இல‌ங்கையிலும் கிரேக்க‌ பாணியிலான‌ பொருளாதார‌ நெருக்க‌டி ஏற்ப‌ட்டுள்ள‌து.

இல‌ங்கையிலும் கிரேக்க‌ பாணியிலான‌ பொருளாதார‌ நெருக்க‌டி ஏற்ப‌ட்டுள்ள‌து. ஒரு நாட்டின் மொத்த‌ பொருளாதார‌ உற்ப‌த்தி (GDP) மொத்த‌ க‌ட‌ன்க‌ளை விட‌ குறைவாக‌ இருந்தால், பொருளாதார‌ தேக்க‌ம் உண்டாகும். இதுவே கிரேக்க‌ நாட்டிலும் ந‌ட‌ந்த‌து. இல‌ங்கையின் த‌ற்போதைய‌ நில‌வ‌ர‌ப் ப‌டி GDP தொகை: US$ 75 பில்லிய‌ன் டாலர். ஆனால், மொத்த‌ க‌ட‌ன் தொகை $81 பில்லிய‌ன் டால‌ர். அதாவது உற்ப‌த்தியை விட‌ க‌ட‌ன் அதிக‌ம். அத‌னால், அர‌சின் வ‌ருமான‌த்தின் 94% க‌ட‌னைக் க‌ட்டுவ‌த‌ற்கே செல‌விட‌ப் ப‌டுகின்ற‌து.

க‌ட‌ந்த 10 வ‌ருட‌ கால‌மாக‌, பெரும‌ள‌வு க‌ட்டுமான‌த் துறையில் முத‌லீட்டை செய்து வ‌ந்த‌ சீனா, த‌ன‌து க‌ட‌ன் முழுவ‌தையும் திருப்பிக் க‌ட்டுமாறு நெருக்குகின்ற‌து. இத‌னால் இல‌ங்கை அர‌சு IMF இட‌ம் க‌ட‌ன் வாங்கி அந்நிய‌ க‌ட‌ன்க‌ளை க‌ட்ட‌ முய‌ற்சிக்கிற‌து. இதையே தான் கிரீஸ் செய்த‌து.

நேற்று கிரேக்க‌ நாட்டில் என்ன‌ ந‌ட‌ந்த‌தோ, அதுவே நாளைக்கு இல‌ங்கையிலும் ந‌ட‌க்கும். பொருளாதார விட‌ய‌ங்க‌ளில் அக்க‌றைய‌ற்று தூங்கிக் கொண்டிருக்கும் ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ளே, இனியாவ‌து விழித்தெழுங்க‌ள். பேரின‌வாத‌ அர‌சு போர்த்தியுள்ள‌ (த‌மிழ்) தேசிய‌ம் எனும் போர்வையை க‌ழ‌ற்றி வீசுங்க‌ள். ஒரு ச‌மூக‌ப் புர‌ட்சிக்கு த‌யாராகுங்க‌ள்.

(Kalai Marx)