ஆசியாவை முன்னிலைப்படுத்தல்: பழைய போத்தலில் புதிய கள்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

சில நாள்களுக்கு முன்பு, அமெரிக்கா வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்களில் ஒருவர் தனது டுவிட்டரில் பின்வருமாறுகுறிப்பிட்டிருந்தார்; ‘21ஆம் நூற்றாண்டின் வரலாற்றின் பெரும்பகுதி, ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் தான் எழுதப்படும்’. இக்கூற்று மிகவும் முக்கியமானது.