இஸ்லாமியரே, உங்க‌ள் தெய்வத்தைத் தெரியாது; உங்களைத் தெரிந்துகொண்டோம்!

 

உதவுவாரில் எங்கே பார்த்தாலும்…
குல்லாக்கள்… SDPI, TNTJ, TMMK
பாதிக்கப்பட்டோரில் யாரைக் கேட்டாலும்…
“பாய்கள்”, “முஸ்லீம்காரவங்க வந்து காப்பாத்துனாங்க”,
“சாய்புகள்தான் சாப்பாடு போட்டுகிட்டிருக்காங்க”.
‘தொடக்கி விட்டுவிட்டார்கள்’ என்றில்லை;
‘இடையில்தான் வந்தார்கள்’ என்றில்லை;
‘திணறி நின்றார்கள்’ என்றில்லை;
‘சோர்ந்து விலகிவிட்டார்கள்’ என்றில்லை!
தங்கள் மனிதத்தை தங்கள் கடவுளுக்கும்,
தங்கள் ஆண்மையை தங்கள் எதிரிகளுக்கும், தங்களுக்கும் உணர்த்திக்கொண்டஇவர்களது அதிரவைக்கும் அற்பணிப்பு!
உடல்நலம், வீடு மறந்து – ஒருவார ஓட்டத்திற்குப் பின்னும்
முகத்தில் அயர்ச்சியில்லை! பேச்சில் கடுப்பில்லை!
இன்னும் ஓயந்ததாயில்லை… – இன்னும்
பெரிதாக அரவணைக்கிற திட்டங்களோடு!
இது போன்ற பேரிடரில் மக்களுக்காக
மக்கள் மத்தியில் திட்டமிட்டே கடவுள்
வைத்துவைத்த இரக்கத்தின் விதைகளின்
விஸ்வரூபங்களாக தெரிகின்றனர்!
இஸ்லாமியரே, உங்க‌ள் தெய்வத்தைத் தெரியாது;
உங்களைத் தெரிந்துகொண்டோம்!
உள்குத்து இல்லாத ஒரு பெரிய நன்றி…
உங்களுக்கும் – உங்களை
இப்படி அனுப்பிய உங்கள் கடவுளுக்கும்!

(REALATIVES உறவுகள்)