இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல்

(Subamangala Saththiyamoorthy)

இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பி. கட்சிக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் தவறானதும், பயனற்றதும் என்பதை வாக்காளர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
தவறானது என்று சொல்வதற்குக் காரணம், அந்த இயக்கம் இலங்கை மக்கள் அனுபவித்து வரும் ஜனநாயக அரசியல் அமைப்புமுறையை (முதலாளித்துவ ஜனநாயகமாக இருப்பினும் கூட) அழித்தொழிப்பதற்கு இரண்டு தடவைகள் ஆயுதக் கிளர்ச்சி செய்த பயங்கரவாத இயக்கமாகும்.