புதுடெல்லி விமான நிலைய கூரை இடிந்ததில் மூவர் பலி

தலைநகர் புதுடெல்லியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை (27) இரவு முழுவதும் பெய்த தொடர் கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆங்காங்கே மழைநீர் தேங்கியதால் டெல்லி நகரம் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், சுரங்கப்பாதைகளில் தேங்கியுள்ள தண்ணீரில் வாகனங்கள் சிக்கியதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

கென்யாவில் ஆர்ப்பாட்டம்: 23 பேர் உயிரிழப்பு

கென்யாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில் சிக்கி இதுவரையில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். பெருந்திரளானோர் காயமடைந்துள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்த நாட்டு பாராளுமன்றத்திற்கு தீ வைத்து செங்கோலையும் எடுத்துச்சென்றுள்ளனர்.

சட்டத்தை இரத்து செய்த பெரு அரசு

திருநங்கைகளை மனநல கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் என பட்டியிலிடுவதை நிறுத்துவதாக பெரு நாட்டின் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

அகதிகளது எதிர்காலம்

அண்மையில் சோமாலியா மற்றும் எத்தியோப்பியாவில் இருந்து சுமார் 260 அகதிகளை ஏற்றிக் கொண்டு ஏடன் வளைகுடா வழியாக சென்ற படகொன்று  ஏமன் கடற்கரை அருகே  கவிழ்ந்ததில் சுமார் 49 பேர் பரிதாபகரமாக உயிரிழந்ததாகவும், ஏனையோர் பாதுகாக்கப்பட்டதாகவும் , அதுபோல இம்மாதம் 17ஆம் திகதி தெற்கு இத்தாலியில் மத்தியதரைக் கடல் பகுதியில் பயணித்த இரண்டு படகுகள்  கவிழ்ந்ததால் அதில் பயணித்த அகதிகளில் 11பேர் உயிரிழந்தும், 64 பேர் காணாமல் போனதாகவும் பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகள்  மனதை நெருடுகின்றது.

பேருந்து கட்டணம் குறைகின்றது

ஜூலை 1ஆம் திகதி முதல் பேருந்து கட்டணத்தை 5 சதவீதம் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 2 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில், புதிய குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 28 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது. 

பாடசாலை மாணவர்கள் 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி

மடு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் தரம் 4 ஐச் சேர்ந்த மாணவர்கள் 8 பேர் திடீர் சுகயீனம் காரணமாக நேற்று(28) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் சிவப்பு அறிவிப்பு

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அரபிக்கடற்பரப்பு மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிவப்பு அறிவித்தல் ஒன்றை விடுத்து வளிமண்டலவியல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

ஹிருணிக்காவுக்கு 3 ஆண்டுகள் சிறை

கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மூன்று வருட சிறைத்தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது. டிஃபென்டர் மூலம் இளைஞரை கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நிலையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதி தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாமை ’ஆபத்தாக மாறலாம்’

தேர்தலை ஒத்தி வைத்து பதவிக்காலத்தை நீடிப்பதற்கு ஜனாதிபதி முயற்சிப்பதாக கூறப்படும் நிலையில், பாலியல் சமத்துவம் தொடர்பான சட்டமூலம் குறித்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளாமை எதிர்காலத்தில் ஆபத்தானதாக மாறலாம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மக்கா வீதிகளில் பரவிக் கிடக்கும் சடலங்களால் பரபரப்பு

இஸ்லாமிய மக்கள் தங்கள் வாழ்வியல் கடமைகளில் முக்கியமானதாக கருதப்படும் புனித ஹஜ் யாத்திரைக்காக ஆண்டுதோறும் மத்திய கிழக்கு நாடான சவூதி அரேபியாவில் உள்ள மக்கா மற்றும் மதினா செல்வது வழக்கம். இந்தாண்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த பலர் ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளனர்.