அரசியலுக்குள் பெண்கள் புகுவதை ஆணாதிக்கமே முடக்குகிறது’

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மட்டுமல்ல, மற்றுமுள்ள பல கட்சிகளும் பெண்களை அரசியலில் முன்னுக்குக் கொண்டுவருவதில் அக்கறை காட்டவில்லை. இது பெண்களின் பிழையல்ல. இது ஆணாதிக்கத்தின் ஒரு வடிவமேயாகும் என்று, நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் சார்பில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உதயசூரியன் சின்னம் இலக்கம் 6 இல் களமிறங்கியுள்ள கலாநிதி சந்திரகாந்தா மகேந்திரநாதன் தெரிவித்தார்.