இந்தியா வரும் முன்னே, அமெரிக்கா வரும் பின்னே

அந்நியத் தலையீடு பற்றிய நம்பிக்கைகள், ஈழத்தமிழர் அரசியலில் தவிர்க்கவியலாத பங்கு எனுமளவுக்குச் செல்வாக்குச் செலுத்தி வருகிறது. எந்த அந்நிய நாடுகள் மீது நம்பிக்கை விதைக்கப்பட்டதோ, அவையே போருக்கான ஆயுதங்களையும் வழங்கின என்ற உண்மை மறைக்கப்படுகிறது; மறக்கப்படுகிறது. ஞாபகமறதி நிறைந்த சமூகம் தொடர்ந்தும் இன்னலுறுவதற்கு விதிக்கப்பட்டது.