ஆள்வதற்கான விருப்பமும் மகிழ்வதற்கான விருப்பமும்

(காரை துர்க்கா)
நாட்டின் சமகால நெருக்கடிகளுக்கு மத்தியிலும் முல்லைத்தீவு, வற்றாப்பளை அம்மனைத் தரிசித்தால் எமது நெருக்கடிகள் தீரும் என்ற அளப்பரிய நம்பிக்கையுடன், அம்பாளின் வைகாசிப் பொங்கலுக்கு (மே20) சென்றிருந்தோம். அன்னையிடம் மக்கள் தங்களது ஆற்றொனாத் துன்பங்களைக் கொட்டிக் கதறி வழிபட்டனர். மனதில் அடக்கி வைத்திருக்கும் ஆதங்கங்களை, ஆற்றாமைகளை இவ்வாறாகக் கொட்டுவது ஒருவித உளவியல் ஆற்றுப்படுத்தல் ஆகும்.