அபிவிருத்தியை அரசியலும் அரசியலை உரிமையும் நகர்த்த வேண்டும்’

(அதிரதன்)

தமிழர் விடுதலைக் கூட்டணி, மாற்று அரசியலை முன்வைக்கிறது. தமிழர் விடுதலைக் கூட்டணி தகுந்தவர்களை, தகுதியுள்ளவர்களை இந்தத் தேர்தலில் போட்டியிட வைத்திருக்கிறது. எந்த அணியுடனும் போட்டியிடும் வல்லமை, எமது அணிக்கு இருக்கின்றது. நிச்சயமாக, ஓர் ஆசனத்தை மட்டக்களப்பில் கைப்பற்றும் என, மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் முன்னேற்றக் கட்சி சார்பில், தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் அருண் தம்பிமுத்து தெரிவித்தார்.