இலங்கை குண்டு வெடிப்பும் அதன் தொடர்ச்சியும்

(சாகரன்)

யேசு உதிர் எழுந்தார் என்று நம்பப்படும் ஈஸ்ரர் ஞாயிறு அன்று இலங்கையில் 9 இடங்களில் கத்தோலிக்க தேவாலயம் உல்லாசப் பயணிகள் தங்கும் இடம் உல்லாசப்பயணிகள் அதிகம் பார்வையிடும் இடங்களில் குண்டுகள் வெடிக்கப்பட்டுள்ளன. கொழும்பு நீர்கொழும்பு மட்டக்களப்பு என மக்கள் அதிகம் கூடுவார்கள் என்று எதிர்பார்கப்பட்ட இடங்களில் நேரங்களில் இந்த பலமிக்க குண்டுகள் வெடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. இதுவரை இரு நூறுக்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்ததாகவும் ஐநூறிற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாகவும் அறிய முடிகின்றது. பாதிக்கப்பட்டவர்களில் வெளிநாட்டவரும் அடங்குவர். சந்தேகத்தின் பெயரில் ஏழு பேர் கைது செய்யப்பட்டதான செய்திகளும் வருகின்றன.