இந்த அழிவுகளுக்கும் முள்ளிவாய்க்கால் பேரழிவுகளுக்கும் தொடர்பிருக்கின்றது

(சிறீதரன் திருநாவுக்கரசு)

இந்த இருண்ட நாட்களில் தான் ஈபிஆர்எல்எப் பின் தோழர்கள் ஆண்களும் பெண்களுமாக கூட்டம் கூட்டமாக உடல் மீதியின்றி அழிக்கப்பட்டார்கள். பலர் வதைமுகம்களில் கொல்லப்பட்டார்கள். பேரினவாத பாசிசத்தால் அல்ல. யாழ்மையவாத தமிழ் பாசிசத்தால்.
கடந்த 30 வருடங்களில் இத்தகைய படுகொலைகளில் காணமல் போக்கடிக்கபட்டவர்கள் கொல்லப்பட்டவர்கள் பல்லாயிரம் பேர் மனித உரிமை பேசும் மாய்மாலக்காரர்கள் பலர் இது பற்றி மூச்சுவிடுவதில்லை. இதனை கள்ள மௌனத்துடன் கடந்து போகிறார்கள். தமிழ் சமூகத்திற்கு மனித உரிமை ஜனநாயகம் பற்றி பேசுவதற்கான யோக்கியம் பற்றிய கேள்வி எழுகிறது.

இந்த அழிவுகளுக்கும் முள்ளிவாய்க்கால் பேரழிவுகளுக்கும் இயக்கவியல் தொடர்பிருக்கிறது. வரலாற்று பிரக்ஞையுடன் நியாய உணர்வுடன் நெஞ்சில் ஈரத்துடன் சிந்தித்தால் இந்த சமூகத்திற்கு என்ன நேர்ந்தது என்று புரியும். படுகொலை செய்யப்பட்டவர்கள் 1980களின் முற்பகுதியில் தமது வீடுவாசல்களை துறந்துஉற்றசுற்றத்தை துறந்து ஒரு சமூக உந்துதலில் போராடவந்தவர்கள். தமிழ் சமூகத்தில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள். நிலவும் தீண்டாமை வக்கிரத்தின் நவீன வடிவமே இது.  இந்த தீண்டாமை வக்கிரம் இன்றளவில் நீடித்து நிலவுகிறது. இது தமிழ் மனங்களில் நிர்மூலம் செய்யப்படாதவரை எந்த விமோசனமும் கிடையாது.