அவுஸ்ட்விட்ச் 75: ஒடுக்கப்பட்டோரில் இருந்து ஒடுக்குவோராக…

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
வரலாற்றின் சில இருண்ட பக்கங்கள் பயங்கரமானவை, திகிலூட்டுபவை, அச்சத்தை விதைப்பவை. அந்தப் பக்கங்கள், அரிய பல பாடங்களை எமக்குச் சொல்லிச் சென்றுள்ளன. தேசியவாதம், தேசியவெறியாக மாறுகின்ற போது, நிகழக்கூடிய ஆபத்துகளையும் இனவெறி ஏற்படுத்தக்கூடிய விபரீதங்களையும் காட்டும் குறிகாட்டிகள் வரலாறெங்கும் உண்டு. அவற்றை, இன்று நாம் நினைவுகூரும் போது, அந்த இருண்ட பக்கங்களுக்கு இட்டுச் சென்ற காரணிகளையும் கவனமாய் மனத்தில் இருத்துதல் வேண்டும்.