இந்திய இலங்கை ஒப்பந்தம்….ஆய்வுக்கணோட்டம் (Part 3)

இந்தியா விடுதலைப் புலிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மற்றைய விடுதலை இயக்கங்களைச் விடுதலைப்புலிகளுடன் சரிசமமாக நடாத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இது தொடர்பாக அரசியல் ஆய்வாளர்கள் சிலரது கருத்து முக்கியமானதாகும். அதில், இந்திய தனது பிராந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்த முயல்வது என்ற விடயத்தில் இராணுவ அடிப்படையில் இந்தியா அறிவுறித்தியபடியெல்லாம் புலிகள் நடந்து கொண்டனர் என்பது தான். இராணுவரீதியில் இலங்கை மீது அழுத்தத்தை கொடுப்பதற்காக இராணுவ இலக்குகள் மீது மட்டுமல்லாது சிங்கள மக்கள் இலக்குகள் மீதான தாக்குதல்களை நடாத்தும் படியும் இந்தியா வலியுறுத்தியது. இதன் அடிப்படையிலேயே அனுராதபுரத்தில் சிங்கள கிராம மக்கள் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடாத்தி பல சிங்கள மக்களை படுகொலை செய்தனர். இந்தியா அறிவுறுத்தியபடி எல்லாம் விடுதலைபுலிகள் தாக்குதல்களை மேற்கொண்டு இலங்கை அரசுக்கு நெருக்கடிகளைக் கொடுத்தனர்.

இந்தியாவின் பிராந்தியப்பாதுகாப்பு என்ற விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு திறமை வாய்ந்த இராணுவ சக்தியாகவும், தாம் சொல்வதை உடன் நிறைவேற்றும் அமைப்பாக விடுதலைப்புலிகள் அமைப்பு இருந்த காரணத்தாலேயே இந்திய அரசு இடைக்கால நிர்வாகத்தில் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயற்பட்டது என்பது அவ் ஆய்வாளர்களின் கருத்தாகும். மறுபுறம் EPRLF, PLOT, EROS போன்ற விடுதலை இயக்கங்கள் இடதுசாரி சிந்தனைகளை பெருமளவில் கொண்டிருந்த காரணத்தால் இராணுவத் தாக்குதல்களை விட மக்கள் போராட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்துச் செயற்பட்டமையாலும் இந்தியாவின் கட்டளைகளுக்கும் அறிவுறுத்தல்களுக்கும் கீழ்படிந்து செயற்படவில்லை. ஆனால் இந்திய- இலங்கை ஒப்பந்தம் வரை இந்தியாவுக்கு ஆதரவாக இருந்து வந்த விடுதலைப்புலிகள் இந்தியாவுக்கு எதிராக மாறுவார்கள் என்பதை இந்தியா அப்போது நினைத்துப் பார்க்கவில்லை. இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நீர்த்துப்போகச் செய்வதற்கு விரும்பிய அமெரிக்காவும், மேற்கு நாடுகளும் தான் புலிகளுக்கு இந்தியாவை எதிர்ப்பதற்கான தைரியத்தை வழங்கினார்கள் என்பதும் அவ் ஆய்வாளர்களின் கருத்தாகும். இது உண்மை என்பதற்கு பி.பி.சி யின் கடந்த கால தற்கால நடவடிக்கைகள் சான்றாகும். இந்திய இலங்கை ஒப்பந்த காலத்திலும், பின்னர் இந்திய அமைதிப்படையுடன் விடுதலைப்புலிகள் யுத்தம் புரியும் காலகட்டத்திலும், பி.பி.சியின் செய்திகளும், பேட்டிகளும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவானதாகவும், இந்தியாவுக்கு எதிரானதாகவுமே இருந்து வந்திருக்கின்றது. ஆனால் தற்போது செப்டெம்பர் 11 தாக்குதலுக்குப் பின்பு, இலங்கைப் பிரச்சனையில் மேற்குலகநாடுகளும் அமெரிக்காவும் முக்கிய பாத்திரத்தை வகிக்க ஆரம்பித்த பின்னர் பி.பி.சியின் அணுகுமுறை விடுதலைப்புலிகளின் தவறுகளை அம்பலப்படுத்துவதிலும், மக்கள் மத்தியில் இருந்து அவர்களை அன்னியப்படுதும் வகையிலுமே அமைந்திருக்கின்றது. இலங்கைப்பிரச்சனை தொடர்பாக காலத்துக்கு காலம் மாற்றமடையும் மேற்குலக நாடுகளின் கொள்கைகளை பிரதிபலிக்கும் வகையிலேயே பி.பி.சியின் செயற்பாடும் அமைந்திருக்கின்றது.
இந்தியஅமைதிப்படை இலங்கை வந்தபின்பும் இந்திய அரசின் ஆதரவுடன் செயற்பட்டு வந்த விடுதலைப்புலிகளுக்கும் இந்திய அரசுக்குமான முதல் விரிசல் இடைக்கால நிர்வாகம் தொடர்பான பிரச்சனையில் தான் உருவாகியது. இதுவும் மேற்கத்தைய நாடுகளின் ஆசீர்வாதத்துடன்தான் உருவாக்கப்பட்டது என்பது அரசியல் ஆய்வாளர்கள் பலரின் கருத்தாக இருக்கின்றது.
இடைக்கால முதலமைச்சர் பதவிக்காக விடுதலைப்புலிகள் சமர்பித்த மூன்று பேர் கொண்ட பட்டியலில் இருந்து யாழ். மாநகரசபை முன்னாள் ஆணையாளர் சிவஞானத்தை வடகிழக்கு மாகாண இடைக்கால முதலமைச்சராக, இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனா தெரிவு செய்தார். ஆனால் விடுதலைப்புலிகள் இடைக்கால முதலமைச்சாராக சிவஞானத்திற்குப் பதிலாக, கிழக்குமாகாணத்தைச் சேர்ந்த பத்மநாதனை தெரிவு செய்யும்படி வலியுறித்தினர். ஆனால் அதற்கு அன்றைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனே சம்மதிக்கவிலை. விடுதலைபுலிகள் வழங்கிய பெயர் பட்டியலில் இருந்துதான் சிவஞானத்தின் பெயரை நான் தேர்வு செய்தேன் நானாக ஒருவரையும் புதிதாகச் சேர்க்கவில்லை என்பது ஜே.ஆர்ன் வாதமாக இருந்தது. ஜே.ஆர்.ஜெயவர்தனாவின் வாதத்தை இந்தியாவினால் புறக்கணிக்கமுடியவில்லை. விடுதலைப்புலகளின் இவ் முரண்பாடான செயல் மேற்கத்தையநாடுகளின் உந்துதலாலேயே ஏற்பட்டது என கூறப்பட்டது.
இடைக்கால முதலமைச்சர் தொடர்பான இழுபறி நிலைமை தொடர்ந்து கொண்டிருக்க, இன்னொருபுறம் மட்டக்களப்பில் மக்களை அணிதிரட்டுவதில் இறங்கிய PLOT இயக்கத் தலைவர்கள் வாசுதேவா போன்றவர்களையும், EPRLF போராளிகள் பலரையும் விடுதலைப்புலிகள் கண்ணிவெடித் தாக்குதல் மூலம் படுகொலை செய்தனர். இச் சம்பவங்களினால், ஒப்பந்தத்தின் பிரகாரம் ஆயுதங்களை அனைத்தையும் போராளிகள் தம்மிடம் ஒப்படைத்து விட்டார்கள் என்ற இந்தியாவின் அறிவிப்பு கேள்விக்குறியாகியதை அடுத்து இலங்கை அரசு விடுதலைப் புலிகளிடம் இருந்து ஆயுதங்களைக் முழுமையாகக் களையும்படி இந்திய அமைதிப்படைக்கும், இந்திய அரசுக்கும் நெருக்குதல்களைக் கொடுக்கத் தொடங்கியது.
இடைக்கால நிர்வாகத்தின் முதலமைச்சர் யார் என்ற விவகாரமும், விடுதலைப்புலிகளிடம் இருக்கும் ஆயுதங்கள் களையப்படவேண்டும் என்ற விவகாரமும் இந்திய அரசை சிக்கலுக்குள் கொண்டு சென்றது. அனைத்துப் போராளிகளும் தமது முழு ஆயுதங்களையும் ஒப்படைத்து விடடார்கள் என இந்தியா அறிவித்த நிலையி;ல், தற்போது விடுதலைபை;புலிகள் மற்றைய இயக்க உறுப்பினர்களை கொல்ல ஆயுதங்களை பயன்படுத்துவது பகீரங்கப்படுத்தப்பட்டமை இந்தியாவை ஒர் இக்கட்டான நிலைமைக்கு இட்டுச் சென்றது.
இடைக்கால முதலமைச்சரை மாற்றி அமைக்கவேண்டும் என்பதை பிரதான கோரிக்கையாக வைத்து உண்ணாவிரதம் இருந்த விடுதலைப் புலி இயக்க உறுப்பினர் திலீபன் அக்கோரிக்கை நிறைவேறாமலே உயிர்துறந்து தியாகியானார். சம காலத்தில் பாக்குநீரிணையில் ஆயுதக் கடத்தல் செய்ததாக இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட விடுதலைப்புலித் தலைவர்களான குமரப்பா, புலேந்திரன் போன்றோரை கொழும்புக்கு கொண்டு செல்வதற்கு அன்றை தேசியபாதுகாப்பு அமைச்சர் லலித்அத்துலத் முதலி தீவிர முயர்சிகள் செய்தார். கைது செய்யப்பட்ட விடுதலைப்புலி உறுபினர்களை விடுதலை செய்வதற்காக இந்திய அரசு ராஜதந்திரரீதியில் கடும்முயர்சிகளை மேற்கொண்டது. இந்தியாவின் முயர்சிகளை மீறி இலங்கை செயற்படுமாயின் இ;ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கும் தயாரான நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் வைக்கப்பட்டிருந்த, பலாலி இரணுவ முகாமை சுற்றி இந்திய அமைதிப்படை வீரர்கள் சுற்றிவளைத்து நின்றனர். ஆனால் இது தொடர்பாக பேச்சுவார்;தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் கைது செய்யப்பட்ட விடுதலை புலி உறுப்பினர்கள் மர்மமான முறையில் சயனைட் அருந்தித் தற்கொலை செய்து கொண்டனர். கைது செய்யப்பட்ட நிலையில் இருந்து அவர்களுக்கு எப்படிச் சயனைட் வில்லைகள் கிடைத்தன என்பது பலருக்கும் புரியா புதிராகவே அன்று இருந்தது. ஆனால் அண்மையில் விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் ஆனந்தவிகடன் இதழுக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் பிரபாகரனின் கட்டளைப்படி தானும், மாத்தையாவுமே, கைது செய்யப்பட்ட குமரப்பா, புலேந்திரன் ஆகியோரை பார்வையிட இராணுவமுகாமுக்கு சென்று அவர்களுக்கு சயனைட் மாத்திரைகளை கொடுத்ததாக தெரிவித்துள்ளார். இதில் இருந்து இந்தியஅமைதிப்படையுடனான யுத்தம் ஒன்று ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதை விடுதலைப்புலிகள் விரும்பி வலிந்து ஏற்படுத்தியதாகவே கருதவேண்டியுள்ளது.
இவ் விடுதலைப்புலி உறுப்பினர்களின் மரணத்தைத் தொடர்ந்து இந்திய அமைதிப்படைக் எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் தமது உக்கிரமான யுத்தத்தை ஆரம்பித்தனர். 1987 ம் ஆண்டு ஓக்டோபர் மாதம் 10ம் திகதி இவ் யுத்தம் ஆரம்பமாகியது. இரண்டு மாதகால அமைதிக்குப் பின்னர் யாழ்பாணத்தில் மீண்டும் யுத்தம் வெடித்தது. 2வருட காலம் நடைபெற்ற இவ் யுத்தத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். அப்பாவித் தமிழ்மக்கள் பலரும், போராளிகள் பலரும் கொல்லப்பட்டனர். கோடிக்கணக்கான பொதுமக்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டன.
இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் வல்லரசாக விளங்கும் இந்தியாவுடன் இராணுவரீதியில் சமர்புரிவது என்பது பாரிய மக்கள் இழப்புக்களை ஏற்படுத்தும் என்பதும் இந்தியாவின் நட்பை இழந்து கொள்வது-இலங்கைத் தமிழ்மக்களுக்கு பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என்பதும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அறியாததல்ல. இருந்தும் அப்படிப்பட்ட ஓர் முடிவை பிரபாகரன் ஏன் எடுத்தார் என்பது தொடர்பாக பல கருத்துக்கள் இருக்கின்து. அதில் முக்கியமானது தமிழீழம் என்பதில் பிரபாகரனுக்கு உள்ள உறுதியான நம்பிகை என்பதுடன், இந்தியா எப்போதும் தமிழீழத்தை அங்கீகரிக்கப்போவது இல்லை. தனது இலட்சியத்தை அடைவதில் எப்போதோ ஒருநாள் இந்தியாவுடன் தான் சமர்புரிந்தே ஆகவேண்டும் அதை இன்றே தான் நன்கறிந்த தனது மண்ணில் ஆரம்பிப்போம் என்ற பிரபாகரனின் முடிவாகும்.
மேலும் இந்தியாவின் நட்பை இழப்பதற்கு பதிலீடாக மேற்கத்தைய நாடுகளின் உதவி கிடைக்கும் என வழங்கப்பட்ட உத்தரவாதம் போன்றனவும் காரணம் என அரசியல் ஆய்வாளர்கள் சிலரின் கருத்தாக இருக்கின்றது. ஒப்பந்தம் கையெழுத்தான காலகட்டம் மற்றும் தொடர்சியாக நிகழ்ந்த சம்பவங்களை கோர்வையாக பார்க்;கும் போது அரசியல் ஆய்வாளர்களின் இக்கருத்து சரியானது என்ற எண்ணத்தையே கொடுக்கின்றது. ஏனெனில், இந்திய இலங்கை ஒப்பந்தத்தினை பற்றி விடுதலை இயக்கங்களுக்கு எடுத்தியம்புவதற்காக விடுதலை இயக்கத் தலைவர்கள் அனைவரையும் இந்திய அரசாங்கம் டில்லிக்கு அழைத்த போது, விடுதலைப்புலிகள் தவிர்ந்த மற்றைய இயக்கங்களின் தலைவர்கள் தமிழகத்தில் இருந்தே டில்லி சென்றனர். ஆனால் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்போது யாழ்பாணத்தில் இருந்தார். அவரை அழைத்து வருவதற்காக இந்திய விமானப்படையின் ஹெலிகொப்டர் யாழ்பாணத்துக்குச் சென்று சுதுமலை அம்மன் கோவிலில் இருந்து பிரபாகரனை டில்லிக்கு அழைத்துச் சென்றது. இந்தியாவின் உறவு தேவைற்றது என்றும், தான் அங்கு சென்றால் தன்னை இந்தியா மிரட்டும் என பிரபாகரன் நினைத்திருந்தால் தன்னால் இந்தியா வரமுடியாது, ஒப்பந்தத்தின் ஷரத்துக்களை யாழ்பாணத்திலேயே எனக்கு விளங்கப்படுத்துங்கள், அது எமது மக்களுக்கு ஏற்புடையதாயின் டில்லி வருகின்றேன் என பிரபாகரன் மறுத்திருக்கமுடியும். யாழ்பாணத்தில் இருந்து பிரபாகரன் அவ்வாறு செய்திருந்தால் இந்திய அரசாங்கத்தினால் எதுவும் செய்யமுடியாதும் போயிருக்கும். ஆனால் அவர் அப்போது அவ்வாறு செய்யவில்லை. இதில் இருந்து இந்தியாவின் நட்பை தொடர்ந்து பேணவேண்டும் என்ற நிலைப்பாட்டையே அப்N;பாது பிரபாகரன் கொண்டிருந்தார் என்பதை உய்துணரமுடிகின்றது.
தொடர்சி நாளை……….

யோகா வளவன் தியா