகழ்வாக இருக்கிறது
வன்முறை என்னும் போது செயல் ரீதியான வன்முறைகள் மாத்திரமல்ல. ஊடகம்- அரசியல்- குடும்பம் எல்லா இடங்களிலும் கருத்து -உளவியல் ரீதியாக அன்றாடம் இந்த வன்முறைகள் நிகழ்கின்றன.
நீதி- சமூக முன்னேற்றம்
மிகப் பிரபலமாக அறியப்பட்ட பாலியல் பலாத்கார படுகொலைகள் தொடர்பாகவே நீதி நிலை நாட்டப்படுவது தாமதமாகிறது!?
பல படுகொலைகள் வன்முறைகளின் பின்னணி இன்னும் அறியப்படாததாக மர்மம் நிறைந்ததாக இருக்கின்றன.
பொது வெளியிலும் குடும்பத்திலும் பெண்களின் சுதந்திரம் உறுதிப்படுத்தப்படாமல் சமூக பொருளாதார முன்னேற்றம் சாத்தியமில்லை.
குறிப்பிடத்தகுந்தளவு ஆண் பெண் சமத்துவம் நிலவும் நாடுகளில் அந்த முன்னேற்றங்களை நாம் அவதானிக்க முடியும்.
ஜனநாயகம் ,மனித உரிமை தொடர்பான உள்ளடக்கங்களை வலுப்படுத்துவதற்கும் ஒரு சமூகம் தன்னை நாகரிகமான சமூகமாக மறுசீரமைத்துக் கொள்வதற்கும்
இந்த சமத்துவம் உறுதி செய்யப்பட வேண்டும்.
ஒரு மக்கள் கூட்டம் எந்தளவு தூரம் நாகரிகமானது ,செழுமை மிகு பண்பாட்டைக் கொண்டது என்பது பால் சமத்துவம் ,சமூக நீதி எந்தளவு தூரம் பிரயோகிக்கப்படுகிறதென்று என்பதிலிருந்தே அளவிட முடியும்
காந்தியடிகள் கூறியது போல் நள்ளிரவில் தனியாக பெண் வீதியில் செல்வதற்கான சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
பட்டப் பகலில் கைக் கோடரி- வாள்களுடன் அட்டகாசம் புரிவோர் பரவலாக இருக்கும் சமூகத்தில் இராணுவ மயப்பட்ட சூழலில் பெண்களின் சுதந்திம் பாரிய அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கிறது.
ஆண் தலைமைத்துவ மரபார்ந்த சமூக முறைமைகள் ஆற்;றல் உள்ள பெண்களின் சமூக சந்தர்ப்பங்களை தலைமுறை தலைமுறையாக அழித்துள்ளது.
விஞ்ஞானிகளாகவும் ,மருத்துவர்களாகவும் கணித- சட்ட அறிஞர்களாகவும் , தொழில் துறைமுனைவோராகவும் எழுத்தாளர்கள் படைப்பாளர்களாகவும் கவிஞர்களாகவும் பிரகாசிக்க கூடிய பெண்கள் தலைமுறை தலைமுறையாக சமூகத்தளை- பாரம்பரிய விலங்குகள்- பாரச் சங்கிலிகளால் சந்தர்ப்பங்கள் இழக்கச் செய்யப்பட்டது மாத்திரமல்ல குடும்ப பெண்களாக வார்க்கப்பட்டிருக்கிறார்கள் . இது பிரக்ஞை அற்ற இயல்பானதென்று கருதப்படுகிற அடிமை முறையாகும்.
தமிழர்கள் மத்தியில் சமத்துவ சிந்தனை?
தமிழர்- தமிழ் என்று உணர்ச்சி வசப்படுத்தும் சமூக ஆதிக்க சக்திகளுக்கு இது பற்றிய கரிசனை எவ்வளவு தூரம் இருக்கிறது
தமிழ் அரசியல் சமூக அரங்கில் பெண்களுக்கான இடைவெளி காணப்படுகிறதா?
இந்த மரபார்ந்த இழிவிலிருந்து பெண்கள் விடுதலை பெற வேண்டும்.
படித்த சொந்த காலில் நிற்க கூடிய பெண்கள் கூட சீதன முறைமை உட்பட மரபு சம்பிருதாயங்களின் பெயரில் தமது ஆழுமையை அடையாளத்தை தொலைக்க வேண்டிய நிலை
தமது கல்வி இதர முயற்சிகளினூடாக பிரகாசித்த பெண்கள் கூட வெளிநாட்டில் தொழில் புரியும் ஒருவருக்கு மனைவியாகி விட்டால் தமது அறிவு ஆற்றல் ஆழுமைக்கு சம்பந்தமில்லாமல் வீட்டு வேலைகளில் முடக்கப்படும் நிகழ்வுகள் அனேகம். தாம் தீர்மானம் எடுக்கும் உரிமையை பல சந்தாப்;பங்களில் இழக்கிறார்கள்.
சட்டங்களில் பால் சமத்துவம் கணிசமான அளவு உள்ளடக்கப்பட்டிருந்தாலும் சமூகத்தில் எவ்வளவு தூரம் நடைமுறையில் சாத்தியமாகிறது
சமத்துவம் பாடசாலை மட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
பாடசாலை- அலுவலகங்கள்- ஆலயங்கள்- சம்பிருதாயங்கள் சடங்குகள் பொது வெளியில் பெண்களை கீழ்மைப்படுத்தும் அம்சங்கள் இயல்பு போல் சாதாரணம் போல் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
இந்த நிலை கலாச்சாரப் பெருமிதமாகப் பார்க்கப்படுகிறது.
யாழ் கலாச்சாரம் என்பது பெண்களை சிறுமைப்படுத்துவதையும் உள்ளடக்கியதே.
பால் நிலை – தீண்டாமை அநீதிகளை பேசாமல் கடந்து செல்வதே தமிழ் ஆதிக்க அரசியல் சமூக சிந்தனையின் சாரம்சம் ஆகும்.
எவ்வாறு சமத்துவத்தை நிலை நாட்டுவது???
• கல்வி அறிவூட்டல் , கல்வி முறையில் சீர்திருத்தம்
• பாடவிதானத்தில் பெண்கள் சமூக நீதி முன்னுரிமை
• செய்தி ஊடகங்களில் பால் சமத்துவத்தை உறுதி செய்தல்
• பிரக்ஞை உடனோ இல்லாமலோ பாரபட்சமான அநீதியான செய்திகள் வெளிவருகின்றன. குடும்பத்தில் வீட்டு வேலையில் இரு பாலருக்குமிடையே சமத்துவமான பகிர்வு.
• பொது வெளியில் பெண் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள்.
• மகப்பேறு காலத்திற்கு முன்னும் பின்னுமான விடுமுறைகாலம்
• பொது வெளியில் பெண்களுக்கான பாதுகாப்பான சுகாதாரமான கழிப்பறைகள்.
• பாடசாலை தொழில் புரியும் இடம் வீதிப் போக்குவரத்தில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்பான விழிப்பூட்டல்.
• பணிப்பெண்களாக மத்தியகிழக்குக்கு பெண்களை அனுப்புவது பற்றி மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
• ஒரே மாதிரியான நாள்- மணி நேர வேலைக்கு சமமான சம்பளத்தை உறுதி செய்ய வேண்டும்.
• பெண் தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு ஏற்பாடுகள் -தோட்டத்தொழிலாளர்கள்.
• காப்புறுதி தொழில் -பாதுகாப்பு -உடைகள் -வீடு பிள்ளைகள் பராமரிப்பு ஏற்பாடுகள்.
• மத கலாச்சார சம்பிருதாயங்களின் பேரில் பெண்கள் மீது திணிக்கப்படும் நிர்ப்பந்தங்களிலிருந்து விடுபடல்
• சுயமாக சிந்தித்து செயற்படுவதற்கான இடைவெளியை உருவாக்குதல் பாதுகாத்தல்.
• சீதனமுறையை இல்லாதொழித்தல்.
• நிர்வாக- சேவைத்துறைகளில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான வழிவகைகள்.
• மரபார்ந்த கல்வி முறைக்கப்பால் பால் சமத்துவத்தை வலியுறுத்தும் கல்வி இயக்கத்தை உருவாக்குதல்.
• மகளிர் சுய உதவிக்குழுக்களை விரிவாக்கல்
• பெண் தொழில் முனைவோரை உருவாக்குதலும் ஊக்கப்படுத்தலும்.
• அரசியல் அதிகாரக்கட்டமைப்புக்களில் பெண்களின் பிரதிநித்துவத்தை 50 வீதத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்படுதல்.
• சட்டம் மாத்திரமல்ல. மனநிலையில் மாற்றம் வேண்டும்.
• விவசாயம் ,மீன்பிடி, இதர கைவினை மற்றும் தொழில்களில் பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் கண்டறியப்பட வேண்டும்.
• பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களுக்கான விரிவான நம்பிக்கை அளிக்கக் கூடிய சமூக ஏற்பாடுகள்.
• கிராம நகர உழைக்கும் வர்க்க சமூக அநீதிகளை எதிர் நோக்கும் சமூகத்தின்; பெருவாரியான பெண்களின் நலன்களை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள்.
• சட்டங்களில் பெண்களின் உரிமைகள் தொடர்பாக பல ஏற்பாடுகள் இருந்தாலும் நடைமுறையில் அவை பிரயோகிக்கப்படுவதில்லை.
• சொத்துரிமை விவாகரத்துரிமை
போன்ற முக்கியமான விடயங்கள்
பெண்களின் சொத்து திருமணத்திற்குப் பின் ஆண்களுக்கும் தீர்மானிக்கும் உரிமையை வழங்குகிறது.
• சமய சடங்குகள் சம்பிருதாயங்களில் உள்ள இரண்டாம் பட்சமான நிலையிலும் மாற்றம் வேண்டும்.
• குடும்பச் சுமையை குறைப்பதற்கான வழிகள்
• மரபார்ந்த பிரக்ஞை அற்ற மேலாதிக்க சிந்தனைகளை களைவதற்கான செயற்திட்டங்கள்.
• பாடசாலைகள் -பல்கலைக்கழகங்கள்- சன சமூக நிலையங்கள்- காரியாலயங்கள்
• கல்வி வேலைவாய்ப்பு தொழில் விளையாட்டு போன்றவற்றில் சம சந்தர்ப்பத்தை உறுதி செய்தல்.
• பெண்களின பிரச்சனைகளை அணுகுவதற்கு வைத்திய சாலைகள் பொலிஸ் நிலையங்களில் பிரத்தியேக கட்டமைப்புக்கள்.
• மது -போதை வஸ்து மீதான கட்டுப்பாடுகள்.
• ஆதிக்க சிந்தனைக்கெதிரான கலைப்படைப்புக்கள் -ஆற்றுகைகள் -ஊடக விழிப்புணர்வு.
• சமூக ஊடகங்கள் ஊடாக விழிப்பூட்டல்
• அரசியலில் 50 வீதமான பிரதிநிதித்துவத்தை இடையறாது வலியுறுத்துதல்.
• பெண்கள் தொடர்பான இரண்டாம் பட்ச மனநிலையிலிருந்து விடுவித்தல்
• சமூக அசைவியக்கத்தில் ஒவ்வொரு திருப்பத்திலும் பெண் எவ்வாறு நிந்தனை செய்யப்படுகிறாள், சுரண்டப்படுகிறாள், அவமானப்படுத்தப்படுகிறாள் என்பது பற்றிய விழிப்புணர்வு அறிவூட்டல் அவசியம்.
• பெண்களை இரண்டாம் பட்சமாக கருதும் ஆன்மீக கலாச்சார மத இலக்கிய நூல்களில் இருந்து அப்பகுதியை நீக்குதல்
• வன்முறையற்ற சமூகமொன்று பற்றிய கற்பித்தல் விழிப்பூட்டல்.
• இராணுவ வன்முறையிலும் பெருமளவுக்கு பெண்களே இலக்கு வைக்க படுகிறார்கள்.
• பொது வெளியிலும் குடும்பத்திலும் பெண்களின் சுய மரியாதை கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும்.
சட்டங்களில் எத்தகைய பாதுகாப்புக்கள் வழங்கப்பட்டிருந்தாலும் சமூக நடைமுறையில் பெருமளவுக்கு கண்டுகொள்ளப்படுவதில்லை.
எனவே பண்பாட்டு மறுமலர்ச்சி நோக்கிய செயற்பாடு அவசியம்.
வன்முறை-சுரண்டலற்ற சமுதாயம் காண்போம்!!!

(ஞானசக்தி ஸ்ரீதரன்)